கோட் மற்றும் கவுன்கள் வைரஸ் பரவுவதற்கு காரணமாக இருப்பதால் தற்காலிகமாக வக்கீல்கள்,நீதிபதிகள் யாரும் மேற்கண்டவற்றை அணிய வேண்டாம் என சுப்ரீம்கோர்ட் நீதிபதி பாட்டே தெரிவித்து உள்ளார்.
latest tamil news
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக மத்திய அரசு கடந்த மார்ச் மாதம் 25ம் தேதி முதல் நாடுமுழுவதற்குமான ஊரடங்கை பிறப்பித்துள்ளது. மூன்றாவது கட்ட ஊரடங்கு வரும் 17 ம் தேதி வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக பல நிறுவனங்களின் ஊழியர்கள் தங்கள் நிறுவனத்துடன் பேசுவதற்கு வீடியோ கான்பரன்சிங் முறையை பயன்படுத்த துவங்கி உள்ளனர். நாட்டின் ஜனநாய தூண்களில் ஒன்றான நீதித்துறையும் வீடியோ கான்பரன்சிங் முறை மூலம் வழக்கு விசாரணையை நடத்தி வருகிறது.
இதனிடையே வழக்கின் விசாரணைகள் வீடியோ கான்பரன்சிங் மூலம் நடைபெறும் போது வழக்கமான நீதிமன்ற உடைகளான கோட், மற்றும் கவுன் போன்றவற்றை வக்கீல்கள் மற்றும் நீதிபதிகள் அணியாமல் விவாதங்களில் பங்கேற்றுள்ளனர்.
இது குறித்து கவனித்து வந்த சுப்ரீம் கோர்ட் நீதிபதி எஸ்.ஏ.,பாப்டே தற்போதைய சூழ்நிலையைகருத்தில் கொண்டு வக்கீல்கள் நீதிபதிகள் யாரும் தற்காலிகமாக கோட்,கவுன் அணிய வேண்டாம். மேற்கண்டவற்றின் மூலம் வைரஸ் பரவுவதற்கு வாய்ப்புள்ளது என கூறி உள்ளார்.
latest tamil news
நீதிபதிகள் இந்து மல்ஹோத்ரா மற்றும் ஹிருஷிகேஷ் ராய் ஆகியோருடன் இது குறித்து கலந்துரையாடிய தலைமை நீதிபதி பாப்டே வக்கீல்கள் மற்றும் நீதிபதிகளுக்கான அடை குறியீடு குறித்த வழி முறைகள் விரைவில் கொண்டு வரக்கூடும் என்றார்.
No comments:
Post a Comment