*எந்த காரியத்தையும் அஷ்டமி, நவமி திதிகளில் செய்வதை மக்கள் தவிர்த்து விடுவார்கள்.*
இதனால் வேதனையுற்ற அஷ்டமி, நவமி திதிகள், மகாவிஷ்ணுவிடம் சென்று முறையிட்டன.
‘நாங்கள் மட்டும் என்ன பாவம் செய்தோம்?. எங்களை ஏன் அனைவரும் கெட்ட திதிகளாக நினைத்து ஒதுக்குகின்றனர்?’ என்று கேட்டனர்.
அதற்கு மகாவிஷ்ணு, ‘நீங்கள் கவலை கொள்ள வேண்டாம்.
மக்கள் உங்களையும் போற்றி துதிக்கும் நாள் வரும்’ என்று உறுதி அளித்தார்.
அதன் படியே ராமர், நவமி திதியில் தசரதர்– கோசலை தம்பதியருக்கு மகனாகவும், அஷ்டமி திதியில் கிருஷ்ணர், வாசு தேவர்– தேவகி தம்பதியருக்கு மகனாகவும் பிறந்து சிறப்பு செய்தனர்.
ராமநவமி விரதத்துக்கு முதல் நாள், வீட்டை சுத்தம் செய்ய வேண்டும்.
தொடக்க நாளில் ஒரு வேளை மட்டும் உணவருந்தி, ராம நாமத்தை ஜெபித்துக் கொண்டே இருக்க வேண்டும்.
ஒன்பது நாளும் சர்க்கரைப் பொங்கல், பாயசம் போன்றவற்றை நைவேத்தியமாக படைப்பதோடு, ராமருக்குத் துளசி மாலையும், அனுமனுக்கு வடை மாலையும் சாத்தி வழிபடலாம்.
அது முடியாதவர்கள், ராமநவமி தினத்திலாவது இதனைச் செய்வது நல்லது.
No comments:
Post a Comment