பிரதமரின் வேண்டுகோளை ஏற்று, கொரோனா வைரசை கட்டுப்படுத்த பிரார்த்தனை செய்து இந்திய மக்கள் மட்டுமன்றி வெளிநாடு வாழ் இந்தியர்களும் மின் விளக்குகளை அணைத்து தீபம் ஏற்றி வழிபட்டனர்.
''கொரோனா வைரசை தோற்கடிக்கும் விஷயத்தில் நாட்டு மக்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்கிறோம் என்பதை காட்ட வேண்டும். வரும், 5ம் தேதி(இன்று) இரவு, 9:00 மணிக்கு, 9 நிமிடங்கள், மக்கள் அனைவரும் மின் விளக்குகளை அணைத்து, தீபம், டார்ச் லைட், மெழுகுவர்த்தி, மொபைல் போன் விளக்குகளை ஒளிரவிட்டு, நம் வலிமையை காட்ட வேண்டும்,'' என, பிரதமர், மோடி நாட்டு மக்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.
இந்நிலையில், கொரோனாவால் மக்கள் இருண்ட நிலையில் இருந்து வெளிச்சத்துக்கு வர விளக்குகளை ஏற்றுங்கள் என்ற பிரதமரின் வேண்டுகோளை ஏற்று, இந்திய மக்கள் மட்டுமன்றி, வெளிநாட்டு வாழ் இந்தியர்களும் இறைவனிடம் பிரார்த்தனை செய்து தங்கள் வீடுகளில் ஒளி விளக்குகளை ஏற்றி பிரார்த்தனை செய்தனர். ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில் அகல் விளக்கு, மெழுகுவர்த்தி, டார்ச் லைட், மொபைல் போன் ஒளிகளை காட்டி தங்கள் ஒற்றுமையை மக்கள் வெளிப்படுத்தினர். விளக்கேற்றிய நேரத்தில் பல இடங்களில் பட்டாசு வெடிக்கப்பட்டது.
No comments:
Post a Comment