Monday, February 1, 2021

சீக்கியர்களை தொடுவது என்பது சாதாரணம் அல்ல.

 ஒரு வழியாக தனக்கு முன்னால் எழுந்த பெரும் நெருப்பினை அணைத்து விட்டு நிம்மதி பெருமூச்சு விடுகின்றது மத்திய அரசு


காரணம் சீக்கியர்களை தொடுவது என்பது சாதாரணம் அல்ல, அவர்களை கையாள்வது பிடியில்லா கத்தியினை கையாள்வது போல சிக்கலானது


உண்மையில் அவர்கள் இந்துக்களின் ஒரு பிரிவு, மொகலாயர் உள்ளிட்ட ஆப்கானியரின் படையெடுப்பிலும் கொள்ளையிலும் மிக வெறுப்புற்ற அவர்கள், இந்து அரசர்களெல்லாம் வட இந்தியாவில் இனி எழ வாய்ப்பே இல்லை என்ற காலத்தில் , பல வகைகளில் பிரிந்திருக்கும் இந்துக்களை இனி ஒன்று சேர்ப்பது சாத்தியமில்லை என்ற நிலையில் தனி வழி கண்டார்கள்


நீண்ட கொண்டையும் தாடியும் இந்துக்கள் மரபு, உருவமில்லா இறைவனை கொண்டாடுதலும் பசிக்கு உணவிடுதலும் இந்து ஞான யோக‌ மரபு


அதைத்தான் ஒரு மதமாக உருவாக்கி எழுந்தார்கள் ஆப்கன் முதல் வங்கம் வரை பரவியிருந்த இஸ்லாமிய பேரரசை குறுக்கே வெட்டி பிரித்து போடார்கள்


அவர்கள் இல்லையென்றால் இன்று இந்தியா என்பது உபிக்கு தெற்கேதான் உருவாகியிருக்கும் வடக்கே எல்லாம் பாகிஸ்தானுக்கே சென்றிருக்கும்


ஆனால் வெள்ளையன் தமிழனுக்கு திராவிட ஊசி போட்டது போல் அவர்களுக்கு நீ இந்து அல்ல என விஷ ஊசி செலுத்தினான், கிரகந்தம் எனும் அவர்கள் புனித நூலின் ராமா, கிருஷ்ணா என்ற நாணக்கின் வார்த்தைகளெல்லாம் "காட்" என மாறின, சீக்கியம் இந்துவின் ஒரு பிரிவு என்பதே மறைக்கபட்டு தனிநாடு என்ற அளவுக்கு விஷம் செலுத்தினான்


காங்கிரஸும் அவர்களை ஒரு மாதிரி நடத்த அவர்களே மிக  மிக குழம்பி போயினர், அவர்களை இந்தியாவுக்கு எதிராக பாவித்தல் எதிரி நாடுகளுக்கு எளிதாயிற்று


எனினும் பாகிஸ்தான் எனும் நாட்டின் மேல் உள்ள அந்த கோபம், 1500ம் ஆண்டுகளில் இருந்து அவர்கள் ரத்தத்தில் ஏறிய ஆப்கன் கொள்ளை கூட்டத்தின் மீதான வன்மம் அவர்களை இந்திய ராணுவத்தில் குவிய செய்தது


அந்த பரம்பரை பரம்பரையான ஆவேசத்தில்தான் அவர்கள் இந்திய ராணுவத்தில் நிற்கின்றார்கள், இன்றும் சீனா என்றால் வராத ஆவேசம் பாகிஸ்தான் என்றால் அவர்களுக்குள் இயல்பாய் வரும்


மொகலாயர் கால சம்பவம், 1947 பிரிவினையின் வலி என அதற்குள் பல வலிகள் உண்டு


இப்படிபட்ட கூட்டத்தை இந்திய அரசு பகிரங்கமாக எதிர்க்க முடியாது காரணம் அவர்களில் பாதிக்கு பாதி அல்ல முக்கால்வாசி இந்திய ராணுவத்தில் இருந்து ஓய்வுபெற்றவர்கள்


இந்திய ராணுவமே முன்னாள் ராணுவத்தார் என தயங்கும் விஷயம் அது, இதனாலே சில வெளிநாட்டு சக்திகள் பிரிவினைவாத சீக்கிய கும்பலை உருவாக்கி அவர்கள் பின்னால் ஓளிந்து கொள்வார்கள்


உண்மையில் சீக்கியர்களுக்கும் காங்கிரஸ் அரசு பல துரோகம் செய்தது அல்லது அவர்களை ஒரு பொருட்டாக கருதவில்லை


அந்த சீக்கிய மதத்தை அங்கீகரித்தால்தான் என்ன குறைந்துவிடும்?


எங்கிருந்தோ வந்த இஸ்லாமை, கிறிஸ்துவத்தை அங்கீகரித்த டெல்லிக்கு சீக்கியம் என்றால் கசந்தது, விஷயம் வேறொன்றுமில்லை வெள்ளையன் சொல்லி கொடுத்த பாடம் அப்படி


ஒரு வகையில் அந்நாளைய தமிழனை போல, பிராமணரை போல பஞ்சாபிய சீக்கியர் மேலும் வெள்ளையனுக்கு நல்ல அபிமானம் இருந்தது


கடின உழைப்பாளிகள், நம்ப கூடியவர்கள், விசுவாசமானவர்கள், வீரமானவர்கள் என அவர்களை பல இடங்களுக்கு அழைத்தும் சென்றான்


இந்தியாவில் சீக்கியர் விரட்டி அடிக்கபட்டால்தான் தன் நாட்டுக்கு அகதிகளாய் வருவார்கள் எனும் ஒருவகை தந்திரமும் இருந்தது


இந்திரா சீக்கியரை கிள்ளுகீரையாக நினைத்தார், அகாலிதளம் இந்திராவின் அலட்சியத்தால் உருவானது அதை வீழ்த்த பிந்த்ரன்வாலேயினை அவரே வளர்த்தார்


சீக்கிய பெண் மேனகாவினை சஞ்சய் மணந்ததில் அற்புதமான அரசியலை இந்திராவால் செய்திருக்க முடியும், ஆனால் சீக்கிய வம்சம் தன்னோடு உறவு கொள்வதையே அவரால் ஏற்க முடியவில்லை


ஏன் என்றால் அதுதான் காங்கிரஸ் மனம், நேருவின் வளர்ப்பு


இந்திரா செய்த தவறு பிந்த்ரன்வாலே பிரபாகரன் என இருவரை வளர்த்து தீரா சோகத்தை தேடினார், தேடவும் வழிவைத்தார்..


அந்த பொற்கோவில் சம்பவமும் இந்திரா கொலையும் அதை தொடர்ந்த கலவரமும் தேசத்துக்கும் சீக்கிய இனத்துக்கும் பெரும் பிளவை ஏற்படுத்தின‌


அப்பொழுதும் சீக்கியரின் நியாயமான கோரிக்கையினை ஏற்காத காங்கிரஸ் மன்மோகன் எனும் சீக்கிய பொம்மையினை பிரதமராக்கி ஒருமாதிரி சமாதானத்துக்கு வந்தது


முதல் சீக்கிய பிரதமர் எனும் வகையில் சீக்கியரும் அமைதியாயினர், சீக்கிய பிரதமரை கொடுத்த காங்கிரஸ் அவர்களின் பென்சன் பற்றி, முன்னாள் சீக்கிய ராணுவத்தினரின் பென்சன் பற்றி பேசவே இல்லை


மோடி அரசில் சீக்கியர்களுக்கும் பாஜகவுக்கும் பெரும் உரசல் இல்லை பாகிஸ்தான் எதிர்ப்பு எனும் வகையில் இருவரும் அரசியலாலும் கொள்கையாலும் இணைந்தே இருந்தனர்


இந்நிலையில்தான் சீக்கியமும் இந்திய தலமைபீடமும் ஒரு காலமும் இணைய கூடாது, இணைந்தால் இந்திய ராணுவம் பலம் பெறும் இந்தியா பலம்பெறும் பாகிஸ்தானுக்கு ஆபத்து என அஞ்சிய கூட்டம் வாய்புக்காய் காத்திருந்தது


அது விவசாயிகள் போராட்டம் என வெடித்தது


மத்திய அரசுக்கு இக்கட்டான நிலை காரணம் உண்மையாக போராட வந்த விவசாயிகளில் பாதிபேர் முன்னாள் ராணுவத்தினர், அவர்கள்மேல் ஒரு தூசு விழுந்தாலும் தேச அவமானம் அது இந்திய ராணுவத்திலே கொந்தளிப்பை உருவாக்கும்


அதே நேரம் போராட்டம் நீடிக்க நீடிக்க பல சிக்கல்கள் எழுந்தன‌


இதில்தான் அந்நிய சக்திகள் விவசாயிகள் என புகுந்து கலவரம் ஏற்படுத்தி பொற்கோவில் போல ஒரு அழிவினை செய்து இந்திராவுக்கும் சீக்கியருகும் தீரா பகையினை ஏற்படுத்தியது போல் மோடிக்கும் செய்ய திட்டமிட்டு வந்தன‌


மத்திய அரசு இந்திராவிடம் இருந்து எதை செய்ய கூடாது என படித்திருந்தது, அப்படியே எதை செய்யவேண்டும் எனவும் திட்டமிட்டது


எப்பொழுதுமே ஆடுபவனை அடக்க நினைக்க கூடாது அது எதிர்வினையினை ஏற்படுத்தும்


"ஆற்றில் அணைகட்டும் முன் அது தோன்றும் மூலத்தை கவனி, பொங்குவதை தடுக்க கொள்ளியினை எடு" என்பதெல்லாம் தத்துவம்


இதனால் பலசுற்று பேச்சுவார்த்தை என நாட்களை அழகாக இழுத்தது அரசு, இது வழக்கமான அரசு என குழ்ப்பவாதிகளும் உற்சாகமாக இருந்தார்கள்


போராட்டத்தை அமைதியாக நீடிக்க அனுமதித்த அரசு அதன் பின்புலங்களை எல்லாம் ஆராய்ந்ததில் எங்கெல்லாம் ஒருந்தோ ஓடைகள் வந்து அங்கு கூடியது தெரிந்தது


வெளிநாடுகள் இருந்தன, தேசவிரோத கும்பல் இருந்தது, அந்நிய கைகூலிகள் இருந்தார்கள், மத ஸ்தாபகர்கள் இருந்தார்கள்


பட்டியலை தயார் செய்த அரசு செய்ய வேண்டிய ஒவ்வொன்றையும் செய்து கொண்டே இருக்க பின்னால் இருந்த கும்பல்களுக்கு ஏதாவது அதிரடி காட்ட வேண்டிய அவசியம் உண்டாயிற்று


அதிரடி என்றால் ஒன்றுமல்ல, காவல்துறையிடம் மோத வேண்டும் குறைந்தது 100 பேர் சாக வேண்டும் அதை கொண்டு கலவரமும் பெரும் குழப்பமும் செய்யவேண்டும்


விஷயத்தை மோப்பம் பிடித்த அரசு பந்தினை கோர்ட் பக்கம் திருப்பியது இது போராட்ட கும்பலுக்கு முதல் தோல்வி


நீதிமன்றத்தில் தங்கள் அர்த்தமில்லா போராட்டம் வெல்லாது என்பதை உணர்த்த தரப்பு தன் ரத்தபலியினை தொடங்க நாள் குறித்தது


அதுதான் ஜனவரி 26, உலகமே இந்தியாவின் குடியரசு தினவிழாவினை பார்க்கும் நேரம் தலைநகரில் ரத்த சகதியினை உருவாக்க திட்டமிட்டார்கள்


இந்திய உளவுதுறை மிக சரியாக உள்ளே புகுந்து பல எச்சரிக்கைகளை சரியாக செய்து கலவர  கோஷ்டிகளையும் உண்மையான விவசாயிகளையும் அடையாளம் கண்டு விவசாயிகளை எச்சரித்திருந்தார்கள்


உண்மையான விவசாயிகள் கலைய தொடங்க தீவிரவாத கோஷ்டி வீண் கலவரத்தில் இறங்கினார்கள், அவர்களுக்கு தேவை இந்திய அரசு முன்னாள் ராணுவத்தார் என்றும் பாராமல் பல நூறு பஞ்சாபிய விவசாயிகளை கொன்றுவிட்டார்கள் எனும் ஒரு செய்தி


அதை கொண்டு பெரும் கலவரத்தை உருவாக்க முடியும்


இதனை லாவகமாக கையாண்ட இந்தி அரச தரப்பு சில காவலர்கள் படுகாயமுற்றும் திருப்பி அடிக்காத அளவு திறமையாக சமாளித்து உண்மையான தேசவிரோதிகளை அடையாளம் காட்டிவிட்டது


இது பஞ்சாபுக்குள்ளே எதிர்ப்பினை உருவாக்கி அம்மக்களே உண்மையினை புரிந்து தங்களை வைத்து நடக்கும் சதியின் வலையினை உணர்ந்து வெளியேறிவிட்டனர்


ஆம் பஞ்சாபிய விவசாயிகளும் நல்லவர்கள், அவர்களுகு உதவ சட்டமியற்றிய மத்திய அரசும் நல்ல அரசே


ஆனால் ஒரு குடம் பாலை ஒருதுளி நஞ்சு விஷமாக்குவது போல் ஒரு கூட்டம் இங்கு நாசகார திட்டமிட்டு குழப்ப பார்த்தது ஆனால் விஷயம் படுதோல்வி


மத்திய அரசுக்கு இதுமாபெரும் வெற்றி என்றாலும் இது கொடுத்திருக்கும் எச்சரிக்கை சில உண்டு


சீக்கியர்களும் இந்துக்களே இந்துக்களின் அடிப்படை கொள்கை கொண்டவர்களே என இந்துபீடங்கள் சீக்கிய தலமைகளுக்கு புரியவைக்க வேண்டும் அதில் கருத்து முரண்பாடு வந்தால் அவர்கள் மதத்துக்குரிய அங்கீகாரத்தையும் சில நியாயமான கோரிக்கைகளையும் ஏற்று கொள்ளல் வேண்டும்


இந்திரா செய்ய தவறியதை பாஜக அரசு கண்டிப்பாக செய்து கொடுத்தே தீரவேண்டும்


அவர்களை அரவணைத்து அவர்கள் இந்தியர்களில் ஒருவர்கள், இந்துக்களில் ஒருவர்கள் இத்தேசத்தை அன்றிலிருந்து இன்றுவரை காத்துவரும் வீரவாரிசுகள் என்பதை பெருமை பொங்க உணரவைத்து அவர்களை எக்காரணம் கொண்டும் இந்திய அரசுக்கு தலைவலி கொடுக்காத அளவு மனதால் ஒரு நம்பிக்கையினை கொடுக்க வேண்டும்


மத்திய அரசுக்கு இனிதான் பொறுப்பு நிறைய இருக்கின்றது நிச்சயம் மிகபெரிய அமைதியினை நிலைநாட்டுவார்கள் என நம்புவோம்


அன்புக்குரிய சீக்கிய சகோதர்களே..


உங்களுக்கு நன்றி கலந்த வணக்கங்கள், தலைநகரில் போராட்டத்தை கைவிட்டதற்காக உங்களுக்கு நன்றி


இத்தேசம் எப்பொழுதும் உங்களை கைவிடாது, உங்களின் நியாயமான கொரிக்கைகளுக்கு இத்தேசமும் அதன் ஒவ்வொரு குடிமக்களும் எப்பொழுதும் ஆதரவாகவும் அனுசரணையாகவும் இருப்போம் என்பதை ஒவ்வொரு இந்தியனும் தெரிவித்து கொள்ளுகின்றோம்


குறிப்பாக தமிழர்கள் எக்காலமும் உங்களின் தேசபக்திக்கு தலைவணங்கி உங்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு துணை இருப்போம் என்பதையும் தெரிவிக்கின்றோம்.


இன்றும் எங்களுக்கு லஜபதி ராயும், பக்த்சிங்கும் கண்களில் நீர்வர வைக்கும் தியாகிகள்


தமிழர்கள் உண்ணும் சப்பாத்தியிலும் பாசுமதியிலும் நாங்கள் உங்களை நன்றியுடன் நினைத்து கொண்டே இருக்கின்றோம்


தமிழகம் புலிகளால் அழிய இருந்த நிலையில் எங்களுக்காக ஈழத்தில் 1500 பேராக செத்து தமிழகத்தை தேசியத்தில் நீட்டிக்க செய்த தியாக இனம் நீங்கள்


உங்களை எப்பொழுதும் நாங்கள் மறக்கபோவதுமில்லை, கைவிட போவதுமில்லை


அரசுகள் வரும் போகும், பிரதமர்கள் வருவார்கள் போவார்கள், சட்டங்கள் இருக்கும் மாறும். ஆனால் தேசம் எக்காலமும் நிலைத்து நிற்க வேண்டும்


அதற்கு நல்ல முடிவெடுத்த உங்களை வாழ்த்தி கொண்டிருக்கின்றோம், எங்களின் பேராதரவு எப்பொழுதும் இந்தியராய் உங்களுக்கு உண்டு


உங்களின் நல்ல முடிவுக்கு உளமார்ந்த வாழ்த்துக்கள், விவசாய சட்டம் எல்லா விவசாயிகளையும் போலவே உங்களையும் வாழ வைக்கும் என்பதை விரைவில் உணர்வீர்கள்


அப்பொழுது நீங்கள் இதே டெல்லிக்கு இனிப்பு வழங்கி கொண்டாட மாலையுடன் பிரதமரை வணங்க வருவீர்கள், அப்பொழுது நாம் அனைவரும் சேர்ந்து அரசுக்கு விழா எடுப்போம்


நாடு வாழட்டும், நன்கு வாழட்டும், நிலைத்து வாழட்டும், ஒற்றுமையாய் ஒளிரட்டும்


வந்தே மாதரம்...ஜெய்ஹிந்த்..

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...