1) செய்திகளை காலை 7 மணி மற்றும் இரவு 7 மணி என இரு முறை மட்டும் பார்க்கவும்.
இப்படி செய்வதால் உங்க மனதில் தேவையற்ற சிந்தனைகள் தோன்றி உங்க மன நிம்மதியை சிதைக்காது.
இப்படி செய்வதால் உங்க மனதில் தேவையற்ற சிந்தனைகள் தோன்றி உங்க மன நிம்மதியை சிதைக்காது.
2) செய்தி சேனல்களில் காட்டப்படும் எந்த ஒரு விவாதங்களையும் பார்க்காதீங்க.
3) இரவு உணவு 8மணிக்கு முன் முடித்துவிட்டு இனிய உங்கள் மனதுக்கு பிடித்த இசையை 1மணி நேரம் பார்த்து கேட்டு ரசித்த பின் தூங்க செல்லுங்க.
4) நமது 2 முதல் 4 படுக்கை கொண்ட வீட்டை தினம் ஒரு அறை என சுத்தம் செய்து பொருட்களை இடம்மாற்றி வைத்து படுக்கையை மாற்றி அமைத்து என மதிய பொழுதுகளை குழந்தைகள் மற்றும் குடும்பத்தோடு களியுங்கள்.
5) இப்போது அதிக நேரம் இருப்பதால் வாரத்தில் 2 முறை மரசெக்கு நல்லெண்ணெய் தேய்த்து குளியுங்கள். ஆண்கள் புதன் மற்றும் சனி பெண்கள் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் எண்ணெய் குளியல் செய்வது நல்லது.
6) சமையல் தெரியாதவர்கள் ஆண் பெண் இருவரும் சமையல் செய்து பழகலாம்.
7) இரவு புதிய நீங்க செய்து பழகாத உணவுகளை சமைத்து பழகலாம்.
8) தினம் இரு உறவினர்களை தொலைபேசியில் அழைத்து பேசி குழந்தைகளுக்கு வீடியோ கால் மூலம் காட்டி மகிழ்விக்கலாம்.
9) நிறைய ஆன் லைன் வேலைகள் உள்ளது. உங்க பிள்ளைகளுக்கு கம்பியூட்டர் வேலைகள் நன்றாக தெரிந்தால் சம்பாதிக்க ஊக்குவிக்கலாம். இந்த வேலைகள் பற்றி you tube மற்றும் கூகுளில் நிறைய தகவல்கள் கிடைக்கிறது.
10) இறுதியாக வாழ்கையை நிகழ்காலத்தில் வாழுங்க... கொரோனா போல வியாதி வந்து விடுமோ என்ற எதிர்கால பய சிந்தனைகளை உங்களுக்குள் விதைப்பது தொலைகாட்சியே அதை 4மணி நேரத்திற்கு மேல் பார்க்காதீங்க.
No comments:
Post a Comment