தமிழ்நாட்டில் அரசு மருத்துவர்களுக்கு தற்போது வழங்கப்படும் மொத்த மாத ஊதியம் பின்வருமாறு (சென்னையில் ஓய்வூதிய பங்களிப்பு உட்பட):
பணிக்காலத்தில் முதல் ஆண்டு – ரூ. 80,247
8வது ஆண்டு – ரூ.97,900
15வது ஆண்டு – ரூ.1,22,919
17வது ஆண்டு – ரூ.1,35,365
20வது ஆண்டு– ரூ.1,53,027..
ஒரு மருத்துவரை உருவாக்க சுமார் ரூ. 1.24 கோடியை அரசு செலவிடுகிறது.
ஆனால் தனியார் மருத்துவ கல்லூரியில் நீங்க சேர்ந்தால் மருத்துவ படிப்பிற்காக சுமார் ரூ. 1.05 கோடி ரூபாயை செலவிட வேண்டும்.
ஆனால் மெரிட்டில் சேரும் அரசுக் கல்லூரிகளில் அவர்கள் ஆண்டிற்கு ரூ. 13,600 வீதம் ஆக மொத்தம் ரூ.68,000 மட்டுமே செலவிட வேண்டும்.
மத்திய அரசு டாக்டர்களுக்கு இணையாக சம்பளம் வேண்டுமாம்...மத்திய அரசு டாக்டர்கள் பிரைவேட் பிராக்டீஸ் பண்ணமுடியாது .ஆனால் மாநில அரசு டாக்டர்கள் அரசு மருத்துவமனையில் பணி நேரம் போக மற்ற நேரத்தில் தனியார் மருத்துவமனையில் பிராக்டீஸ் பண்ணலாம்..அரசு தரும் சம்பளமும் வாங்கி கொண்டு தனியார் மருத்துவமனையில் சம்பளம் வாங்கி கொண்டு அவர்களுக்கு இணையாக சம்பளம் கேட்கிறார்கள்..
பிளஸ் டு ரிசல்ட் வந்தவுடன் ரேங்க் வாங்கிய யாரைக்கேட்டாலும் டாக்டராகி ஏழைகளுக்கு சேவை செய்யப்போகிறேன் என்கிறார்கள் . ஆனால் அரசு டாக்டரானவுடன் லட்ச ரூபாய் சம்பளம் போதவில்லை என்று ஸ்டிரைக் பண்ணுகிறார்கள் .என்ன உலகமடா?????
No comments:
Post a Comment