Sunday, April 5, 2020

துன்பங்கள் தீர பயனுள்ள ஆன்மீக பரிகாரங்கள்.

🔘எந்த ஒரு நல்ல காரியம் துவங்க வெளியில் செல்லும் பொழுது அருகில் உள்ள விநாயகருக்கு ஒரு தேங்காய் உடைப்பதும் ,பசுவிற்கு வாழை பழம் தருவதும் துவங்கும் காரியம் வெற்றியடைய செய்யும் . .
🔘ஒரு வளர்பிறை செவ்வாய்க்கிழமையில் தொடங்கி, ஒவ்வொரு செவ்வாய்க்கிழமை தோறும் ஒரு பசுவுக்கு நாட்டு வாழைப்பழம் வாங்கிக் கொடுத்துவர வறுமை நீங்கி செல்வ நிலையில் உயர்வு ஏற்படும்.
🔘கடன் தொல்லைகளுக்கு ஸ்ரீ யோக நரசிம்மரையும், ஸ்ரீ லட்சுமி நரசிம்மரையும்வழிபடுவது நல்ல பரிகாரம் ஆகும். ‪ஸ்ரீநரசிம்மரின்‬ எந்த திருக்கோலத்தை தரிசித்தாலும் கடன் தொல்லைகள், பில்லி, சூனியம், ஏவல்,திருஷ்டி ,திருமண தடை விலகி நன்மை பெறலாம்.
🔘குடும்பத்தில் தாங்க முடியாத கஷ்டங்கள் வந்தால், மன அமைதி குறைந்தால் , அருகில் உள்ள ஆலயங்களில் தீபம் ஏற்றி வழிபடுவது ரிஷிகள் சொல்லிய பரிகாரம். வெள்ளிக்கிழமைகளில்‬ நவகிரக சுக்கிரனுக்கு அகல் விளக்கில் கற்கண்டு போட்டு ,அதில் நெய் தீபம் ஏற்றி வழிபட,கணவன் மனைவி கருத்து வேறுபாடுகள் நீங்கும். ‪
🔘சங்கடஹரசதுர்த்தியில்‬ விநாயகருக்கு அருகம் புல் மாலைசாற்றி,அர்ச்சனை செய்து வழிபட ,சங்கடங்கள் தீரும். சங்கடஹரசதுர்த்தியில் விநாயகருக்கு எருக்கம் திரி போட்டு விளக்கு ஏற்றி வழிபடபிள்ளைகள் கல்வியில் முன்னேறுவார்கள்.
🔘ஒரே நாளில் ஒன்பது வகையான லிங்க மூர்த்திகளை தரிசனம் செய்ய சனிபகவானின் ஆசிகள் பெற்று ,ஆயுள்தோஷம் நீங்கி ஆரோகியம் ஏற்படும் (தனியாக உள்ள கோவில்கள் )
🔘எலுமிச்சைபழம் ஒன்று வாங்கி கடை,அலுவலகம் முழுவதும் வளாகம் முழுவதும் வெளியில் நின்று நாகு துண்டாக நறுக்கி தெற்கு முகமாக நின்று குங்குமம் தடவித் திசைக்கு ஒன்றாக எறிந்து விடவும். கடை அலுவலகம் இவற்றில் இருந்த தொழில் முடக்கம் நீங்கி தொழில் சிறப்பாக நடைபெறும். இதை செவ்வாய்க்கிழமை அன்று செய்யவும். தொழில் சிறக்கும்.
🔘‎இரண்டு‬ சர்ப்பங்கள் இணைந்தது போல் இருக்கும் நாகராஜா சிலைக்கு, வெள்ளிக்கிழமை இராகு காலத்தில், மஞ்சள் குங்குமம் வைத்து, செவ்வரளிப் பூ சாற்றி, அபிசேகம் செய்து, நெய்தீபம் ஏற்றி ,தம்பதிகள் பெயருக்கு அர்ச்சனை செய்தால் தம்பதிகள் ‪ஒற்றுமையாக வாழ்வார்கள்.
🔘அஷ்டமத்துச் சனி நடப்பவர்கள் , அடிக்கடி ஆபத்துகளைச் சந்தித்து வருபவர்கள்,அஷ்டமாதிபதி தசை அல்லது புத்தி நடப்பவர்கள் மஹாம்ருத்யுஞ்சய மந்திரம் ஜெபித்து பின் வெளியே கிளம்பினால் விபத்துகள் இன்றி வீடு திரும்பலாம்.
🔘பால், தயிர், கோமூத்திரம், சாணம் கலந்தது பஞ்சகவ்ய கலவை. இந்த பஞ்சகவ்ய‬ கலவையை வாரம் ஒரு முறை வீடுகளில் தெளிக்க ,தோஷம், தீட்டு நீங்கி, லஷ்மி கடாக்ஷ்சம் கிடைக்கும்.
🔘மயில் தோகை வீட்டில் வைத்து இருப்பது முருகனின் ஆசிகள் கிடைக்கும் .
🔘ஞாயிற்றுக்கிழமை தவிர மற்ற நாட்களில் தினமும் மதியம் 12:00 முதல் 1:30 மணிக்குட்பட்ட வேளையில் அரசமர வேரைத் தொட்டு வணங்கி வர தீராத நோய்கள் தீரும். ஞாயிற்றக்கிழமை அன்று மட்டும் அரச மரத்தைத் தொடக்கூடாது .
🔘ஆயுள் தோஷம் உள்ளவர்கள் சனிக்கிழமை தோறும் அரச மரத்திற்கு நீர் விட்டு தொட்டு வணங்கி வர ஆயுள் கூடும் என்பது சித்தர் வாக்கு.
🔘மாதாமாதம்‬ உத்திர நட்சத்திரத்தன்று சிவனுக்கு தொடர்ந்து 11 மாதங்கள் பால் அபிசேகம் செய்தால், விரைவில் திருமணம் நடை பெறும்.
🔘பசு நெய்யை செப்பு பத்திரத்தில்(தாமிரம் ) நிறைத்து கோவிலுக்கு தர்மம் செய்தால் வம்ச சாபம் விலக வழிகளை தெரிய படுத்தும்
🔘கலியுகத்தில்‬ காரிய சித்திக்கு துர்க்கை வழிபாடு அதுவும் இராகு காலத்தில்,செய்வது சிறந்தது. இராகு காலத்தில் கடைசி 1/2 மணி நேரமான அமிர்தகடிகை நேரமே சிறப்பான பரிகார நேரம். நெய்விளக்கு ஏற்றவும் உகந்த நேரம். ஞாயிற்றுகிழமை மாலை 4. 30-6. 00 மணிக்குள் துர்க்கைக்கு விளக்கு ஏற்றி வழிபட நாம் வேண்டிய பிராத்தனைகள் நிறைவேறும்.
🔘செவ்வாய்க்கு‬ அதிபதியான முருகப் பெருமானுக்கு செவ்வாய் தோறும் நெய்விளக்கு ஏற்றி வழிபட வேலை கிடைக்கும்.
🔘புத்திர‬ பாக்கியம் இல்லாதோர் ஆறு தேய்பிறை அஷ்டமிகளில் காலபைரவருக்கு சகஸ்ர நாம அர்ச்சனை செய்தால் விரைவில் புத்திர பாக்கியம் கிட்டும்.
🔘தொழில்‬ தடை, கணவன் மனைவிக்கு கருத்து வேறுபாடு நீங்க, வாழ்வில் நலம் பெற, வெளிநாட்டு வேலை முயற்சி வெற்றி பெற, என்று நல்ல காரியங்கள் நடைபெற பெளர்ணமி தோறும் நடைபெறும் சத்திய நாராயணா பூஜையில் கலந்து கொள்வது நற்பலன்களைத் தரும்.
🔘எத்தகைய‬ கிரக தோசமானாலும் தினமும் சுந்தர காண்டத்தில் ஒரு அத்தியாயம் பாராயணம் செய்வது மிக, மிக நன்மை தரும். வாழை தண்டு திரியினால் வீட்டில் தீபம் ஏற்றினால் குலதெய்வ குற்றமும், குலதெய்வ சாபமும் நீங்கும்.
🙏🙏🙏🙏🙏🙏

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...