Tuesday, February 2, 2021

*நம் உடலை நேசிப்போம்.....*

 *

🤔🧘‍♀️💖உடலின் மொழி💖🧘‍♂️🤔*
1. உடல் - உணவை கேட்கும் மொழி - *பசி*
2. உடல் - தண்ணீரை கேட்கும் மொழி - *தாகம்*
3. உடல் - ஓய்வை கேட்கும் மொழி - *சோர்வு, தலைவலி*
4. உடல் - நுரையீரலை தூய்மை செய்யும் மொழி - *தும்மல், சளி, இருமல்.*
5. உடல் - உச்சி முதல் பாதம் வரை உள்ள கழிவுகளை வெளியேற்றுகிறேன் என்று சொல்லும் மொழி - *காய்ச்சல்*
6. உடல் - காய்ச்சலின் போது உணவை உண்ணாதே என்று சொல்லும் மொழி - *வாய் கசப்பு மற்றும் பசியின்மை*
7. உடல் - காய்ச்சலின் போது நான் உடலை தூய்மை செய்கிறேன், நீ எந்த வேலையும் செய்யாதே என்று சொல்லும் மொழி - *உடல் அசதி*
8. உடல் - எனக்கு செரிமானம் ஆகாத உணவை நான் வெளியேற்றுகிறேன் என்று சொல்லும் மொழி - *வாந்தி*
9. உடல் - நான் குடல்களில் உள்ள கழிவுகளை வெளியேற்றுகிறேன் என்று சொல்லும் மொழி - *பேதி*
10. உடல் - இரத்தத்தில் உள்ள நச்சை நான் தோல் வழியாக வெளியேற்றுகிறேன் என்று சொல்லும் மொழி - *வியர்வை*
11.. உடல் - நான் வெப்பநிலையை சீர் செய்து இரத்தத்தில் உள்ள நச்சை முறிக்கப்போகிறேன் என்று சொல்லும் மொழி - *உறக்கம்*
12. உடல் - நான் முறித்த நச்சை இதோ வெளியேற்றுகிறேன் என்று சொல்லும் மொழி - *சிறுநீர் கழித்தல்*
13. உடல் - உணவில் உள்ள சத்தை பிரித்து இரத்தத்தில் கலந்து, சக்கையை வெளியேற்றுகிறேன் என்று சொல்லும் மொழி - *மலம் கழித்தல்*
எனவே நாம் அனைவரும் உடலின் மொழி அறிந்து, நமக்கு ஏதேனும் உடல் உபாதைகள் ஏற்பட்டால் அதை உடனே மருந்தோ, மாத்திரையோ கொண்டு தடை செய்ய வேண்டாம்.
உடல் தன் வேலையை சீராக செய்ய நாம் அனுமதித்தால் தான், நாம் நோய் எனும் பிணியில் இருந்து விடுபட்டு ஆரோக்கியமாகவும், மகிழ்ச்சியாகவும் வாழ முடியும்.
நாம் அனைவரும் முதலில் நம் உடலை நேசிப்போம், நம் உடல் உள் உறுப்புகளை நேசிப்போம், நாம் நம்மை நேசிப்போம்.
நாம் வெளி உறுப்புகளுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கின்றோமோ, அதே அளவிற்கு நம் உள் உறுப்புகளின் உணர்வுகளும், மொழிகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அப்போதுதான் நாம் ஆரோக்கியமாகவு
ம், அழகான தோற்றத்துடனும் இருக்க முடியும்.
*நம் உடலை நேசிப்போம்.....*
😁🤗🧘‍♀️🧘‍♀️🧘‍♀️🧘‍♀️🧘‍♀️💖💖🧘‍♂️🧘‍♂️🧘‍♂️🧘‍♂️🧘‍♂️🤗😁
May be an illustration of 1 person

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...