தீபாவளிக்கு முதல் நாளில் யம தீபம் ஏற்றுவது நம் மரபு. இந்த ஆண்டு அக்டோபர் 26-ந்தேதி சனிக்கிழமை மாலை 5.45 மணி முதல் 6.58 மணிக்குள் யம தீபம் ஏற்றலாம். நெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றி ஏற்றலாம். தெற்கு திசையை நோக்கி வைக்க வேண்டும். வீட்டு வாசலில் வைக்கலாம். திறந்த வெளியில் தான் யம தீபம் ஏற்றவேண்டும். யம தீபம் ஏற்றினால் குடும்பம் விருத்தியாகும். தொழில் முன்னேறும். திருமணத் தடைகள் விலகும்,சொத்துகள் சேரும். அனைத்து வித தடைகளும் நீங்கி, வாய்ப்புகள் தானாகவே வரும்.
முன்னோர் வழிபாடு
முன்னோர் வழிபாடு
யமன் சூரியனின் மகன். யமன் என்றதுமே எல்லோரும் அச்சப்படுவார்கள். அவர் இருக்கும் திசையான தெற்கு திசையை பார்த்தே பயப்படுவார்கள். ஆனால் அவர் எல்லோருக்கும் சமமானவர். அவருக்கு சிவபெருமான் கொடுத்த கடமை உயிரை எடுப்பது. அதில் அவர் எந்த பாரபட்சமும் பார்ப்பது இல்லை. அவருக்கு நன்றி சொன்னால் அவர் பாதுகாப்பில் இருக்கும் நமது முன்னோர்களை நன்றாக பார்த்துக்கொள்வார். மகாளய பட்ச காலத்தில் பூலோகத்துக்கு வரும் முன்னோர்களுக்கு திதி கொடுப்போம். அப்படி வந்த முன்னோர்கள் மீண்டும் திரும்பி செல்வதற்கு வெளிச்சம் காட்டுவது எம தீபம் மட்டுமே. இதனால் முன்னோர்கள் மட்டும் அல்லாமல் எமதர்மனும் மகிழ்ச்சி அடைவார். விபத்துகள், திடீர் மரணம் போன்றவை ஏற்படாது. நோய் நொடி இன்றி ஆரோக்கியமாக வாழலாம்.
வழிமுறைகள்
எம தீபம் ஏற்றும் முறை குறித்து நமது சாஸ்திரங்கள் வழி வகைகள் ஏற்படுத்தி உள்ளது. இதோ அந்த வழி முறைகள்:- வீட்டின் வெளிப்புறம் உயரமான பகுதியில் யம தீபம் ஏற்றப்பட வேண்டும். யம தீபம் தெற்கு திசை நோக்கி எரிய வேண்டும். விளக்கேற்றிய பின் யம தீப சுலோகம் சொல்லி பிரார்த்தனை செய்ய வேண்டும். விளக்கேற்றிய பின்னர்,முன்னோர்களை மனதில் நினைத்து பிரார்த்தனை செய்ய வேண்டும். மாதவிலக்கு பெண்கள் இந்த யம தீபம் ஏற்றுவதை தவிர்க்க வேண்டும். அவர்களுக்கு பதிலாக வீட்டில் இருக்கும் ஆண்கள் கூட ஏற்றலாம்.
ஆயுள்
யம தீபம் ஏற்றி முன்னோர்களுக்கும் வழிகாட்டி உதவிட நமக்கு வாழ்நாள் முழுவதும் நல்ல பலன்களைத் தரும். முன்னோர் ஆசிகள் பெற யம தீபம் ஏற்றுவோம். ஓரு ஆத்மாவை உருவாக்குவதில் ஆத்மகாரகனான சூரியனும் அந்த ஆத்மாவின் ஆயுளை தீர்மானிப்பதில் சூரியனின் புத்திரர்கள் மற்றும்ஆயுள் காரகனான சனீஸ்வர பகவானும், அவருடைய அதிதேவதையான யமனும்தான் என பாரம்பரிய ஜோதிடம் கூறுகிறது. பரணி, மகம், சதயம் நட்சத்திரங் களில் பிறந்தவவர்கள் யம தீபம் ஏற்றுவது சிறப்பு. பரணி நட்சத் திரத்திற்கு யமன் அதிபதி. மகம் நட்சத்திரத் திற்கு பித்ருக்களை அதிதேவதையாக கூறியுள்ளனர். ஆன்மீக நூல்களில் சதயத்திற்கு யமனை அதிதேவதையாக கூறப்பட்டுள்ளது. யம தீபம் குறிப்பாக துர்மரணம் அடைந்தவர்களுக்கு முக்கியமானது. எவரேனும் மரணமடைந்தால் மட்டுமே யம தீபம் ஏற்ற வேண்டும் என்று எண்ணக் கூடாது.
சன்னதிகள்
யமனை அதிதேவதையாக கொண்ட சனீஸ்வர பகவான் லக்னத்தில் ஆட்சி உச்சம் பெற்றவர்கள், ஆயுள் ஸ்தானத்தில் சனீஸ்வர பகவான் நீசம் அல்லது பலம் இழந்தவர்கள் யம தீபம் ஏற்றவேண்டும். ஆயுள் ஸ்தானாதிபதி ருத்ரனை அதிதேவதையாக கொண்ட திருவாதிரை அல்லது ருத்ரனை அதிதேவதையாக கொண்டவர்கள் எம தீபம ஏற்றுவது சிறப்பு. அவரவர் வீட்டின் உயரமான பகுதியிலும் தெற்கு திசை நோக்கி யம தீபம் ஏற்றலாம். அனைத்து சனி பரிகார தலங்களிலும் அனைத்து சிவாலய சனீஸ்வரர் சன்னதிகளிலும் எம தீபம் ஏற்றலாம். எமனின் சகோதரியான யமுனை நதிக்கரையில் ஏற்றலாம். அனைத்து காலபைரவர் சன்னதிகளிலும் ஏற்றலாம்.
ஆலயங்கள்
யம தீபத்தை ஆலயங்களிலும் ஏற்றி வழிபடலாம். மயிலாடுதுறை அருகில் ஸ்ரீ வாஞ்சியத்தில் «க்ஷத்ரபாலகராக அமைந்து தனி சன்னதி பெற்ற யமதர்மராஜன் சன்னதி. தனது பக்தனான மார்கண்டேயனுக்கு அருள்புரிவதற்காக எமனை அழித்த திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் சன்னதியில் தெற்கு நோக்கி தீபம் ஏற்றலாம். திருச்சி மண்ணச்சநல்லூர் அருகில் திருபைஞ்சிலி எனும் ஸ்ரீவனநாதர் ஆலயத்தில் உலகில் அழிக்கும் தொழில் தடையின்றி நடைபெற சாம்பலில் இருந்து எமனை மீண்டும் குழந்தையாக உருவாக்கிய யமன் சன்னதியில் ஏற்றலாம். தீபம் ஏற்றி வைத்து பின்னர் ஸ்ரீ யமாய நம: யமாய தர்ம ராஜாய ம்ருத்யவே சாந்த காயச வைவஸ்தாய காலாய ஸர்வ பூத க்ஷயாயச ஓளதும்பராய தத்னாய நீலாய பரமேஷ்டினே! வ்ருகோதராய சித்ராய சித்ரகுப்தாய வை நம: சித்ரகுப்தாய வை ஓம் நம இதி: என்ற ஸிலோகம் சொல்லி வணங்கினால் முன்னோர்கள் மட்டுமின்றி எமதர்மனும் மகிழ்ச்சி அடைவாராம். விபத்துகள், திடீர் மரணம் போன்றவை சம்பவிக்காது. நோய் நொடி இன்றி ஆரோக்கியமாக வாழலாம்.
லட்சுமி குபேர பூஜை
தீபாவளி பண்டிகை நாளில் பட்டாசு வெடித்து புத்தாடை உடுத்தி கொண்டாடுகிறோம். மாலையில் லட்சுமி குபேர பூஜை செய்வோம். லட்சுமி குபேர பூஜை செய்ய தீபாவளி திருநாள் மிகவும் உகந்தது. மேலும் சித்திரை, வைகாசி, ஆனி, ஆவணி, கார்த்திகை மாதங்களில் பூரட்டாதி நட்சத்திரம் வரும் நாளில் பூஜை செய்வது மிகுந்த பலன்களை தரும். ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை குபேர காலமாகும். இந்த பூஜை சிறப்பு மிக்கது. குபேரன் தனது செல்வம் அனைத்தையும் இழந்து நின்றபோது லட்சுமி தேவியை வணங்கி எந்திரத்தை மீண்டும் பெற்றான். அந்த எளிய குபேர பூஜையை விரதம் இருந்து செய்தால் நலம் விளையும். இதை செய்வதால் கடன்கள் தீரும். செல்வம் பெருகும். ஆண்டுக்கு 2 முறை செய்தால் பணத்தட்டுப்பாடு இருக்காது. வட இந்தியாவில், தீபாவளி அன்று இரவில் குபேரனை விசேஷமாக, தங்க, வெள்ளி நாணயங்களை வைத்து வழிபடும் பழக்கம் உள்ளது.
வழிபாட்டு முறை
லட்சுமி குபேர பூஜை என்பது வேத மந்திரங்கள் ஓத கலசம் வைத்து செய்யப்பட வேண்டும். சாதாரணமாக வீட்டில் நாமே செய்வது என்றால் பூஜை மாடத்தில் லட்சுமி குபேர படத்தினை வைத்து இருபக்கமும் குத்து விளக்கு ஏற்ற வேண்டும். இப்படத்திற்கு முன்பாக பெரிய வாழை இலை வைத்து அதில் நவ தானியங்களை தனித்தனியாக பரப்பி வைக்க வேண்டும். நடுவில் சுத்தமான தண்ணீர் நிரம்பிய சொம்பை வைத்து அதில் மஞ்சள் கலந்து பின் மாவிலை சொருகி அதன்மேல் ஓர் மட்டை தேங்காய் வைத்திட வேண்டும். அதற்கு மஞ்சள் குங்குமம் வைத்து பூக்களால் அலங்கரித்திட வேண்டும்.
ஸ்லோகம்
பின் மஞ்சளில் பிள்ளையார் பிடித்து வைத்து பூஜையை தொடங்க வேண்டியதுதான். நமக்கு தெரிந்த விநாயகர் துதி மற்றும் பாடல்களை பாடி பூஜையை செய்ய வேண்டும். பின் மகாலட்சுமியை வணங்கி போற்றி வழிபட வேண்டும். அதன்பின் குபேர மந்திரங்களோ “குபேராய நமஹ” “தனபதியே நமஹ” என 108 முறை சொல்லியோ தாமரை இதழ்கள் அல்லது பூக்களால் பூஜிக்க வேண்டும். தாமரை மலர் லட்சுமி மற்றும் குபேரனுக்கு உகந்த மலர். பின் நைவைத்தியமாக இனிப்புகள் மற்றும் பால் பாயாசம் போன்றவை வைத்து பூஜை முடித்திட வேண்டும். பூஜையில் தட்சணையாக காசுகள் வைக்கப்பட வேண்டும். அதனை பூஜை முடிந்தவுடன் எடுத்து நமது பெட்டகங்களில் வைத்துவிடலாம். சிலர் தாம்பூலங்களையும், காசுகளையும் தானமாக வழங்கிடுவர். லட்சுமி குபேர பூஜை தீபாவளி தினத்தில் செய்யும்போது வீட்டில் மகாலட்சுமி வாசம் செய்வதுடன் குபேரன் சகல ஐஸ்வர்யத்தையும் வாரி வழங்கிடுவார்.

No comments:
Post a Comment