பஸ்களை இயக்க, போக்குவரத்து கழகங்கள், அரசு உத்தரவுக்கு காத்திருக்கின்றன.
'கொரோனா' பரவலை தடுக்க, கடந்த மார்ச், 25 முதல் ஊரடங்கு அமலானது. இதனால் தமிழகத்தில் அரசு பஸ்களின் இயக்கம் தடைபட்டுள்ளது. அத்தியாவசிய பணியாளர்களை அழைத்துச்செல்லும் பஸ்களை தவிர, மற்ற அனைத்து பஸ்களும், எட்டு கோட்டங்களின், 320 பணிமனையில் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் இரு மாதத்தில், போக்குவரத்து கழகங்களுக்கு, 1,250 கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
தற்போது ஊரடங்கில் தளர்வு ஏற்படுத்தப்பட்டதால், பஸ் போக்குவரத்து தொடங்கவுள்ளதாக தகவல் பரவியது. இதனால் எட்டு கோட்டங்களிலும் ஆயத்தபணி நடந்தது. அத்துடன் அலுவலக, தொழில்நுட்ப பணியாளர் மற்றும் டிரைவர், கண்டக்டர்களில், 50 சதவீதம் பேர் பணிக்கு அழைக்கப்பட்டனர். இன்று (மே 18) பஸ்கள் இயங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பஸ்கள் இயக்கம் குறித்து, முதல்வர் எதுவும் தெரிவிக்கவில்லை.

இதுகுறித்து, போக்குவரத்து அதிகாரிகள் கூறுகையில், 'அரசு அனுமதி அளித்தால், பஸ்களை இயக்க, போக்குவரத்து கழகங்கள் தயாராகவுள்ளன. விரைவில் பஸ்களை இயக்க அனுமதி கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம்' என்றனர்.
அமைச்சரிடம் நிர்ப்பந்தம்
பஸ்களை இயக்கினால் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்று, போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கரிடம், தனியார் பஸ் உரிமையாளர்கள் நிர்ப்பந்தம் செய்துள்ளனர். இதனால் அரசு பஸ்களின் இயக்கம் தடைபட்டுள்ளதாக, போக்குவரத்து தொழிற்சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர். எனவே, விரைவில் கட்டணம் உயர்த்தப்பட்டு, பஸ்கள் இயக்கத்துக்கு வரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment