#கருணாநிதியை போல் இது என் கடைசி தேர்தலாக இருக்க கூடும் என காரணம் சொல்லி அனுதாப ஓட்டு கேட்காமல் , கடந்தகால தவறுகள் இனி நடக்காது என #ஸ்டாலின் போல் மண்டியிட்டு உத்திரவாதம் அளிக்காமல், #மோடியை போல் மதம் , தேச பக்தி , பிற்படுத்தப்பட்ட வகுப்பினன், டீ வித்தவன் என அனுதாப பேச்சு பேசாமல்,
ஆம்
நான் #பாப்பாத்திதான் என சட்டசபையில் சொன்னதாக இருக்கட்டும்
மக்களை அன்போடு அதட்டி உரிமையோடு செய்வீர்களா , நீங்கள் செய்வீர்களா என ஆட்சி மாற்றத்திற்கு ஓட்டு கேட்டதாகட்டும்..
தப்பு செய்தவன் தன் கட்சிக்காரனாக இருந்தாலும் முகவரி தெரியாத அளவிற்கு தூக்கி குப்பையில் போட்டதாக இருக்கட்டும்...
மோடியா இல்லை இந்த லேடியா என கேட்டதாகட்டும்...
நீங்கள் கொடுக்கும் பத்து நிமிஷத்தில் பேசுவதற்காக நான் #டெல்லிக்கு வரவில்லை என டெல்லி கூட்டத்தில் பேப்பரை தூக்கி வீசி விட்டு கெத்தாக நடந்துவந்ததாக இருக்கட்டும்..😎
ஒற்றை ஓட்டில் ஆட்சியையே கவிழ்த்ததாக இருக்கட்டும்...
கூட்டணிக்காக யார் வீட்டு வாசலுக்கும் போகாமல் இருந்ததாகட்டும்
இப்டி எல்லா விஷயத்திலும் #அம்மா_ஜெயலலிதா ஒரு ஆச்சரியமே...
அரசியல் என்பது ஆளுமை தத்துவம் என தனது ஒவ்வொரு செயலிலும் நிரூபித்தவர் #அம்மா...
No comments:
Post a Comment