Saturday, April 18, 2020

'தகுதி இல்லாமல் தலைவர் பதவிக்கு வந்துவிட்டார் மு.க.ஸ்டாலின்.. கே.பி.ஆர்..!

மு.க.ஸ்டாலினோ தகுதி இல்லாமல் தலைவர் பதவிக்கு வந்து விட்டார். ஆகவே பயப்படுகிறார். யாரைப் பார்த்தாலும் பயம். எதைப் பார்த்தாலும் பயம் என திமுகவிலிருந்து கடந்த வாரம் நீக்கப்பட்ட கே.பி.ராமலிங்கம் கூறியுள்ளார்.
மு.க.ஸ்டாலின் சமீபகாலமாக பொது நோக்கு சிந்தனை இல்லாமல் சுயநல பாதையில் செல்கிறார்.
எப்படியாவது முதல்வர் ஆகிவிட வேண்டும் என்று துடிக்கிறார். ஆகவே எதையும் குதர்க்கமாக பார்க்கிறார். அவருக்கு தன்னம்பிக்கையே இல்லை. அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர் போன்றவர்கள் கட்சியில் மற்றவர்களுக்கும் பணி புரிய வாய்ப்பு கொடுத்தார்கள். யார் வந்தாலும் தங்களுக்கு பெருமை என்றே நினைத்தார்கள். அந்த அளவுக்கு தகுதி உள்ளவர்களாக அவர்கள் இருந்தார்கள்.
மு.க.ஸ்டாலினோ தகுதி இல்லாமல் தலைவர் பதவிக்கு வந்து விட்டார். ஆகவே பயப்படுகிறார். யாரைப் பார்த்தாலும் பயம். எதைப் பார்த்தாலும் பயம். ஜால்ரா அடிப்பவர்கள் மட்டுமே தனக்கு தேவை என நினைக்கிறார்.அவர் முதலில் நல்லவர்களோடு பழக வேண்டும். அனைத்துக் கட்சிக் கூட்டம் என்ன ஆனது?பிறககு தோழமை கட்சிகள் கூட்டம் என்றார். பிறகு கம்ப்யூட்டர்களை பார்த்து பேசுவோம் என்றார். ஆக, அனைத்து கட்சி கூட்டம் தேவை இல்லை என நான் சொன்னதுதான் இப்போது நிரூபணமாகியிருக்கிறது.
கொரோனா பாதித்து இறந்தவர் குடும்பங்களுக்கு தலா ஒரு கோடி ரூபாய் அளிக்க வேண்டும் என ஸ்டாலின் கூறியுள்ளார்.இது நடக்கக் கூடியதா? அவரது பேச்சைக் கேட்டால் மக்கள் முட்டாள் என நினைக்க மாட்டார்களா? பைத்தியக்காரன் என நினைக்க மாட்டார்களா? இது அவரை தலைவராக வைத்து அழகு பார்க்கும் கட்சியையும் இழிவுபடுத்தும் செயல் அல்லவா? திமுக என்ற பெரிய இயக்கத்தின் தலைமைப் பொறுப்பு அவர் கைக்கு வந்திருக்கிறது. இனியேனும் அந்த பதவிக்கு ஏற்ப தகுதியை வளர்த்துக் கொள்ளுங்கள்''என மு.க.ஸ்டாலினுக்கு அவர் அறிவுறுத்தி இருக்கிறார்.😂😂

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...