Sunday, February 28, 2021

எங்கே பிராமணன்?

 இன்றைய பிராமணர்களின்

பிரம்மிப்பூட்டும் பிராமண வாழ்க்கை!
பெரும்பலான பிராமணர்களின் இன்றைய வாழ்க்கைமுறை கவலையளிக்கிறது.
1) குடுமி கிடையாது.
2) வேஷ்டி கிடையாது - பஞ்ச கச்சம் கட்டுவதில்லை. மாமிக்கும் மடிசாரு கிடையாது (கட்டத் தெரியாது?)
3) நெற்றியில் வீபூதி கிடையாது.
4) சந்தியாவந்தனம் விட்டுவிட்டோம்.
5) கணவனை இழந்த பாட்டிகள் மொட்டை அடித்துக் கொள்வது போயே போயிற்று.
6) உபநயனம் சரியான வயதில் கிடையாது.
7) பூணூல் போட்டுக் கொள்வதில்லை.
8) காலையில் நீராடியபின், சந்தியாவந்தனம் ஆனபின் சாப்பிட வேண்டும்.?
9) பூண்டு, மசாலாக்கள் சேர்கிறோம்.
10) நிலத்தில் உட்காரந்து சாப்பிடுவில்லை.
11) சோபாவில் உட்காரந்து கையில் தட்டு வைத்துக் கொண்டு சாப்படுகிறோம்.
12) பரிசேஷணம் கிடையாது.
13) தூங்குவதும் லேட். எழுந்திருப்பதும் லேட்.
14) பெரியோர்களைப் பார்த்தால் நமஸ்கரிப்பதில்லை.
15) அப்படியே நமஸ்கரித்மாலும்
அபிவாதையே...சொல்வதில்லை.
15a) வெளியில் சென்று திரும்பியதும் கால்கள் அலம்புவதில்லை.
16) Toilet use பண்ணியபின் கால் அலம்பாமல் வருகிறோம்.
17) கோயிலுக்கு காலையில் செல்லும் போது நன்றாக வயிறு முக்க சாப்பிட்டே செல்கிறோம்.
18) தாத்தா, பாட்டி பெயர் சம்பிரதாயமே! அவர்களாக கூகுள் மூலம தேர்ந்தெடுத்து வைக்கின்ற சமஸ்கிருத பெயரையும் முழுவதுமாக அழைப்பதில்லை. சுருக்கி அழைக்கும போது அதன் அர்த்தமே மாறுகிறது.
19) திவசம் செய்வதில்லை.
20) ஒளபாசனம் மறந்தாயிற்று.
21) காசிக்கு போய் திவசம் செஞ்சாச்சு. ஆத்தில் திவசம் தேவையில்லை என நமக்கு நாமே சாதகமாக நாமே தீர்ப்பு சொல்கிறோம்.
22) வேற்று ஜாதி பெண்ணை மணக்கும்போது திவசம் செய்யும் உரிமை கிடையாது. இதை நாம் பிள்ளைகளுக்கு உணர்த்துவதில்லை. அவர்களும் அதை மதிப்பதில்லை.
23) நாம் எந்த வேதத்தை சேர்ந்தவர்கள்,
கோத்திரம், நட்சத்திரம் தெரியாது.
24) தீபாவளியன்று சீக்கிரம் எழுந்திருப்பில்லை. எண்ணை தேய்த்து குளிப்பதில்லை. சாஸ்திரத்திற்கு ஒன்றிரண்டு பட்சணம் - ஆத்திற்கு மட்டும் போதும் என்று கடையிலிருந்து பட்சணங்கள்.
25) கோலம் போடுவது குறைவு. அந்த வேலை வேலைக்காரிக்குரியது.
26)பிறந்த நாள் ஆங்கில முறைப்படி கொண்டாடுகிறோம். கோவிலுக்கு செல்வதில்லை.
27) குழந்தைகள் பிறந்த நாளை தடபுடலாக கேக் வெட்டி ஓட்டலில் கொண்டாடுகிறோம். ஆத்தில் பாயாசம் கூட வைப்பதில்லை.
28) மசாலா பூரி, சமோசா வாங்கி வருகிறோம். அதனை வயதான, பழங்கால முறைகளை கடைப் பிடிக்கும் பெற்றோர்களையும் சாப்பிடும்படி வற்பறுத்துகிறோம்.
29) எச்சல், தீட்டு, மடி பார்ப்பதில்லை.
30) அந்த 3 நாட்கள் என்பது கிடையாது.
31) மாதாந்திர தர்பணம் / மஹாளய தர்பணம் கிடையாது.
32) இறந்து போனவர்களுக்கு 13 நாட்கள் காரியம் தொடர்ந்து செய்வதில்லை. முதல்நாள், 3ம் நாள், பின் 9திலிருந்து ஆரம்பம்.
33) மாலை விளக்கேற்றிய பின், கண்ணாடி முன் தலை வாருகிறோம்.
34) ஷவரம், முடிவெட்டுதல், நாள், கிழமை பார்ப்பதில்லை.
35) ஏன்னா என கூப்பிடுவது இல்லை. பெயர் சொல்லி கூப்பிடுகிறோம்.
36) பஞ்சாங்கம் பார்க்க தெரியாது.
37) நம்முடைய பழக்க வழக்கங்கள், சடங்குகள், சம்பிரதாயங்கள இக்காலத்து இளுசுகளுக்கு (ஏன் பெரிசுகளுக்கே) தெரிவதில்லை.
38) காபி குடிக்கக் கூடாது, பட்டு வஸ்திரம் கூடாது என்றார் மஹா பெரியவா. கேட்டோமா?
மிக முக்கியமானது!
A) பொய் சொல்லக் கூடாது,
B) அடாவடித்தனம் கூடாது. பிறரை ஏமாற்றி மோசம் செய்யக் கூடாது.
(C) புகைப் பிடித்தல், மது அருந்ததுதல் கூடவே கூடாது. பெற்றோரை மதித்தல், உடன் பிறந்தோரை அன்புடன் மதிப்புடன் நடத்தல். உயிர்கள் அனைத்திலும் அன்புடன் இருத்தல்.
☝A, B, C இவைகள் இருந்தாலே போதும. இவைகளுடன் மேற்கூறிய வாழ்கைமுறையும் இணைந்தால் இன்னும் மட்டற்ற மகிழ்ச்சியான, ஆனந்த வாழ்க்கையே!.
பெரும்பாலான பிராமணர்கள் எவ்வாறுள்ளனர் என எழுதியுள்ளேன். நிறைய, நிறைய பிராணர்கள் செல்வந்தர்களாக மட்டுமில்லை, ஒழுக்க சீலர்களாக மட்டுமில்லை, மிக உயர்ந்த பதவியில் இருந்தும், நம் சம்பிரதயங்ளை விட்டுக் கொடுக்காமல், இனிய பிராமண வாழ்கை வாழ்கிறார்கள். அவர்களுக்கு எனது மனமார்ந்த, சிறம் தாழ்த்திய நன்றிகள்.
இவ்வளவு எழுதியுள்ளானே இவன் நிறைய விஷயங்களை சிரத்தையுடன் கடைபிடுப்பவனோ என (என்னைப் பற்றி தெரியாதவர்கள்) நினைக்கலாம். தாழ்மையுடன் கூறுகிறேன் இல்லையென. சில ஏற்கனவே கடைபிடித்து வந்துள்ளவைதான். இன்னும் சில, நான் உத்யோகத்திலிருந்து ஓய்வு பெற்ற பின் கூடியவரை கடைபிடிக்க ஆரம்பித்துள்ளேன். சிராத்த காரியங்கள் எனதருமை மனைவியின் சிரத்தையுடன் கூடிய உழைப்பால் திவசங்கள் செய்ய முடிகிறது.
மதிற்பிற்குரிய என் அக்கா, அத்திம்பேர் (பெற்றோரை சிறு வயதிலேயே இழந்த) என்னை ஒரு நல்லவனாக வளர்ந்ததாலும், எனதருமை மனைவியின் துணையுடனும், நல்ல மனதுடன், நல் வழியில் வாழ்க்கை நகர்கிறது. நல்லவராக இருந்து,கூடிய வரை நம் முன்னோர்கள் வாழ்ந்த வாழ்க்கைமுறையை பின்பற்றினால் குடும்பத்தில் மகிழ்ச்சி பன்மடங்காக உயரும் என்பதில் எனக்கு சந்தேகம் துளியும் கிடையாது.

வாழ்க வளமுடன்!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...