நிர்மலா சீத்தாராமன் பல அதிரடி அறிவிப்புகளை அறிவித்ததை அடுத்து அவர் நாட்டை தனியாருக்கு விற்க தொடங்கிவிட்டார் என ஏகபட்டபேர் கிளம்பியுள்ளனர்
நேரு, காமராஜர், இந்திரா, ராஜிவ் என எல்லோரையுமே எதிர்த்து பழகிய அல்லது அப்படி நம்ப வைக்கபட்ட தமிழகத்தில் மோடி எதிர்ப்பு ஒன்றும் ஆச்சரியமல்ல. திமுக பங்கெடுக்காத எந்த மத்திய அரசும் தமிழ்நாட்டில் குற்றம்சாட்ட்படும் இது நியதி
இப்பொழுது நிர்மலா அறிவித்திருப்பது மகா நுட்பமான பொருளாதார மீட்பு நடவடிக்கைகள்
எல்லா தேசங்களை போலவும் இந்தியாவும் கொரோனாவில் சிக்கியது, ஆனால் இந்த மாபெரும் தேசத்தின் மக்கள் தொகையும் சிக்கலும் வேறுமாதிரியானது
அமெரிக்கா நாளையே எண்ணெய் விலை எழும்பினால் சட்டனெ குதிரை போல் எழும், அரபு நாடுகள் எழும், ஈரான் மேலான தடையினை நீக்கினாலே ஜெர்மன் எந்திரங்களை விற்று ஒரே நாளில் எழும்
ஆனால் இந்தியா என்பது யானை, அது எழும்ப கொஞ்சம் நேரமாகும். இந்த மாபெரும் சிக்கலில் இருந்து இந்தியாவினை மீட்கத்தான் அந்த திட்டம் வகுக்கபட்டது
இந்த 20 லட்சம் கோடியில் பல மகா முக்கிய திட்டங்களும் ஒத்திவைக்கபட்டிருக்கின்றன. இந்திய கடற்படைக்கு கட்டபட இருந்த 45 ஆயிரம் கோடிரூபாய் நீர்மூழ்கி திட்டம் ஒத்திவைக்கபட்டது. இன்னும் ஏகபட்ட எதிர்கால திட்டங்கள் ஒத்திவைக்கபட்டன
ஆயுத இறக்குமதியும் கைவிடபட்டது.
அந்த பணத்தையும் சேர்த்துத்தான் இந்த 20 லட்சம் கோடி இங்கு பகிரபட்டுள்ளது
20 லட்சம் கோடியினை ஆளாளுக்கு கொடுத்தால் என்ன? என்பவனிடம் பேசாதீர்கள். அப்படி கொடுத்தால் அவன் ஒரே நாளில் ஆட்டுகறி தின்றுவிட்டு தூங்க செல்வான், அவன் தேசத்துக்கு சுமை
தேசம் என்பது வரியில் இயங்கும் அமைப்பு,
வரி என்பது தொழில் இருந்தால் அன்றி வராது. இதனாலே தொழில்துறை ஊக்குவிக்கபடுகின்றது. இந்த வரிதான் மருத்துவம், காவல், ராணுவம் , சாலை என நமக்கே திரும்பி வரும்
இப்படி நீண்டகால திட்டம், உதாரணம் அந்த நீர்மூழ்கி போன்றவை இன்னும் பல ஏவுகனைகள், துறைமுக மேம்பாடு போன்றவை ஒத்திவைக்கபட்டிருக்கின்றதே தவிர கைவிடபடவில்லை,
அப்படி விடவும் முடியாது.
என்ன செய்தார்கள் என்றால் அந்த வருங்கால திட்ட பணத்தை உள்நாட்டில் சுற்றவிட்டு சில ஆண்டுகளில் அதை மீட்டு மறுபடி அத்திட்டத்தை தொடர வேண்டும்.
இதற்கு மகா அவசரமான பெரும் பணபுழக்கம் நாட்டுக்கு வேண்டும், இங்கு தொழில்வாய்ப்புகள் பெருக வேண்டும் , எதெல்லாம் வாய்ப்போ அதை எல்லாம் பயன்படுத்த வேண்டும்
உள்நாட்டில் இனி அதிரடியான தொழிலும் பண புழக்கமும் வேண்டும். இதனாலே எதெல்லாம் சாத்தியமோ அதை எல்லாம் அவசரமாக திறந்துவிடுகின்றது இந்திய அரசு
நிலக்கரி என்பது ஆலை முதல் அணல்மின் நிலையம் வரை மகத்தானது, இந்தியாவிலே அது வெட்டி எடுத்தால் அப்பணம் இங்கேயே சுற்றும்
விண்வெளி திட்டத்தில் தனியார் பங்களிப்பு ஒன்றும் புதிதல்ல அமெரிக்காவும் ரஷ்யாவும் செய்வதே, இப்பொழுது இந்தியா உதிரி பாகங்களை தனியார் செய்து தரலாம், ஆனால் இந்தியாவில் வந்து செய்ய வேண்டும் என்கின்றது, இதனால் இங்கே வேலைவாய்ப்பும் பணம்சுழற்சியும் அதிகரிக்கும்
அதாவது இந்திய பணம் வெளியே செல்லாது, இங்கேயே சுற்றுவதால் மதிப்பு கூடும்
எதெல்லாம் மிகபெரும் பணம் சுழலும் இடமோ அங்கெல்லாம் தனியார்களை ஊக்குவிக்கின்றது இந்தியா.
அதே நேரம் இந்திய விவசாயிகள் நலம் காக்கவும் சிறப்பு திட்டங்கள் வகுக்கபட்டுள்ளன.
இந்திய தொழிலதிபர்கள் மிட்டல், சிவநாடார், நாராயணமூர்த்தி இன்னும் ஏகபட்ட ஜாம்பவான்கள் உலகெல்லாம் தொழில்செய்யும் பொழுது வெளிநாட்டு தொழிலபதிபர்கள் இங்கு வருவதை எப்படி தடுக்க முடியும்?
இந்தியர் உலகெல்லாம் தொழில் செய்யலாம் ஆனால் வெளிநாட்டுக்காரன் இங்கு வரகூடாது என்பதெல்லாம் என்னவகை நியாயமோ தெரியவில்லை.
விமான நிலைய மேம்பாட்டில் தனியார்களை ஊக்குவிப்பது நல்லது, சென்னை விமான நிலையம் 100 முறை இடிந்துவிழுந்தும் என்னாயிற்று, யாரை பிடித்தார்கள்?
தனியார் என்றால் கழுத்தை பிடித்து இழுத்து வரலாம், இங்கு விமான நிலையங்களுக்கு ஏகபட்ட மேம்படுத்துதல்கள் வேண்டும்.
ஒரு விஷயம் கவனியுங்கள்
மிக சரியாக நிலக்கரி , விண்வெளிதுறை, ஆயுதம், ஏன் குறிவைக்கின்றது இந்தியா?
உலகம் மாறுகின்றது, சீனாவில் இருந்து வெளியேறும் நிறுவணங்களை வளைத்து போட பகீரத தவம் செய்கின்றது இந்தியா
இதில் எலக்ட்ரானிக்ஸ் நிறுவணங்கள் தைவான், தென்கொரியாவினை விட்டு வராது. அங்கிருக்கும் அனுபவமும், வாய்ப்பும் அப்படி
ஆனால் விண்வெளிதுறை, ஆயுத உற்பத்தியில் தைவானோ, தென்கொரியாவோ சமத்து அல்ல, ஜப்பானும் இப்பொழுது திருந்திய ரவுடி
இதனால் மிக பெரிய பணம் கொட்டும் ஆயுதம் மற்றும் விண்வெளி துறைக்கு இந்தியாவே மிகபெரும் வாய்ப்பு
இதை உணர்ந்த உலக நாடுகள் இந்தியாவினை நோக்குகின்றன , இந்திய அரசும் நாங்கள் தயார் என பச்சைகொடி காட்டுகின்றது
"காற்றுள்ள போதே தூற்றிக்கொள்ள வேண்டும்", "பருவத்தால் பயிர்செய்ய வேண்டும்" என்பதுதான் இந்திய பழமொழிகள்
இந்தியா அதைத்தான் செய்து கொண்டிருக்கின்றது, மிக சரியான நேரத்தில் மிக சரியான விஷயத்தை செய்திருக்கும் நிர்மலாவுக்கு வாழ்த்துக்கள்
நிர்மலா இந்திராகாந்தியின் சாயல். இந்திரா துணிச்சலானவர் ஆனால் தவறுகள் ஏராளம்
கம்யூனிஸ்ட் நாடான சீனாவினை எதிர்த்து அவர் அமெரிக்க அணியில் சேராமல் ரஷ்ய பக்கம் சேர்ந்தார், விளைவு சீனாவினை அணைத்தார் அமெரிக்க அதிபர் நிக்சன்
அன்று அமெரிக்க பக்கம் இந்தியா சாய்ந்திருந்தால் சீனாவில் ஏற்பட்ட வளர்ச்சி இங்கும் நடந்திருக்கலாம், இந்திரா அதை தவறவிட்டார்.
இன்று நிர்மலா சீத்தாராமன் காலம் பார்த்து அந்த தவறை திருத்தி கொண்டிருக்கின்றார், இனி இந்தியா மிக வேகமாக முன்னேறும், முன்னேற வேண்டும்
இதற்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டியது இந்தியர் கடமை
மற்றபடி அய்யயோ தனியார் மயம் என சொல்பவன் சொல்லிகொண்டே இருப்பான், ஆனானபட்ட ரஷ்யாவே தனியார் மயமே நாட்டின் துரித கதிக்கு வளர்ச்சி என என்றோ மாறிய பின், சீன அரசின் கண்காணிப்புக்கு உட்பட்ட தனியார்மயமே சீனாவின் அசுரவளர்ச்சிக்கு காரணம் என உலகம் அறிந்தபின் இந்த அரைவேக்காட்டு சத்தம் சரியானதல்ல
இன்று கணிப்பொறி துறைமுதல் எவ்வளவு தனியார் துறைகள் வேலை வாய்ப்பை வழங்குகின்றன, டாட்டாவும் அம்பானியும் கொடுத்திருக்கும் வேலை என்ன?
வேலை என பார்ப்பதை விட இவர்களால் அரசு பெறும் வரி என்ன? அந்த வரி யாருக்கு திரும்ப வரும், நமக்கேதான் நலதிட்டம் என வரும்
இப்படி யோசியுங்கள் நிர்மலாவின் பொருளாதார நடவடிக்கைகளுக்கு மனமார்ந்த ஆதரவினை தெரிவிப்பீர்கள், நாம் தெரிவித்து கொண்டிருக்கின்றோம்.
தேசம் கொரோனா காலத்தில் சிக்கிவிட்ட இந்த கொடும் நேரத்தில் எதிர்கால திட்டத்தை நிறுத்தி, அப்பணத்தை இங்கே இறக்கிவிட்டு, இன்னும் சில ஆண்டுகளில் அதை மீட்டு மறுபடி திட்டத்தை தொடர வகுக்கபடும் வியூகம் இது
இந்திரா செய்த தவறுகளை மிக சரியாக காலம்பார்த்து திருத்தி கொண்டிருக்கின்றார் நிர்மலா, அவர் டாஸ்மாக் திறக்கவில்லை, இன்னும் பல அழிச்சாட்டிங்களை செய்யவில்லை
நாட்டில் எது நல்ல வேலைவாய்ப்போ அதை ஊக்குவிக்க வழிசெய்கின்றார், அவரை டாஸ்மாக் கியூவில் டோக்கனுடன் நிற்பவன் விமர்சிக்கின்றான்என்பதுதான் சோகம்
காலம் கொடுத்த மிக பெரும் கொடை நிர்லமா சீத்தாராமன், அப்பெருமகள் மகா அசாத்திய திட்டங்களோடு இத்தேசத்தை மீட்டெடுக்கின்றார், உலகமே ஸ்தம்பித்து நிற்கும் பொழுது மகா துணிச்சலுடன் நம்பிக்கையுடன் இத்தேசத்தை முன்னெடுக்கின்றார்
அந்த ஸ்ரீரங்கத்து தேவதை இத்தேசத்தை மகா இக்கட்டான நேரத்தில் இத்தேசத்தை காத்துகொண்டிருக்கின்றது.
No comments:
Post a Comment