யாராலும் எதாலும் முடியலையா எங்கும் நீதி கிடைக்கலையா என் சாமி கேக்கும்..நின்னு கேக்கும் என அப்போதிருந்தே சொல்லி வந்துள்ளது இந்து மதம்..ரொம்ப வேணாம் ஒரு கை மண்ணள்ளி என் ஆத்தா கேப்பா என வாரி விட்டு வந்த சமூகம் நம்முடையது..
அப்படி உதாரணமான கோவில் இது...
திக்கற்றவர்களுக்கு தெய்வமே துணை என்பதற்க்கு உதாரணமாக விளங்கும் சிவகங்கை மாவட்ட "கொல்லங்குடி வெட்டுடையார் காளி"...
பண பலம், அதிகார பலம், ஆள் பலம் மூலம் தண்டிக்க முடியாதவர்களை வெட்டு ஒன்று துண்டு இரண்டாக தட்டிக் கேட்பவள் இந்த காளியம்மன்..எப்படி?
இதோ பார்ப்போம்...
அம்மனின் பூஜைத் தட்டில் ஒரு ரூபாய் நாணயத்தை வைத்து அதன்மீது நம் கையை வைத்தபடி, நம்மை துன்பப்படுத்தியவர்களின் பெயர்களைக் குறிப்பிட்டு, பூசாரி சொல்வது போல் நாம் அதைத் திரும்பக் கூற வேண்டும்.
பூசாரி தெளிவாக அம்மனிடம் எடுத்துக் கூறுவதை நாமும் வாய்விட்டு உரக்க குரல் கொடுத்து அம்மனிடம் முறையீடு செய்ய வேண்டும்.
அதன்பிறகு அந்த ஒரு ரூபாய் நாணயத்தை எடுத்துக்கொண்டு அம்மன் சந்நிதிக்குப் பின்புறம் செல்ல வேண்டும். அங்கே ஒரு சிறிய பீடத்தில் நிறைய வெட்டுப்பட்ட நாணயங்கள் குவிந்துள்ளன. காசுகளை வெட்டுவதற்காக இரும்பு சுத்தியல்கள் இருக்கின்றன. வெட்டுப் பட்ட நாணயங்கள் இருக்கும் பீடத்தைச் சுற்றி ஈட்டிகள் வேலிபோல அமைந்துள்ளன.சுத்தியால் நாம் கொண்டு சென்ற நாணயத்தை ஓங்கி அடித்து வெட்டுப்படச் செய்ய வேண்டும்.
நம் புகார்களையும் கோரிக்கைகளையும் மனதில் நினைத் துக்கொண்டே வெட்டுபட்ட நாணயத்தை அங்கே வைத்துவிட வேண்டும். அதன்பின் நமது வேண்டுதல்கள், நமக்கு தீமை செய்தோரின் பெயர்கள் ஆகியவற்றை எழுதி ஈட்டியில் செருகி, அதன்மீது எலுமிச்சம் பழம் ஒன்றைக் குத்தி வைத்துவிட்டு மறுபடியும் அம்மனை நினைத்து வேண்டிக்கொள்ள வேண்டும். அதன்பின் கோவிலில் உள்ள "சோனையா' எனும் காவல் தெய்வத்திடம் முறையிட வேண்டும்.
குறிப்பாக செய்வினை செய்தோர்,அடுத்தவருக்கு துன்பம் கொடுப்பவர் முதலியவர்களுக்கு எதிராக நாம் வேண்டிக்கொண்டு இங்கு நமக்கு எதிரானவர்களுக்கு நம் பக்கம் நியாயம் இருக்கும் பட்சத்தில் வெட்டுடையார் காளியம்மனும், சோனையா தெய்வமும் இணைந்து நம் துன்பங்களைக் களைவார்கள். அத்துன்பங்களுக்குக் காரணமானவர்களைத் தண்டிப்பார்கள்.
நீதி கேட்டு இந்தக் காளியம்மனிடம் சென்றால் நியாயமான பக்கம் மிகச்சீரான தீர்ப்பு கொடுப்பாள் என்பதை நிரூபணம் செய்யும் வண்ணம் பல உண்மைச் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளது. இது அம்மனின் திருவிளையாடல்களில் ஒன்று'' என்று...நீதிமன்றத் தீர்ப்பு தவறாக இருக்கலாம். ஆனால் இந்த அம்மனின் தீர்ப்பு மிகச் சரியாக இருக்கும்.
பண மோசடி, சொத்து அபகரித்தல், தொழிலுக்கு நேரிடும் இடையூறுகள் போன்றவற்றுக்கு நீதி கேட்டால் தீர்ப்பு வழங்குவார் வெட்டுடையார் காளியம்மன்.
நம் மனதை வருத்துபவர்களை வருந்தச் செய்து திருத்துபவள் இந்தக் காளியம்மன்.
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலில் இருந்து நாட்டரசன்கோட்டை செல்லும் வழியில்
உள்ளது இந்த கோவில் மெயின் ரோட்டில் இருந்து உள்ளே 2கிமீ சென்றால் இக்கோவிலை அடையலாம்.
உள்ளது இந்த கோவில் மெயின் ரோட்டில் இருந்து உள்ளே 2கிமீ சென்றால் இக்கோவிலை அடையலாம்.
No comments:
Post a Comment