நானறிந்தவரை ரமலான் நோன்பு கஞ்சிக்கு இலவச அரிசி வேண்டும் என இஸ்லாமிய சமூக தலைவர்கள் யாரும் கோரிக்கை வைக்கவில்லை.
ஜெயலலிதா அம்மையார் அவர்கள் எல்லா அரசியல் வாதிகளை போலவே ஓட்டரசியலை மனதில் வைத்து நோன்பு கஞ்சிக்காக அரிசி இலவசம் என அறிவித்தார்.
ஒட்டுமொத்த இஸ்லாமிய சமூகம் சார்பாக கருத்து கூறும் உரிமை எந்த ஒரு தனி நபருக்கோ அல்லது ஒரு கட்சி/இயக்க தலைமைகளுக்கோ இல்லாத காரணத்தால் யாரும் அதை மறுக்கவில்லை.
எனக்கு மட்டும் அவ்வுரிமை இருந்திருந்தால் அக்கணமே மறுத்திருப்பேன்.
காரணம், "தானம் கொடு" என்றுதான் எங்கள் மார்க்கம் எங்களுக்கு சொல்லித் தந்திருக்கிறதே அன்றி "தானம் பெறு" என்றல்ல.
காரணம், "தானம் கொடு" என்றுதான் எங்கள் மார்க்கம் எங்களுக்கு சொல்லித் தந்திருக்கிறதே அன்றி "தானம் பெறு" என்றல்ல.
"ஏற்பது இகழ்ச்சி" என ஔவை பாட்டி சொன்னதற்கு முன்னரே இஸ்லாம் தெளிவுபடுத்தி உள்ளது.
ஓட்டு அரசியல் என்பது உண்மை....நாட்டின் நலனுக்கு இப்போது நடக்கும் சம்பவங்கள் என்ன பாதிப்பு ஏற்படுத்தும் என்பதே கேள்வி.
No comments:
Post a Comment