Saturday, May 16, 2020

ஊரடங்கு தளர்வு இன்று அறிவிப்பு...

நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்ட மூன்றாம் கட்ட ஊரடங்கு, இன்றுடன் முடிவுக்கு வரும் நிலையில், நாளை முதல் என்னென்ன தளர்வுகள் நடைமுறைக்கு வருகின்றன என்பது குறித்து, மத்திய அரசு இன்று அறிப்பு வெளியிடும் என, எதிர்பார்க்கப்படுகிறது. அதிக பாதிப்புக்கு உள்ளாகி இருக்கும், 30 மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில், அதிரடியாக பல மாற்றங்களை செய்ய, அரசு தயாராகி வருவதாக, தகவல் வெளியாகி உள்ளது.
ஊரடங்கு தளர்வு இன்று அறிவிப்பு...

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, கடந்த மார்ச், 25 முதல், ஏப்ரல், 14 வரை, நாடு முழுதும், ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. பின், கடந்த 3 வரை, இரண்டாவது முறையாகவும், கடந்த 17 வரை, மூன்றாவது முறையாகவும் நீட்டிக்கப்பட்டது.இந்நிலையில், 17க்கு பிறகு சில தளர்வுகளுடன், நான்காம் கட்டமாக, ஊரடங்கு நீட்டிக்கப்பட வாய்ப்பிருப்பதாக, பிரதமர் நரேந்திர மோடி, சமீபத்தில் தெரிவித்தார்.


30 மாநகராட்சி


இன்றுடன் ஊரடங்கு முடிவுக்கு வருவதை அடுத்து, நாளை முதல், என்னென்ன தளர்வுகள் வழங்கப்பட உள்ளன என்பது குறித்து, மத்திய உள்துறை அமைச்சகம், இன்று அறிவிப்பு வெளியிடும் என, எதிர்பார்க்கப்படுகிறது.பச்சை மண்டலங்களில், முழுமையாக தடைகள் விலக்கப்படும் என்றும், ஆரஞ்சு மண்டலங்களில், ஒரு சில தளர்வுகள் மட்டும் அறிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

அதிக பாதிப்புகளை உடைய சிவப்பு மண்டலங்களில், தடை செய்யப்பட்ட பகுதிகளை தவிர, மற்ற இடங்களில், தளர்வுகள் அறிவிக்கப்படலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.
கொரோனா தொற்றுக்கு, மிக மோசமாக பாதிக்கப்பட்ட பகுதிகளாக, நாடு முழுதும், 30 மாநகராட்சி மற்றும் நகராட்சிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
நாட்டின் மொத்த தொற்றில், இந்த பகுதிகளுக்கு மட்டுமே, 80 சதவீத பங்கு இருப்பதாக, புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.இந்த, 30 மாநகராட்சி மற்றும் நகராட்சி பட்டியலில், தமிழகத்தில் இருந்து, சென்னை, திருவள்ளூர், கடலுார், செங்கல்பட்டு, அரியலுார், விழுப்புரம் ஆகியவை இடம் பெற்றுள்ளன.


அழைப்பு



இவை தவிர, மும்பை, புனே, தானே, டில்லி, ஆமதாபாத், இந்துார், கோல்கட்டா, ஜெயப்்பூர் உள்ளிட்ட, 30 மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகள், இடம் பெற்றுள்ளன.
இந்த பகுதிகளில், நாளை மறுதினம் முதல் பின்பற்றப்பட வேண்டிய, தீவிர தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதிப்பதற்காக, அதன் கமிஷனர்களுக்கு, மத்திய அரசு அழைப்பு விடுத்திருப்பதாக கூறப்படுகிறது.
இவர்கள், டில்லியில் மத்திய சுகாதாரத் துறை செயலருடன், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து விவாதிப்பர் என, தகவல் வெளியாகி உள்ளது. 'இந்த கூட்டத்தில், சம்பந்தப்பட்ட 30 நகரங்களில் அமல்படுத்தப்பட வேண்டிய மாற்றங்கள், தடை உத்தரவுகள், மக்கள் நடமாட்டம் மற்றும் சரக்கு போக்குவரத்து கட்டுப்பாடு உள்ளிட்டவை குறித்து, இறுதி முடிவுகள் எடுக்கப்பட்டு, அவை உடனடியாக அமலுக்கு வரும்' என, கூறப்படுகிறது.நாட்டின் பிற பகுதிகளை விட, இந்த, 30 மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில், கடுமையான விதிமுறைகள் தொடரும் என, கூறப்படுகிறது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...