தனிமை என்றால் சிலர் கொடுமை, இனிமை, ஏகாந்தம், இன்பம், வரம், சாபம் என்று ஆயிரம் கோணம் வழியே அனுபவிக்கிறார்கள் !!
அப்போது தனிமை என்ற ஒன்றே இத்தனை வழியே பரினமிக்கின்றதா ?? இல்லை !!
தனிமையில் பொருள் உணரமையே இத்தனை வேறுபாடுகள் கொண்ட கோணத்தின் காரணமாக இருக்கிறது !!
தனிமை யென்றால் இறையோடு இருத்தால் என்றே பொருள் படுகிறது !!??
இதற்க்கு தியானம் என்று அல்லவா கூறுவார்கள் நீங்கள் எப்படி தனிமை என்று கூறுகிறீர்கள் ??
தியானம் என்பது ஏது ஓர் குருவழியாக / நூல்வழியாக / யாரோ சொன்னது வழியாக என்று வரும்போது !!
முதலில் சொல்லிகொடுத்தவரோ / படித்ததோ / கேட்டதோ உங்கள் நினைவில் நின்று அவர் சொல்லிகொடுத்த முறைகள் சரியாக செய்கிறோமா என்றே சுயபரிசோதனை மற்றும் அவர்கள் சொன்ன மாற்றம் நிகழ்கிறதா என்ற எதிர்பார்ப்பும் உங்களுள் எழும் போது ??
உங்கள் நினைவிலாவது அந்த குருவை / நூலை /சொன்னதை சுமந்துகொண்டு இருக்கும்போது எப்படி தனிமை சித்திக்கும் ??
அதுவே உங்கள் கண்கள் முடியவுடன் நீங்கள் இருக்கும் சுற்றம் / சூழல் / சிந்தை எல்லாம் கடந்து ஏதுமில்ல நிலையில் நீங்கள் கரைய இறையே நிரம்ப இருப்பதே தியானம் !!
ஆனால் தனிமை வேறு
அது நிகழ்வில் நீங்களும் உங்களுக்காக உங்களோடு கலந்து நிகழ்த்துபவனோடு அனுபவித்து இருப்பது !!
அப்போது தனிமையென்றால் உங்கள் சிந்தையில் கூட வேறு யாரும் எதுவும் இருக்காது இருப்பதே !!
தனிமை கொடுமை என்று சொல்லும் பலரும் ??
அவர்கள் சிந்தையில் தான் கொடுமை என்று நினைப்பதை எல்லாம் நிகழ்த்தியவர்களை சுமந்து கொண்டு இருக்கும்போது !!
அவர்கள் சிந்தையில் தான் கொடுமை என்று நினைப்பதை எல்லாம் நிகழ்த்தியவர்களை சுமந்து கொண்டு இருக்கும்போது !!
அவர்கள் நினைவில்லாவது அவரோடு உடன் இருக்க அது எப்படி தனிமையாகும் ??
அதேபோல தனிமை இனிமை என்றாலும் இனிமை அளித்தவர்களை சுமந்துகொண்டு இருக்கும்போது அது எப்படி தனிமையாகும் ??
அதே போல தனிமை ஏகாந்தம் என்றாலும் ஏகாந்த சூழலை சுமந்துகொண்டு இருக்கும்போதும் நீங்கள் தனிமையில் இல்லை !!!
அப்போது தனிமை என்றால் என்ன ????
நீங்கள் உங்களோடு இருப்பது !!??
நீங்கள் உங்களோடு இருந்தாலே உங்களை உங்களாகி உங்கள் விருப்பம் கடந்தும் அருளிக்கொண்டு உங்களை செயல்படவைத்துகொண்டு இருப்பவன் புலப்படுவான் !!
நீங்கள் உங்களோடு இருந்தாலே உங்களை உங்களாகி உங்கள் விருப்பம் கடந்தும் அருளிக்கொண்டு உங்களை செயல்படவைத்துகொண்டு இருப்பவன் புலப்படுவான் !!
அப்படி அவன் எவ்வாறு எல்லாம் அருளி ஆட்கொண்டு இருக்கிறான் என்ற கருணையும் புலப்படும் !!
அந்த கருணையை அனுபவிக்க இறைவன் இருப்பை அதுவும் உங்களுக்கா தனித்துவத்தோடு அவனது இருப்பை அனுபவிக்கலாம் !!
இப்படி அனுபவிக்க நீங்கள் எவ்வளவு கூட்டத்தில் / எந்த சூழலில் / எப்படி இருந்தாலும் அவன் கருணையை உணரும்போது அவனுடனாய தனிமை ஆட்கொண்டு ஆனந்தத்தை அருளும் !!
தனிமை ஆனந்தமே !! உங்களுடன் கலந்த தனிமையை அனுபவித்தால் ஆனந்தமே !!
ஏதோ இவன்வரை உணர்வால் அட்கொண்டே அனுபவ வரிகளே பதிவாக !!
உங்கள் அனுபவம் வேறுபாடும் அனுபவித்தாலே புரியும் !! அனுபவித்து ஆனந்தபடுங்கள் !!
உங்கள் அனுபவம் வேறுபாடும் அனுபவித்தாலே புரியும் !! அனுபவித்து ஆனந்தபடுங்கள் !!
திருச்சிற்றம்பலம்
நற்றுணையாவது நமச்சிவாயவே.
No comments:
Post a Comment