Sunday, April 21, 2019

அதிமுக பிஜேபி கூட்டணிக்கே வெற்றி-

பிரபல தேர்தல் பண்டிதர்கள்எல்லாம் தமிழகத்தி ல் பிஜேபிக்கு 18 தொகுதிகளை உறுதி செய்து வருகிறார்கள்.அதாவது அதிமுக கூட்டணிக்கும்
திமுக கூட்டணிக்கும் சரிபாதி அளவில் வெற்றி கிடைக்கும் என்கிறார்கள்.
.
அதிமுக கூட்டணிக்கு குறைந்த பட்சமாக 15 தொகுதிகளை அனைத்து poll pundit களும்
உறுதி செய்கிறார்கள். அதே மாதிரி அதிமுக
கூட்டணிக்கு அதிகபட்சமாக 30 தொகுதிகளுக்கு
மேல் கிடைக்காது என்கிறார்கள். உண்மையிலே யே இது தான் நடைபெற இருக்கிறது.
இருந்தாலும் என்னை மாதிரி ஆர்வ கோளாறு கள் எல்லாம்பிஜேபிக்கு 25-30 தொகுதிகள் கிடைக்கலாம்என்று நினைத்து வருகிறார்கள்.
இது 2009 லோக்சபா தேர்தலில் அப்போதைய
ஆளும் கட்சியாக இருந்த திமுக கூட்டணி க்கு
கிடைத்த வெற்றியாகும்.
தமிழ்நாட்டில் கடந்த 2014 லோக்சபா தேர்தலில் 73.67 வாக்குகள் பதிவாகி இருந்தது.அந்த தேர்த லில் தமிழகத்தில் ஆட்சியில் இருந்த அதிமுகக்கு எதிராக எந்தஒரு மன நிலையும் மக்களிடம்
இல்லை. மாறாக மக்களிடம் ஜெயலலிதா பிரதம
ராவார் என்று தூண்டப்பட்ட ஒரு கோசத்துக்கு
ஆதரவாக மக்களிடம் ஆதரவு இருந்தது.
ஆனால் இப்பொழுது நடைபெற்ற தேர்தலில்
2009 லோக்சபா தேர்தலில் ஆளும் கட்சிக்கு எதிராக மக்களிடம் என்ன மனநிலையே இருந்த
து அதனால் 2009 லோக்சபா தேர்தலை முன் வைத்தே இந்த தேர்தலையும் ஒப்பிட்டு பார்க்க வே தோன்றுகிறது.கடந்த 2009 லோக்சபா தேர்த லில் 72.98 சதவீதஅளவில் வாக்குகள் பதிவாகி இருந்தது.
.
இப்பொழுது 70.90 சதவீத வாக்குகள் பதிவாகி
இருக்கிறது. இது கடந்த லோக்சபா தேர்தலில்
பதிவாகி இருந்த 73.67 சதவீதத்தை விட குறைவு
என்பதால் கிட்டத்தட்ட 2009 லோக்சபா தேர்தல் மாதிரியே இப்பொழுதும் வாக்குகள் பதிவாகி இருக்கிறது.
.
ஆளும் கட்சிக்கு எதிராக ஆன்ட்டி இன்கம்பன்சி
என்கிற ஆட்சியில் இருப்பவர்களுக்கு எதிராக
இருக்கும் எதிர்ப்புகளை மீறி அன்றைய திமுக
காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற என்ன செய்த தோ அதையேதான் இப்போதைய ஆளும் அதிமு க பிஜேபி்கூட்டணி செய்துள்ளது..
2009 லோக்சபா தேர்தலில் இருந்த திமுக காங்கி ரஸ் கூட்டணியைவிட இப்பொழுது இருந்த அதி முக கூட்டணி்மிகவலிமையானது.அப்போதைய திமுக கூட்டணியில் திமுக காங்கிரஸ் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் இருந்தன.
ஆனால் அதிமுக கூட்டணியில் அதிமுக பாமக
மதிமுக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவை இருந்தது.
கூட்டணி அடிப்படையில் அதிமுக கூட்டணி தான்
வலிமையான து .அதோடு ஆளும் கட்சிக்கு எதிர்
ரான ஆன்ட்டி இன்கம்பன்சி எல்லாம் ்சேரந்து
அதிமுக கூட்டணி தான் வெற்றி பெறும் என்பதே
உண்மையான நிலைமையாகும். ஆனால் திமுக
கூட்டணி எப்படி வெற்றி பெற்றது என்று ஙிடைற
தேடினால் அதற்கு முதலில் விஜயகாந்த் தான்
இருப்பார்.
கடந்த 2009 லோக்சபா தேர்தலில் விஜயகாந்த்
பெற்ற 10.3 சதவீத வாக்குகள் தான் அதிமுக
கூட்டணி யின் வெற்றியை காலி செய்தது. விஜய காந்த் ஆளும் கட்சிக்கு எதிராக இருந்த மக்களின்
மனநிலை வாக்குகளாக மாறும் ்பொழுது அதை
முழுமையாக அதிமுகவுக்கு செல்லாமல் பிரித்து
கொண்டதால் தான் திமுக கூட்டணி அப்பொழுது
வீசிய மிகப்பெரிய அளவிலான எதிர்ப்பு அலையி
லும் வெற்றி பெற்றது.
அதே மாதிரி தான் இப்பொழுதும் இருக்கிறது.
விஜயகாந்த் இருந்த இடத்தி்ல் கமல் இருக்கிறார்.
2009 ல் வாக்களிக்க வந்த புது வாக்காளர் களின் முதல் தேர்வு விஜயகாந்த் தான் இருந்தார்.அதே
மாதிரி இப்பொழுது கமல் இருக்கிறார்.
ஆனால் ஒரே ஒரு வித்தியாசம் கமல் 2009 ல்
விஜயகாந்த் பெற்ற 10.3 சதவீத வாக்குகள் மாதிரி இப்பொழுதும் பெற முடியுமா? என்பது
தான் இப்போதைய கேள்வி.கமலால் நிச்சயமாக
10 சதவீத வாக்குகளை பெற முடியாமல் போன
லும் குறைந்தது 5 சதவீத வாக்குகளை பெற
முடியும். நாம் தமிழர் கட்சி ஒரு 3 சதவீத வாக்கு
களை பெற வாய்ப்பு ள்ளது.
அடுத்து தினகரன் அதிகபட்சமாக 5 சதவீத
வாக்குகளை பிரிப்பார் என்று வைத்துக்கொண்
டாலும் அதிலும் அதிகமாக 3 சதவீத வாக்குகள்
திமுக கூட்டணிக்கு செல்லக் கூடிய வாக்குகளை
தான் பிரிப்பார்.அதனால் இப்போதைய ஆளும்
கட்சி யான அதிமுகவுக்கு எதிரான வாக்குகள்
குறைந்த து 10 சதவீதம் அளவில் திமுக கூட்டணி
க்கு செல்லாமல் பிரிகிறது.
ஒரு வேளை கமல் சீமான் தினகரன் என்று மூன்று பெரும் கூட்டணி வைத்து இருந்தால் அந்த
கூட்டணி ஒரு பெரிய அளவில் எதிர் பார்ப்பை
பெற்று இருக்கும். ஆனால் மூன்று பேருமே தனி
ஆவர்த்தனம் செய்பவர்கள் என்பதால் இது நடை
பெறவில்லை.
இப்பொழுது இந்த 3 பேரும் பிரிக்கும் வாக்குகள்
திமுக கூட்டணிக்கு செல்லக்கூடிய வாக்குகள்
என்கிற அளவில் தான் கணக்கில் க்கொண்டு
பார்க்க வேண்டும். அப்படி பார்த்தால் 2009 லோக்சபா தேர்தலில் ஆளும் கட்சிக்கு இருந்த
எதிர்ப்பு வாக்குகள் விஜயகாந்த்தால் பிரிக்கப்
பட்டது மாதிரியே 2019 தேர்தலிலும் நடை பெறும்
அதனால் கூட்டணி பலத்தினால் அதிமுக கூட்ட ணி திமுக கூட்டணியை விட குறைந்தது 2 சதவீத வாக்குகளில் இருந்து அதிகபட்சமாக 5 சதவீத வாக்குகளை அதிகமாக பெறுகிறது .அதிமுக
கூட்டணி திமுக கூட்டணியைவிட 2 சதவீத
வாக்குகளை அதிகமாக பெற்றாலே 20-25 தொகு திகளில் அதிமுக கூட்டணி வெற்றி பெற்று விடும்
அதிமுக கூட்டணி திமுக கூட்டணி யை விட 5 சத
வீத வாக்குகளை அதிகமாக பெற்று விட்டால்
அதிமுக கூட்டணி 25 -30 தொகுதிகளில் வெற்றி
பெறுகிறது. அதிமுக கூட்டணி திமுக கூட்டணி யை விட 5 சதவீத வாக்குகளுக்கு அதிகமாக
பெற்றால் அதிமுக கூட்டணி 30-35 தொகுதிகளில்
வெற்றி பெறுகிறது.
ஆனால் அதிமுக கூட்டணி க்கும் திமுக கூட்டணி க்கும் இடையில் 10 சதவீத அளவு வாக்குவித்தி யாசம் இருந்தாலும் அதிமுககூட்டணி அதிகபட்ச மாக 35 தொகுதிகளை தான்டாது என்பதை உறுதியாக கூற முடியும்.


அதிமுக கூட்டணி க்கு தான் வெற்றி என்பது
உறுதியான நிலையில் அதற்கு எத்தனை தொகு திகள் என்பதற்கு விடையாக 5 சதவீத வாக்குகள் வரை அதிமுக கூட்டணி திமுக கூட்டணி யைவிட அதிகம் பெற்று 25-30 தொகுதிகள் வரை நிச்சய மாக கைப்பற்ற முடியும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...