Monday, February 1, 2021

நாட்டில் சகிப்பு தன்மை குறைந்து விட்டது.

 சீனாவில்

வாட்சப் இல்லை

பேஸ்புக் இல்லை

ட்விட்டர் இல்லை..

தணிக்கை இல்லாத

சமூக வலை தளங்கள்

இல்லை..

கருத்து சுதந்திரம் பேசினால்

கழுத்துக்கு மேல்

தலை இல்லை..


எதற்கெடுத்தாலும் அரசை 

குற்றம் சொல்ல கூடிய

நாளிதழ்கள் இல்லை,

வார இதழ்கள் இல்லை,

செய்தி டிவிக்கள் இல்லை...

ஜனநாயக குரல் எழுப்பினால்

டாங்கிகளால்

நசுக்கி அரைக்கப்படும்

உன் உடலும்

உன் குடும்பத்திற்கு இல்லை...


எதிர்க்கட்சிகள் இல்லை,

போராளிகள் இல்லை,

சிந்தனையாளர்கள் இல்லை,

சமூக ஆர்வலர்கள் இல்லை,

சிறையில் அடைக்கப்பட்ட

மனித உரிமை அமைப்பினர்

எங்கிருக்கிறார்கள் என

தகவலே இல்லை...


தேவாலயங்களில்

இயேசு படம் வைக்க

அனுமதி இல்லை..

இஸ்லாமிய அடையாளங்களுக்கு

தேவை இல்லை,

தொழுகை நடத்த

நேரம் கொடுப்பது இல்லை...

நாட்டில் சகிப்பு தன்மை

குறைந்து விட்டது என

கடிதம் எழுத

பிரபலங்கள் இல்லை...


தேர்தல் இல்லை,

வாக்கு சாவடி இல்லை,

ஓட்டு இல்லை...

மக்கள் தேர்வின்றி

அதிபராக தொடரும்

அவரை

கோ பேக் சொல்ல

சீனாவில்

ஒருவருக்கு கூட 

தைரியம் இல்லை...


ஒரு நாட்டை

வல்லரசாக்க

இத்தனை சர்வாதிகாரம்

தேவைப்படும்போது...


இங்கே

அளவுக்கு மீறிய

ஜனநாயகத்தை

அள்ளி கொடுத்து விட்டு

நெருப்புடன் வாதாடி,

நக்சல் பாம்புகளுடன்

போராடி,

நம் நாட்டை

நல்லரசாக்க பாடுபடும்

மோடி

உண்மையிலேயே ஒரு

மாமனிதர் தான்...


என்றும் தேசப்பணியில்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...