Saturday, May 16, 2020

தேர்தல் வரும் போது....

😅
ஒரு பேட்டிக்கான சந்திப்பில்
தனிப்பட்ட முறையில்
பேசிக் கொண்டு இருந்த போது
காங்கிரஸ் தலைவர்
வாழப்பாடி ராமமூர்த்தி,
மக்களின் மன இயல்பில்
ஏற்பட்டுவிட்ட மாற்றம் குறித்து
இப்படி விளக்கினார்:-
“குடி தண்ணீர் இல்லை.
குழாய் பதிக்க வேண்டும்”
என்பார்கள்.
அதிகாரிகள் பின்னால்
அலைந்து திரிந்து
ஊருக்கு பொதுவான இடத்தில்
குழாய் போடப்படும்.
கொஞ்சம் நாள் கழிந்த பிறகு
“ நாலு தெரு நடந்து போய்
தண்ணீர் எடுக்க கஷ்டப்படுகிறோம்.”
என்பார்கள்.
தேர்தல் காலத்தில் பயன்படுமே என்று,
தெருவுக்கு ஒரு குழாய் போட
ஏற்பாடு செய்யப்படும்.
சில நாட்கள் கழித்து
“ தெரு முனை
வீட்டுகளைச் சேர்ந்தவர்களுக்கு
வசதியாக இருக்கிறது.
மற்றவர்கள் குழாயடியில்
காத்திருக்க வேண்டி இருக்கிறது. “ என்று
அலுத்துக் கொள்வார்கள்.
மக்கள் மனம் குளிர்ந்தால்
ஓட்டுகளாக மாறும் என்ற நினைப்பில்
வீடுகளுக்கு எல்லாம் குடி நீர் இணைப்பு
தர ஏற்பாடுகள் நடக்கும்.
தேர்தல் வரும் போது....
“ குடி தண்ணீர் பிரச்னையை
நான் தான் தீர்த்து வைத்தேன்,
அதை நினைவில் வைத்து
ஆதரவு தர வேண்டும்” என்று
கேட்கும் போது
“ எனக்கு மட்டும் ஸ்பெஷலாவா போட்டாய்?
எல்லோருக்கும் கிடைத்த போது
எனக்கும் கிடைத்தது.
இதில், இவனை நினைவில் வைத்து
ஆதரிக்கும் அவசியம் எங்கே வந்தது?
என்று சிந்திக்கிறார்கள் .
மக்களின் தேவைகளை
நிறைவேற்றி வெற்றி பெறுவது கடினம்.
தேர்தல் நேரத்தில் எதையாவது பேசி,
எதையாவது கொடுத்து
வெற்றி பெறுவது சுலபம் என்று உணர்ந்து
அரசியல்வாதிகளும் தங்களை
மாற்றிக் கொண்டு விட்டார்கள் என்றார்
வாழப்பாடி ராமமூர்த்தி.
# நிர்மலா சீதாராமனின்
தொடர் அறிவுப்புகளில்
எனக்காக மோடி கொடுத்தது என்ன?
தேடல் புதியதல்ல!
ஆனால், இந்த அரசியல்
பழைய அரசியல் அல்ல!
😅

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...