WHY THE DOGS ARE SILENT?
அவர்கள் எவ்வளவு தந்திரமாக இருக்கிறார்கள் பாருங்கள்.
டிவி விவாதம் முதல் மேடைப் பேச்சுவரை - இந்திய எதிர்ப்பு, இந்து எதிர்ப்பு, பிராமண எதிர்ப்பு...
என்று விஷம் கக்கும் சுந்தரவள்ளிகளும், டேனியல் திருமுருகனும் காந்திகளும், 'தோசை' மதிமாறன்களும், சுப.வீக்களும் எங்கே போய் ஒளிந்து கொண்டார்கள்?
அவர்கள் ஒளியவில்லை - ஒளிந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப் பட்டு இருக்கிறார்கள்.
"நாங்கள் பிராமண துவேஷிகள் இல்லை- இந்துமத நம்பிக்கைகளை சீண்டுபவர்கள் இல்லை - எங்களுக்கு கோயில்கள் மேல் மிக்க மரியாதை உண்டு"- என்று சீன் காட்டுவதற்காக திமுகவால் தயாரிக்கப்பட்ட முக்கியமான, நுட்பமான நாடகம் இது!
ஷெர்லக் ஹோம்ஸ் கதை ஒன்றில் - THE SILVER BLAZE என்று நினைவு- ஒரு நிகழ்வு வரும்.
ஒரு குதிரை காணாமல் போய்விடும் ஒரு பணக்காரரின் கொட்டடியிலிருந்து.
கடைசியில் அந்தப் பணக்காரரே அந்த விலை உயர்ந்த குதிரை காணாமல் போனதாக 'செட்டப்' செய்து ஏதோ தில்லுமுல்லு செய்வார் என்பது தெரியவரும்.
அந்தக் குதிரைக் கொட்டடியைக் காக்க எஜமான விசுவாசம் மிக்க நாய் ஒன்று உண்டு.
குதிரையை யாராவது களவாடி இழுத்துச் சென்றிருந்தால் எஜமான விசுவாசம் மிக்க நாய் குரைத்திருக்குமே!
இதைத்தான் ஷெர்லக் ஹோம்ஸ் கேட்பார் - கொட்டடிக் காவலாளியிடம்.
"நாய் குரைக்கும் சப்தம் கேட்டதா?"-
"இல்லை"- என்பான் காவலாளி.
பிறகு அந்த மர்ம முடிச்சை அவிழ்த்த பின் - ஹோம்ஸ் தனது சகா Dr வாட்சனிடம் சொல்வார்.
"நாய் குரைத்தது என்பது செய்தி அல்ல! அது ஏன் குரைக்கவில்லை என்பதே செய்தி"-...
அதாவது தனக்கு மிகவும் பரிச்சயமான எஜமானனே அந்தக் குதிரையை இட்டுச் சென்றதால்தான் நாய் குரைக்கவில்லை என்று முடிவுக்கு வருவார் ஹோம்ஸ்!
அந்தக் கதையை அப்படியே இங்கே பொருத்த முடியாது - இந்துக்களின் வோட்டு என்ற குதிரைக்கு திமுக எஜமான் அல்ல என்பது உண்மை!
எனவே அதை சற்று மாற்றி 'குதிரைத் திருடன்' என்றே வைத்துக் கொள்வோம்.
எஜமானனின் நாய் - என்பதற்கு பதில் தெருநாய் என்று மாற்றிக் கொள்வோம்!
இந்தத் தெருநாய்கள் ஏதாவது நேரம் கெட்ட நேரத்தில் ஊளையிட்டு, தான் திருட விரும்பிய - 'இந்துக்களின் வோட்டு'- என்ற குதிரையைத் திருட முடியாமல் போய்விடுமோ என்ற அச்சம் திமுகவுக்கு ஏற்பட்டு இருக்கலாம்!
எனவே வீச வேண்டிய - 'பிஸ்கட்டுகளை' வீசி, இந்துக்களின் வோட்டைத் திருடும் போது, அவை குரைத்து, ஊளையிட்டுக் காரியத்தைக் கெடுக்காமல் இருக்க ஏற்பாடு செய்யப்பட்டிருக்கக் கூடும்!
எனவே அந்த "பிராமண துவேஷ"- "இந்து மத துவேஷ"- "இந்திய விரோத"- திமுகவின் எஜமான விசுவாசிகள்...
'பிஸ்கட்டை' வாயில் கவ்வியதால் ஊளையிடாமல், குரைக்காமல் மௌனம் காக்கின்றன என்று சந்தேகிக்கிறேன்!
எனவே இந்து நண்பர்களே, 'நடுநிலை' நண்பர்களே...
'திமுக திருந்திவிட்டது - தனது இந்து விரோத மனப்பாங்கை மாற்றிக் கொண்டுவிட்டது'- என்றெல்லாம் பிரமைகளுக்கு ஆளாகாதீர்கள்!
இன்றும் மு.க.ஸ்டாலின் பிற மதத் திருமண நிகழ்ச்சிக்குச் சென்று இந்து சம்பிரதாய மந்திரங்களை கேலி செய்தவர்தான் - அதே மனநிலைதான்!
இன்றும் உதயநிதி தனது மகனுக்கு பிள்ளையார் பொம்மையைக் காட்டி - அது வெறும் களிமண் என்றவர்தான் - அதே மனநிலைதான்!
இன்றும் கனிமொழி - பலபேர் பைத்தியமாக வணங்கும் பொம்மையை - திருப்பதி வெங்கடாசலபதியை - அப்படி அந்த பொம்மையில் என்னதான் உள்ளது என்று காணச் சென்றவர்தான்!
தனது உண்டியலை காப்பாற்றிக் கொள்ள சக்தி இல்லாத திருப்பதி வெங்கடாசலபதி - அந்த உண்டியலைக் காக்கவே போலீஸ் வேண்டி இருக்கிறது - என்று பேசிய கனிமொழிதான் இன்றும்! அதே மனநிலைதான்!
அவர்கள் தங்கள் இந்து மத விரோதத்தை, இந்து மத நம்பிக்கைகள், சடங்குகள் மீது தங்களுக்கு உள்ள ஆழமான புரையோடிப் போன வெறுப்பை...
மறைத்துக் கொள்வார்களே தவிர - மாற்றிக் கொள்ள மாட்டார்கள்!
இப்போது அவர்கள் களவாட முயற்சிப்பது - "இந்துக்களின் வோட்டு என்னும் குதிரை"-
எனவே இந்தத் தெருநாய்கள் அவர்களுக்கு இசைவாக, அனுசரணையாக...
திமுகவை ஊளையிட்டு சங்கடத்தில் ஆழ்த்திவிடாமல் மௌனம் காக்கின்றன!
இந்த நாய்களின் மௌனம் எல்லாம் ஏப்ரல் 6 வரைதான் - அல்லது அதிகபட்சம் மே 2 வரைதான்!
ஒருவேளை தப்பித்தவறி - இந்து வோட்டு என்னும் குதிரை திமுகவால் வெற்றிகரமாகக் களவாடப் பட்டுவிட்டால்...
அந்தக் களவாடல் திட்டமிடப்பட்ட வகையில் முடிந்த பிறகு...
வாயில் கவ்விய "பிஸ்கட்" கரைந்து ஜீரணமான பிறகு...
இந்து மத எதிர்ப்பு ஊளைகள், குரைப்புகள் அதிகரிக்கும்!
எனவே இந்த நாய்கள் - "குரைத்தன" என்பது செய்தி அல்ல!
"இப்போது ஏன் குரைக்கவில்லை?"-
Why do these Dogs not barking? - என்பதே நாம் கவனிக்க வேண்டிய செய்தி!
No comments:
Post a Comment