சுக்குக்கு மிஞ்சிய மருந்து இல்லை சுப்பிரமணியனுக்கு மிஞ்சிய தெய்வமில்லை!
திருவள்ளூர் மாவட்டம் அரக்கோணத்தில் இருந்து 18 கிமீ
அறுபடை வீடுகளில் உயரமான கருவறை இங்கு தான் உள்ளது 1000 ஆண்டுகளுக்கு முன்பு சோழர் பாண்டிய மன்னர்களால் போற்றப்பட்ட தலம்.இந்த மலையை ஒரு புறம் பார்த்தால் வெண்மையாக தெரியும் மறுபுறத்தில் இருந்து பார்த்தால் கருமை நிறமாக தெரியும் .
சிக்கலில் வேல் வாங்கிய சிங்கார வேலன் திருச்செந்தூரில் சூரசம்ஹாரம் முடிந்து கோபம் தணிந்து தணிகையில் சிங்கார ரஸத்தோடு சிங்கார வேலன் மோகனத்தில் அமர்ந்த தலம் .
வள்ளி மலையில் வாழ்ந்த வள்ளியை மணம் முடிக்க தேர்வு செய்த இடமே திருத் தணிகைமலை .
வருடத்திற்கு 365 நாட்கள் என்பதை குறிக்கும் வகையில் படிகள். ஆங்கில வருட பிறப்பு அன்று ஒவ்வொரு படிக்கும் படி திருப்புகழ் பாடி நடக்கும் படி பூஜை மிகவும் பிரபலமானது 1917 முதல் தொடர்ந்து நடந்து வருகிறது
அறுபடை வீடுகளில் இத்தலத்தில் உள்ள முருகன் சிலை தான் சிறியது முருகன் வள்ளி தெய்வானை என்று தனித்தனியாக சன்னதிகள் உள்ளன. ஐங்கரன் தம்பியின் ஐந்தாம் தலத்தின் முன் இந்திரனின் ஜராவதம் தெய்வானையை மணம் முடித்து கொடுத்த போது அவர் அரண்மனையில் வளர்ந்த ஜராவதம் தெய்வானையை பிரிய முடியாமல் உடன் வந்த ஜராவதம் வள்ளியை முருகன் மணம் முடித்ததால் வருத்தத்தில் முருகன் முகம் பார்க்காமல் திரும்பி நிற்கும் பாசமான யானை . (யானை இப்படி திரும்பி நிற்க கர்ணபரம்பரை கதை நிறைய உண்டு யானை மிகவும் பாசமானது நிச்சயமாக இது தான் காரணமாக இருக்க வேண்டும்)
திருமுருகாற்றுப்படையில் இந்த தணிகை மலை குறிப்புகள் உள்ளன.
சித்திரை மாதத்தில் முருகன் தெய்வானை திருமணம் திருவிழா நடைபெறும்.மாசி மாதம் வள்ளி திருமண திருவிழா நடைபெறும்
( வட ஆற்காடு மாவட்டத்தில் வருடத்தில் மூன்று கார்த்திகை நட்சத்திரம் மிகவும் பிரபலமானது தை ஆடி கார்த்திகை மாதங்களில் ஊரை இந்த விழாவை கொண்டாடுவார்கள் பரணி காவடி கிருத்திகை காவடி என்று ரகளை கட்டி அடிப்பார்கள் திருத்தணிக்கு காவடி போன மயமாக இருக்கும் 10 லட்சம் பக்தர்கள் காவடி எடுத்து கலந்து கொள்ளும் பெரிய விழா இங்கு காவடி அமைப்பு வித்தியாசமான முறையில் உள்ளது தென் திசையில் மயில் தோகையால் ஆன காவடி அதிகம் இருக்கும். இங்கு ஒரு மர சட்டத்தில் இருபுறமும் மூங்கில் கூடை இருக்கும் அதில் அர்சசனை பொருட்கள் உள்ளது நான்கு மணிகள் இருக்கும் கோவிலுக்கு போக முடியாத நண்பர்கள் உறவினர்கள் இதிலேயே ஒரு கூடையில் காணிக்கை செலுத்தி விடலாம் அவை கோவிலுக்கு சென்று செலுத்தி விடுவார்கள் இன்னொரு புறம் உள்ள மூங்கில் கூடையில் வழி செலவுக்கு காணிக்கை கொடுப்பது என்று சொல்கிறார்கள் இந்த காவடி எடுத்து போகும் நிகழ்வே ஒரு திருவிழா போல் வீடுகளில் செய்கிறார்கள் இந்த திருவிழா நிகழ்வு கதைகளை ரொம்ப சிரத்தையாக கேட்டு கொள்வேன் காவடி தூக்கி போகும் நபர் முன் படுத்து இருப்பார்கள் அவர்களை தாண்டி காவடி சுமந்து செல்வார்கள் இது போல் எங்கும் கண்டதில்லை)
கர்நாடகா ஆந்திரா தமிழ்நாடு என்று மூன்று மாநிலங்களும் ஒரு சேர வந்து திருத்தணியே திமில் படும்.
எல்லா முருகன் ஸ்தலத்திலும் சூரசம்ஹாரம் விழா நடக்கும் போது இங்கு புஷ்பாஞ்சலி சேவை நடக்கும்
ஒரு லட்சம் ருத்ராட்சம் கொண்டு வடிவமைக்கப்பட்ட ருத்ராட்சம் உற்சவர் மண்டபம் இங்கு உண்டு.. இந்திரன் கொடுத்த சந்தனகல்லில் இழைக்கப்படும் சந்தனமே தணிகை வேலனுக்கு சாத்தப்படுகிறது
தமிழ் புத்தாண்டு அன்று 1008 பால்குடம் அபிஷேகம் நடக்கும்
மகா சிவராத்திரி அன்று 1008 சங்காபிஷேகம் நடைபெறும்.
திருமால் ஆலயம் போல் முருகன் திருபாத சடாரி வைப்பது இங்கும் வள்ளி மலையிலும் மட்டுமே.
பைரவர் சன்னதியில் நான்கு பைரவரோடு காட்சி தருகிறார் காலபைரவர்.
முதலில் வணங்கும் விநாயகர் இங்கு ஆபத்சகாய கணபதியாக காட்சி தருகிறார் இவரை இங்கு மட்டுமே கடைசியாக வழிபாடு செய்வது மரபு.
No comments:
Post a Comment