கொழும்பு சர்வதேச விமான நிலையம் அருகே சக்தி வாய்ந்த வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டு செயலிழக்கச் செய்யப்பட்டது.
இலங்கையில், 'ஈஸ்டர்' தினமான நேற்று, தேவாலயங்கள், நட்சத்திர ஓட்டல்கள் உட்பட, எட்டு இடங்களில் அடுத்தடுத்து நடந்த குண்டு வெடிப்புகளில், 225 பேர் உடல் சிதறி பலியாகினர். 500க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இச்சம்பவம் தொடர்பாக இதுவரை 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. நாடு முழுவதும், காலவரையற்ற ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இணையதள சேவை முற்றிலுமாக முடக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கொழும்பு பண்டார நாயக சர்வதேச விமான நிலையம் அருகே பதுக்கி வைக்கப்பட்ட சக்தி வாய்ந்த வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட வெடிகுண்டை செயலிழக்கச் செய்ததாக இலங்கை போலீசார் தெரிவித்துள்ளனர். வேறு வெடிகுண்டுகள் ஏதும் பதுக்கப்பட்டுள்ளதா என இலங்கை முழுவதும் உஷார் படுத்தப்பட்டு தீவிர சோதனை நடந்து வருகிறது.
No comments:
Post a Comment