“ஊஹான் கொரோனாவைரஸ் விவரங்களை வெளியிடாதீர்கள் என சீன அதிபர் ஷி ஜின்பிங் உலக சுகாதார அமைப்பு தலைவர் டாக்டர் டெட்ரோசிடம் தொலைபேசியில் பேசி கேட்டுக்கொண்டார்” என்பதற்கான ஆதாரங்கள் தங்களிடம் உள்ளதாக ஜெர்மன் உளவுத்துறை அறிவித்துள்ளது.
“டிசம்பரிலேயே உலக சுகாதார அமைப்பை எச்சரித்த தைவானை உலக சுகாதார அமைப்பு மற்றும் ஐ.நாவில் பேச - சீனாவின் எதிர்ப்பை மீறி - அனுமதிக்க வேண்டும்.” என ஆஸ்திரேலியா, கனடா, அமெரிக்கா, ஐரோப்பா, இங்கிலாந்து என அனைத்து நாடுகளும் குரலெழுப்பியுள்ளன - இந்தியாவும் இதை ஆதரிக்கிறது.
“சீனாவிலிருக்கும் நம் நாட்டு நிறுவனங்கள் வெளியேறி பிற நாடுகளில் முதலீடு செய்ய வேண்டும்” என ஜப்பான், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் உத்தரவு.
அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா, இந்தியா, வியட்னாம் போன்றவை கூட்டணி அமைத்துள்ளன சீனாவுக்கு எதிராக.
அமெரிக்க செனட்டில் சீனாவுக்கும் அதன் கைத்தடியாக செயல்பட்ட உலக சுகாதார அமைப்புக்கும் எதிராக தீர்மானங்கள் தயாராகி வருகின்றன.
அமெரிக்க ஐரோப்பிய நீதிமன்றங்களில் ஏற்கனவே சீனாவுக்கு எதிராக, இழபீடு கேட்டு வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன.
சீனாவுக்கு எதிர்காலம் பிரகாசமாக இல்லை. “சீனாவின் இழப்பு இந்தியாவுக்கு லாபம். அதை நிறைவேற விட கூடாது” என்ற ரீதியில் சீனாவும் அதன் இந்திய அடுவருடிகளும் (சு ஸ்வா , கம்யூனிஸ்ட், காங்கிரஸ், முற்போக்கு, ஊடகங்க்ள் உள்ளிட்டோர்) வெளிப்படையாக பேச ஆரம்பித்திருக்கிறார்கள்.
இந்தியாவில் உ.பி, ம.பி, குஜராத், கர்நாடகா, ஹரியானா உள்ளிட்ட பாஜக ஆளும் மாநில அரசுகள் ஏற்கனவே சீர்திருத்தங்களை அறிவித்து வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க தயாராகி வருகிறார்கள்.
இந்தியா வளர்வதை இந்திய எதிர்க்கட்சிகள் முதல் பாகிஸ்தான், நேபாளம், வங்காளதேசம், ஐரோப்பிய ஒன்றிய லிபரல்கள், அமெரிக்க டெமாக்ரட்டுகள், சீனா, மலேசியா, துருக்கி வரை பலரும் விரும்புவதில்லை.
இதற்கிடையில் ஆஃப்கானிஸ்தானிலும் பயங்கரவாதம் ஓய்ந்தபாடில்லை. ஆஃப்கானிஸ்தான் விவகாரத்தில் இந்தியாவின் பங்கீட்டை கேட்கிறது அமெரிக்கா. இதுவும் சிக்கலை பெரிதாக்குகிறது .
இன்று மாலை 4 மணிக்கு நிதி அமைச்சர் பொருளாதார மேம்பாட்டுக்கான ரூ 20 லட்சம் கோடி திட்டத்தை அறிவிக்கவிருக்கிறார்.
2019 தேர்தல் வாக்குறுதியில் பாஜக, ‘2024க்குள் ரூ 100 லட்சம் கோடி முதலீடு’ என்று குறிப்பிட்டிருந்தது நினைவிருக்கும்.
இதை சுலபமாக அடைய விட மாட்டார்கள் இந்திய விரோதிகள். கலகங்கள், கலவரங்கள் எதிர்பார்க்கலாம். என்றாலும், பிரதமர் மோதியின் நடவடிக்கைக்கு உலக நாடுகள் ஆட்சேபம் தெரிவிக்கும் வாய்ப்பில்லை. ஆதரவு கிடைக்க வாய்ப்பு.
தைரியமானவர்கள் மோதி ஜிக்கு பக்க பலமாக நிற்பார்கள்.
No comments:
Post a Comment