Sunday, May 3, 2020

ஜீ கே சப்போர்ட் இல்லைனா சாதாரண உறுப்பினர்க்கு எப்படி சப்போர்ட் கிடைக்கும்.

தமிழக பாஜகவில் திரு.கல்யாண்ராமன் அவர்களை பாஜக தொண்டர்கள் அனைவருக்கும் தெரியும். ஆனால் திரு. கல்யாண்ராமன் எந்தப் பொறுப்பிலும் இல்லை. சமூக வலைதளங்களில் அவர் கூறும் கருத்துக்களுக்கும் பாஜகவுக்கும் எந்த தொடர்பும் இல்லை திரு. நரேந்திரன் அறிக்கை விட்டது ஏன் என பாஜக தொண்டர்கள் தலையைப் பிய்த்துக் கொண்டுள்ளனர்.
தமிழக பாஜகவில் எந்த கோஷ்டி அரசியலிலும் சிக்காமல் தமிழகம் தாண்டி தனக்கென ஒரு தொண்டர்கள் கூட்டத்தை உருவாக்கி வைத்திருப்பது பாஜக தேசிய செயலாளர் திரு.ஹெச்.ராஜாவுக்கு இணையாக இருப்பவர் திரு.கல்யாண்ராமன்.
இவர்கள் இருவரும் தேர்ந்தெடுத்து பயணிக்கும் ஹிந்துத்துவா கொள்கைக்கும் எதிர்க்கட்சியினரின் பாஜக மீதான எதிர்மறை விமர்சனங்களுக்கும் உடனுக்குடன் தக்க பதிலடி கொடுப்பவர்கள். தொண்டர்களுக்கு ஒரு சிறு பிரச்சினை என்றாலும் ஓடி வந்து உதவுவார்கள். இதனாலேயே பாஜக தொண்டர்கள் மத்தியில் இருவர் மீதும் மிக அபரிதமான மதிப்பும் மரியாதையும் உண்டு.
இப்படிப்பட்ட நிலையில் திரு.கல்யாண்ராமன் அவர்கள் எந்தப் பொறுப்பிலும் இல்லை. அவரது கருத்துக்கும் கட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை என பாஜக மாநில பொதுச்செயலாளர்
திரு. நரேந்திரன் அவர்கள் அறிக்கை விட்டிருப்பது அவரது தொண்டர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
திரு. கல்யாண்ராமன் கடந்த சில நாட்களாக தனது முகநூல் பக்கத்தில் கொரோனா தொற்று பீதியால் ஊரடங்கு அமுலில் இருக்கும் நிலையில் ரமலான் நோன்பு என்ற பெயரில் இஸ்லாமியர்கள் கூட்டமாகத் தொழுவது பற்றியும் நோன்புக்கஞ்சி விநியோகம் செய்வது, காவல் துறையால் மூடப்பட்ட பஜ்ஜி கடைகளைத் திறக்கச்சொல்லி சாலைமறியல் போராட்டம் செய்தது பற்றியும் விமர்சனம் செய்திருந்தார்.
மேலும் கொரோனா தொற்று அறிகுறியே இல்லாமல் அறியாமல் சிலர் செய்யும் தவறுகளுக்காக லட்சக்கணக்கானோர் கைது செய்யப்பட்டு வழக்கு பதிந்தும் லட்சக்கணக்கான வாகனங்களை பறிமுதல் செய்தும் அபராதம் விதித்தும் நடவடிக்கை எடுத்த தமிழக எடப்பாடி அரசு இப்படி அதிகம் கொரோனாவால் பாதிக்கப்பட்ட இஸ்லாமியர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் கைகட்டி வேடிக்கை பார்ப்பது ஏனோ என அவரது பாணியில் எழுதி வந்தார்.
இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த எடப்பாடி அரசு அவரது விமர்சனத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என பாஜக தமிழக தலைமையிடம் அழுத்தம் கொடுத்ததாகவே தொண்டர்களால் பார்க்கப்படுகிறது.
ஆனால் அனைத்து மட்டத்திலும் உள்ள பாஜக தொண்டர்களோ திரு.ஹெச்.ராஜா மற்றும் கல்யாண்ராமன் அவர்களுக்கு ஆதரவாக மாநில தலைமை இருந்தால் மட்டுமே தான் தமிழகத்தில் பாஜக வளரும். இது மாநிலத் தலைமைக்கு எப்போது புரியுமோ என ஆதங்கத்தில் உள்ளனர்..!
இந்நிலையில் "கோழி மிதித்து குஞ்சு சாவதில்லை ..கருத்து வேறுபாடுகள் இயல்பானவை. இது நமது பயணத்திற்கான தடைக்கற்கள் அல்ல" என தனது தொண்டர்களுக்கு மீண்டும் முகநூல் வாயிலாகத் தெரிவித்துள்ளார்..

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...