Sunday, May 3, 2020

கறுப்புப் பணம்!

2002 முதல் 2011 வரை, காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின் போது, சுமார் 34304 மில்லியன் டாலர் பெறுமானமுள்ள கறுப்புப் பணத்தை, நம் நாட்டின் பண முதலைகள் , அயல் நாடுகளில் பதுக்கி வைத்துள்ளது இப்போது மத்திய அரசுக்குத் தெரிய வந்துள்ளது. இது முழுதையும் கைப்பற்ற முடிந்தால், நம் ஒவ்வோர் இந்தியனின் வங்கிக் கணக்கிலும் பல லட்சங்கள் போட முடியும் என்பதும் உண்மைதான்.
அயல் நாடுகளில் நம் மக்கள் சிலர் பதுக்கி வைத்துள்ள கோடிக் கணக்கான கறுப்புப் பணமும், அதனைக் கொண்டு வாங்கப் பட்டுள்ள பினாமி சொத்துக்களும், பண மோசடியின் விளைவாக குவிக்கப் பட்டுள்ளவை தான் எனத் தெரிந்தால், அவை, அந்தந்த அன்னிய நாடுகளால், கைப்பற்றப்பட்டு, நம் அரசிடம் ஒப்படைக்கபட வழிமுறைகளை இப்போது வருமான வரித்துறையும், மற்ற புலனாய்வு துறைகளும் கண்டு பிடித்து விட்டன.
கடந்த சில நாட்களாக, நம் பிரதமர் மோடி அயல்நாட்டில் பதுக்கி வைக்கப் பட்டுள்ள கறுப்புப் பணத்தை உடனே மீட்டுக் கொண்டு வர , ரகசிய ஏற்பாடுகளை செய்து வருவதாகக் கேள்வி! அயல் நாடுகளில் கறுப்புப் பணத்தைக் குவித்து வைத்துள்ள இந்தியர்களின் பட்டியல் இப்போது தயாராகி விட்டதாம்! நேரடி வரிகள் ஆணையகத் தலைவர் சுஷில் சந்திரா கறுப்புப் பணத்தை மீட்க, சூத்திரதாரியாக நியமிக்கப் பட்டுள்ளாராம். அவர் கையில் சுமார் 10 ஆயிரம் பேரின் பட்டியல் இப்போது இருக்கிறதாம். நிதி புலனாய்வுப் ( Revenue Intelligence) பிரிவின் பெரிய, நாணயமான அதிகாரிகள் மிகவும் கஷ்டப்பட்டு, இந்தப் பட்டியலைத் தயாரித்து உள்ளனராம். கூடுமானவரை சம்பந்தப் பட்ட எல்லா நாடுகளுமே, நம் அரசுக்கு உறுதுணையாக இருந்து உதவ சம்மதித்து விட்டனவாம்.
இப்பட்டியலில் உள்ள நபர்களுக்கு கூடிய விரைவில் நோட்டீஸ் அனுப்பப் படுமாம். அதில், கறுப்புப் பண பரிமாற்றம் பற்றி நிரூபிக்கப் பட்டால், 10 வருஷக் கடுங்காவலும், 120% அபராதமும், அபராத வரியும் தண்டனையாக வைக்கப் படுமாம்.
மோடிஜி, கொரொனா சம்பந்தப்பட்ட விஷயங்களை அனுபவம் மிக்க தன் அமைச்சரவை சகாக்களிடம் கொடுத்து விட்டு, இரவு பகலாக, கறுப்புப் பண மீட்பு விஷயத்தில் தன் கவனத்தை மொத்தமாகச் செலுத்தி வருவதாகத் தெரிகிறது. “கறுப்புப் பணம் மற்றும் வரி விதித்தல் சட்டம் 2015 போன்ற சட்டங்களில், கறுப்புப் பண மீட்புக்கான திருத்தங்கள் வரலாம். பணப் பரிவர்த்தனைகள் சம்பந்தமாக வருமான வரி அறிக்கையில் மோசடி செய்திருந்தாலோ, வரி ஏய்ப்பு செய்துள்ளதாகத் தெரிந்தாலோ, விளைவுகள் மிகக் கடுமையாக இருக்கும் எனத் தெரிகிறது. பணத்தைக் கொள்ளை அடித்து பதுக்கி வைத்து உள்ளே போவதை விட, குற்றத்தை ஒத்துக் கொண்டு, கொரொனா நிதிக்கு அனைத்துக் கறுப்புப் பணத்தையும் கொடுத்து விடுவது நல்லது அல்லவா?
இப்போது மத்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளால், கறுப்புப் பணம் ஒழியவும், குவிக்கப் பட்டுள்ள கறுப்புப் பணம் பொதுக் காரியங்களுக்குப் பயன்படவும், வழிகள் கிடைக்கும் எனச் சொல்லுகிறார்கள்.
யார் யார் வயிற்றில் எல்லாம் புளி கரைகிறதோ?
ஜெய் ஹிந்த்!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...