திமுக அதிமுக என இரண்டு கட்சிகளும் சமபலத்தில் கூட்டணி அமைத்து சட்டமன்ற பொது தேர்தலை எதிர்கொள்கின்றன, கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது திமுக தலைமையிலான கூட்டணியில் இணைந்து போட்டியிட்ட விசிக இந்த முறையும் அதே கூட்டணியில் இடம்பெற்றுள்ளது.
திமுக கூட்டணியில் விசிகவிற்கு 6 இடங்கள் ஒதுக்கப்பட்டன, செய்யூர் (தனி),அரக்கோணம் (தனி),நாகப்பட்டினம்,திருப்போரூர்
4 தனி தொகுதிகள் இரண்டு பொது தொகுதிகள் என களமிறங்கியது விசிக, இந்த முறை விசிக தனி சின்னத்தில் போட்டியிடுகிறது, திமுக கூட்டணியில் போட்டியிடும் விசிக எத்தனை இடங்களில் வெற்றி பெரும் என தற்போது 24 AIRADS நடத்திய கருத்து கணிப்பு முடிவுகள் வெளிவந்துள்ளது.
உதயசூரியன் சின்னத்தில் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட ரவிக்குமார் எளிதில் வெற்றி பெற்ற நிலையில் பானை சின்னத்தில் களமிறங்கிய கடும் போராட்டத்திற்கு பின்னர் வெற்றி பெற்றார், அதே நிலைதான் தற்போதைய தேர்தல் களத்திலும் எதிரொலிக்கிறது, பானை சின்னத்தில் போட்டியிடுவது விடுதலை சிறுத்தைகள் வேட்பாளருக்கு பின்னடைவாக அமைந்துள்ளது என 24airads நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
மேலும் விசிக போட்டியிடும் 6 இடங்களில் நாகை மற்றும் செய்யூர் ஆகிய இரு இடங்கள் மட்டுமே விசிக வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாகவும் ஆளூர் ஷாநவாஸ், பனையூர் பாபு ஆகிய இருவரின் தனி செல்வாக்கு முறையே நாகை, செய்யூர் சட்டமன்ற களத்தில் எதிரொலிப்பதாக குறிப்பிட்டுள்ளது.
குறிப்பாக வன்னியரசு போன்றோர் கடும் எதிர்ப்பை சந்திப்பார்கள் எனவும், கூட்டணி கட்சியான திமுக மாவட்ட தலைவர்கள் நிர்வாகிகள் விசிக வேட்பாளருக்கு பணி செய்ய மறுப்பதாகவும், இதே நிலை நீடித்தால் விசிக அனைத்து இடங்களிலும் தோல்வியை தழுவும் என இறுதி கட்ட தகவலாக அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
பாஜகவை ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற விடமட்டோம் என தீவிர பரப்புரையில் ஈடுபட்டு கொண்டிருக்கும், திருமாவளவனுக்கு திமுக கூட்டணி கட்சியின் உள்ளடி வேலையால் விசிக வெற்றி வாய்ப்பு பாதிக்கும் என வெளியான தகவல்கள் கடும் அதிர்ச்சியை கொடுத்துள்ளன.
No comments:
Post a Comment