மலேசியாவில் இதுவரை வந்துள்ள மொத்த #கொரோனா வைரஸ் தொற்றுகளில் 25% தப்லீக் ஜமாத் கூட்டத்திலிருந்து நேரடியாக வந்தவை என்று கண்டறியப்பட்டுள்ளது (மீதி 75%லும் இதிலிருந்து வந்த இரண்டாம் கட்ட தொற்றுகளே கணிசமானவை). கடும் அரசு கட்டுப்பாடுகளையும் அரசு அடக்குமுறை வரலாற்றையும் கொண்ட இஸ்லாமிய நாடான மலேசியா தனது அறிக்கைகள் எதிலும் தப்லீக் அமைப்பின் பெயரைத் தவிர்ப்பதில்லை, அங்குள்ள ஊடகங்களுக்கும் அப்படி ஒரு தடை இல்லை. Perak போன்ற சில இடங்களில் தப்லீக் அமைப்பே தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளது.
ஒப்பீட்டில், இந்தியாவில் தப்லீக் ஜமாத்தின் வைரஸ் பங்களிப்பு இதைவிட அதிகம் (இந்திய அளவில் 35%, தமிழ்நாட்டில் 92%). ஆயினும், மலேசியாவை விட பல மடங்கு அரசியல் ஜனநாயகமும் கருத்து சுதந்திரமும் கொண்ட இந்தியாவில், அதன் மாநிலங்களில் அந்த அமைப்பின் பெயர் அரசாலும் ஊடகங்களாலும் தவிர்க்கப் படுவது வெட்கக்கேடு. தில்லி நிஜாமுதீனில் ஆரம்பித்து நாடெங்கும் கொரோனா தீவுகளை தெரிந்தே சட்டவிரோதமான கூடுகைகள் மூலம் உருவாக்கியுள்ள இந்த அமைப்பும் அதன் தலைவனும் கடுமையாக சட்டபூர்வமாகத் தண்டிக்கப்பட வேண்டும். அந்த அமைப்பு நிரந்தரமாக தடை செய்யப் படவேண்டும். இங்கு என்னடாவென்றால், அதன் "புகழுக்கு" ஒரு சிறு குந்தகம் கூட வந்துவிடக் கூடாது என்ற நோக்கில் பெயரைச் சொல்வதே தவிர்க்கப் படுகிறது. இஸ்லாமிய தாஜாவாதத்தில் இஸ்லாமிய நாடுகளையே மிஞ்சுமளவுக்கு இந்தியாவின் சில மாநிலங்களும் அரசு அமைப்புகளும் செயல்படுவது கொடுமை.
No comments:
Post a Comment