Wednesday, February 24, 2021

அனைவருக்கும் தெரியும்படி உயர்த்தினார்...

 கவலைப்படும் பழக்கம் ஒரு நோய். கவலை எனப்படுவது தொடக்கத்தில் ஒரு பழக்கமாகி, பின்னால் அதுவே ஒரு நோயாக ஆகிவிடுகிறது என்கின்றனர் உளவியல் ஆளர்கள்...

அதாவது!, கவலைப்படுவது என்பது ஒருவனது இயல்பு, குணம் என்றாகி விடுகிறது. பயம், நடுக்கம், கவலை என்பதெல்லாம் பிறர் உருவாக்குவதில்லை. நாமே உருவாக்கி கொள்கிறோம்...
நம்முடைய அறியாமையால் உருவாக்கிக் கொண்டு அவதிப்படுகிறோம். ஒவ்வொருவனின் தலை மீதும் இரண்டு சுமைகள். அதுவே அவனை அவதிக்கு உள்ளாக்குகின்றன...
ஒன்று!, கடந்த காலத்தில் அவன் பட்ட துன்பங்களின் மறு நினைவு. மற்றொன்று எதிர்காலத்தில் என்ன ஆகுமோ என்ற அச்ச விளைவு.
வெற்றியை விரும்புவோர் இந்த இரண்டு சுமைகளை யும் தூக்கி தூர எறிந்து விட்டு, வாழ்க்கையை அனுபவிக்கவும், அதை முன்னோக்கிச் செலுத்தவும் கற்றுக்கொள்ள வேண்டும்...
உளவியல் அறிஞர் வழக்கம் போல் கணினித் துறை பணியாளர்களுக்கு மன இருக்க மேலாண்மை குறித்து பாடம் எடுத்து கொண்டிருக்கிறார்...
எளிமையாக அனைவரிடமும் கலந்துரையாடிக் கொண்டே மேசையின் மீது வைக்கப் பட்டிருந்த தண்ணீர் நெகிழ்பானின் மூடியை திறந்து பக்கத்தில் வைத்து இருந்த கண்ணாடி குடுவையில் நீரை ஊற்றினார்.
குடிப்பதற்கு தான் தண்ணீர் ஊற்றுகின்றார் என அனைவரும் எண்ணிக் கொண்டிருக்கும் வேளையில், அதைக் குடிக்காமல் கையில் எடுத்து அனைவருக்கும் தெரியும்படி உயர்த்தினார்...
இந்த கையில் வைத்து இருக்கும் தண்ணீர் அளவு எவ்வளவு இருக்கும் என வினவினார்...?எல்லோரும் ஒவ்வொரு அளவைக் கூறினார்கள்...
நீங்கள் கூறும் அளவுகளில் ஏதேனும் ஒன்றேனும் உறுதியாக இருக்கும். ஆனால்!, நான் இதை எவ்வளவு நேரம் இதை இப்படியே கையில் உயர்த்திப் பிடித்துக் கொண்டிருக்க இயலும்...
ஒரு விநாடிகள் வைத்திருந்தால் ஒன்றும் ஆகாது. ஒருவேளை ஒரு மணி நேரம் வைத்திருந்தால் எனது கை வலிக்கும்.
அனால்!, நான் இதை நாள் முழுக்க இப்படியே வைத்திருந்தால் என் நிலை என்ன ஆகும் என ஆலோசியுங்கள். நம் கவலையும் இப்படித்தான். ஒரு சில வினாடிகள் நினைத்து வருந்தினால் ஒன்றும் ஆகாது...
ஒருவேளை ஒரு சில மணிநேரம் என்றால் மனதை பாதித்து விடும். எப்பொழுதுமே நினைத்துக் கொண்டிருத்தால் நமது வாழ்வின் ஏற்றத்தையே அழிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு விடுவோம்...
இந்த உரையை கேட்ட அரங்கம் கரவோசைகளால் நிரம்பியது...
*ஆம் நண்பர்களே...!*
🟡 *கவலையைப் பற்றி மட்டுமே நினைத்துக் கொண்டிருந்தால், மற்ற இன்பங்கள் காணாமல் போய் விடும்...!*
🟡 *கவலைகளை கனமாக தாங்கிக்கொண்டு, நம்மை நாமே துன்பப்படுத்திக் கொள்ள வேண்டியதில்லை...!*
🔴 *கவலைகளை நம்முடைய மனத்துக்குள்ளேயே போட்டு அழுத்தி வைக்க, வைக்க அதன் அழுத்தம் பல மடங்கு மிகுதியாகி விடும். இதனால் கவலைகளாய் மனச்சோர்வும், மனச் சோர்வினால் மேலும் கவலைகளும் ஏற்படலாம்...!!*
🔴 *எதற்கு, எது காரணம் என்கிற ஆராய்ச்சியை விட்டுவிட்டு இரண்டலிருந்தும் விலகி நின்று, வாழ்க்கைப் சிக்கல்களை எப்படி வெற்றிகரமாக கையாள்வது என்பதே முக்கியம்...!!*
⚫ *ஆம்!, கவலைகள் ஒருவனின் உடலில் இருக்கும் மின்சார சக்தியை உறிஞ்சி விடுகின்றன. ஆகவே!, நீங்கள் ஒரு போதும் கவலைப்படும் மனிதனாக உருவெடுக்காதீர்கள்...!!!*
⚫ *நீங்கள் வெற்றியாளராகும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்ள விரும்பினால் கவலைப்படும் பழக்கத்தை உடனே மாற்றிக் கொள்ளுங்கள். எனவே!, மனதில் உள்ள கவலையை களைத்து எறியுங்கள். ஒவ்வொரு வினாடியும் அனுபவித்து கொண்டாடுங்கள்...!!!*
நன்றிகளும்
பிரியங்களும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...