Wednesday, October 30, 2019

மத்திய அமைச்சரவை விரைவில் மாற்றம் : தமிழகம் சார்பில் இடம் பிடிப்பது யார்?

மத்திய அமைச்சரவையில், அதிரடி மாற்றம் இருக்கும்; அதில், தமிழகத்துக்கும் இடமிருக்கும் என்ற தகவல் கசிவதால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது.கடந்த, மே மாதத்தில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு, இரண்டாம் முறையாக பதவியேற்ற பின், ஒரு பார்லிமென்ட் கூட்டத்தொடரை மட்டுமே சந்தித்தது.

இந்நிலையில், நவம்பர், 18 ம் தேதி, குளிர்கால கூட்டத்தொடருக்காக, பார்லி., மீண்டும் கூடுகிறது.

வாழ்த்து


அதற்கு முன், மத்திய அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் எனத் தெரிகிறது. கடந்த, 27ல், பிரதமர் மோடி, ஜனாதிபதி ராம்நாத்கோவிந்தை சந்தித்து தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்தார். 'இது, வாழ்த்துகள் கூறுவதற்காக மட்டுமே நடைபெற்ற சந்திப்பு அல்ல; அமைச்சரவை மாற்றத்திற்காக தகவல்களை பரிமாறிக் கொள்ள நடந்த சந்திப்பு' என, அரசு வட்டாரங்கள் கூறுகின்றன.

அந்த வகையில், நாட்டில் நிலவி வரும் பொருளாதார சூழ்நிலை, டில்லி மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களில் நடைபெறவுள்ள சட்டசபை தேர்தல்களை மையமாக வைத்து, மத்திய அமைச்சரவை மாற்றம் செய்யப்படலாம் எனத் தெரிகிறது.


மாற்றம்


தற்போதைய பொருளாதார சூழலுடன் தொடர்புடைய நிதி, வர்த்தகம், தொழில், கார்ப்பரேட் நிறுவனங்கள், சிறு மற்றும் குறு தொழில்கள், திறன் மேம்பாடு ஆகிய துறைகள் தான், பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சரான அமித் ஷா ஆகியோரின் பார்வையில் இருக்கின்றன. இத்துறைகளில் மாற்றம் இருக்கலாம்.

அடுத்த ஆண்டு துவக்கத்தில் நடைபெறஉள்ள, டில்லி மாநில சட்டசபை தேர்தலையும், பா.ஜ., தலைமை கவனத்தில் கொள்வதால், சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்த்தன், அமைச்சரவையிலிருந்து விடுவிக்கப்படுகிறார்.டில்லியில், ஆம் ஆத்மி கட்சி வலுவாகி வரும் நிலையில், ஹர்ஷ் வர்த்தனை, மாநில அரசியலுக்கு கொண்டுவந்து, டில்லி மாநில தலைவராகவோ அல்லது பா.ஜ.,வின் முதல்வர் வேட்பாளராகவோ அறிவிக்கும் திட்டம் உள்ளது.

நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சரான ஹர்தீப்சிங் பூரியிடம், தற்போது, நான்கு துறைகள் உள்ளன. இனி, அவர் ஒரு துறைக்கு மட்டும் அமைச்சராக தொடரலாம் அல்லது அமைச்சரவையிலிருந்து நீக்கப்படலாம் என, கூறப்படுகிறது.



காரணம்



சாலை போக்குவரத்து துறை அமைச்சர், வி.கே.சிங்கிற்கு, வேறு துறைகள் அளிக்கப்படலாம். மஹாராஷ்டிரா இழுபறிக்கு தீர்வு ஏற்பட்டால், சிவசேனா சார்பில் புதிய அமைச்சர் பதவியேற்கலாம்.தமிழகத்தைப் பொறுத்தவரை, இம்முறை கண்டிப்பாக பிரதிநிதித்துவம் இருக்கும். மாநிலம், 2021ல் சட்டசபை தேர்தலை சந்திக்கவிருப்பது தான் காரணம்.

அமைச்சர் பதவிக்கு, கொங்கு மண்டலத்தைச் சேர்ந்தவரின் பெயர் பரிசீலனையில் உள்ளது. இவர், தமிழக பா.ஜ.,வில் முக்கிய பதவிகளை வகித்து, ஏற்கனவே எம்.பி.,யாகவும் இருந்தவர். மத்திய அமைச்சரவையின் இந்த மாற்றம், அடுத்த வாரத்திற்குள் இருக்கலாம். தவறினால், குளிர்கால கூட்டத்தொடர் முடிவுக்கு வந்த பிறகு, புத்தாண்டு துவக்கத்தில் இருக்கும் என்றும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...