Sunday, October 27, 2019

இன்று தீபாவளி பண்டிகை: நாடு முழுவதும் உற்சாகம்.

தீபாவளி பண்டிகை இன்று நாடு முழுவதும் மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்படுகிறது.





இந்துக்களின் புனித பண்டிகையான தீபாவளி ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் அமாவாசை திதியில் கொண்டாடப்பட்டு வருகிறது. தீபங்களின் வரிசை என்று தமிழில் பொருள்படும் இந்நன்நாளில் மக்கள் அதிகாலை கங்கா ஸ்நானம் செய்து, புத்தாடை உடுத்தி, பலகாரங்கள், உணவுப் பொருட்களை இறைவனுக்கு படைத்து மகிழ்வர்.




காலை மற்றும் மாலை வேளையில் பட்டாசுகளை வெடித்தும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் இனிப்புகள் வழங்கியும், தீபாவளி வாழ்த்தினை பகிர்ந்தும் இப்பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடுவர். பெரும்பாலான மக்கள் கோவில்களுக்கு சென்று இறைவனை வணங்குவர்.




நம் நாட்டில் இந்துக்கள் மட்டுமில்லாது, சமண, புத்த மதத்தினரும், சீக்கியர்களும் இப்பண்டிகையை வருடந்தோறும் கொண்டாடி வருகின்றனர். இந்நாளில் பல்வேறு தலைவர்களும் மக்களுக்கு தங்கள் தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
 அனைவருக்கும் இதயம் கனிந்த தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...