தமிழகத்தில், அரசு அறிவித்துள்ள தளர்வுகள், தொழிற்சாலைகளுக்கான கட்டுப்பாடுகள் குறித்து, அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
அரசாணையில், முதல்வர் பிறப்பித்த தளர்வுகள், விரிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளன. அதன் விபரம்: தொழிற்சாலைகளில், 200 பேர் வரை பணிபுரிந்தால், போன் செய்ததும் வரும் வகையில், டாக்டர்களுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். அனைத்து பணியிடங்களிலும், 200 முதல், 1,000 ஊழியர்கள் வரை இருந்தால், உள்ளூர் டாக்டர், இரண்டு நாட்களுக்கு ஒரு முறை, அங்கு செல்ல வேண்டும்.
ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் இருந்தால், தினமும் டாக்டர் வந்து, அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும். எல்லா ஊழியர்களும், அந்தந்த நிறுவனத்தின் வாகனத்திலேயே, அழைத்து வரப்பட வேண்டும். வாகனத்தில், மொத்த இருக்கையில், 50 சதவீத ஊழியர்களை மட்டுமே அழைத்து வர வேண்டும். கார், ஜீப் போன்றவற்றில், டிரைவர் மற்றும் இருவர் மட்டும் வர வேண்டும்.
இரு சக்கர வாகனத்தில், ஒருவர் மட்டும் வர வேண்டும். வாகனங்கள் மீது, கிருமி நாசினி தெளிக்க வேண்டும். பணியிடத்திற்கு வரும் அனைவரின், உடல் வெப்ப நிலையையும் பரிசோதிக்க வேண்டும். அனைவரும் முகக் கவசம் அணிய வேண்டும். கைகளை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும். அவசியமின்றி, பார்வையாளர்களை அனுமதிக்கக் கூடாது.
'லிப்ட்' தவிர்த்து, மாடிப் படிகளில் ஏறுவதை, ஊக்கப்படுத்த வேண்டும். லிப்ட் அளவை பொறுத்து, மூன்று அல்லது நான்கு பேர் மட்டும் செல்ல வேண்டும். ஐந்து வயதிற்கு உட்பட்ட குழந்தை உள்ளோர், 55 வயதிற்கு மேற்பட்டோர் ஆகியோரை, வீட்டிலிருந்து பணி செய்ய, அறிவுறுத்த வேண்டும்.
பணியிடத்தில், உணவு அருந்தும் போது, சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். பணியிடத்தில், யாருக்கோனும் தொற்று உறுதியானால், அவரை மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும். அவருடன் தொடர்பிலிருந்தோர், வீட்டில் தனிமைப்படுத்தப்பட வேண்டும். பணியிடம், மூன்று நாட்கள் மூடப்பட்டு, கிருமி நாசினி தெளிக்கப்பட வேண்டும். அதன்பின்னரே, மீண்டும் பணிகளை துவக்க வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment