நேருவை நமக்கு எப்படி அறிமுகம் செய்தார்கள்?
காந்தியின் செல்லம். சீடர்.
செக்க செவேல் என்று ரோஜா போல இருப்பார்.
அவரது ஜாக்கெட்டில் எப்போதும் ஒரு ஒத்த ரோஜா இருக்கும்.
பெரும் பணக்காரர்.
இங்கிலாந்து சென்று பயின்றவர். அன்றே அன்னார் எந்த வாயிலில் வெளியே வருவார் என்று தெரியாமல் வந்தால் காத்திருக்க கூடாது என்று அந்த பல்கலையின் நான்கு வாயிலிலும் தன் நான்கு கார்களை ஓட்டுநர்கள் சகிதம் நிறுத்தி வைத்தார் திரு. மோதிலால் நேரு என்றே சொன்னார்கள்.
அதை தவிர.. அவருக்கு என்ன தெரியும்? அவரது தலைமை பண்பு என்ன? திட்டங்கள் என்ன? அவரது கூட்டாளிகள் யார்? இதையெல்லாம் சொன்னார்களா? இல்லை. எடுத்தவுடன் இந்த நாட்டின் அதி உச்ச அதிகார பீடத்தை காந்தியின் ஒரு வார்த்தையை நம்பி கொடுத்தனர்.
உண்மையில் அன்று ஆட்சியில் அமர்ந்து அவர்தான் இந்தியர்களுக்கு உதவி செய்தார். அது நமது பாக்கியம் என்கிற அளவில் பேசப்பட்டது.
சரி விடுங்கள்.. அன்று இருந்த நிலைமை அப்படி !!
ஆனால் பாருங்கள்!! அவர் ஒரு எடுத்துக் காட்டாக போய் அவருக்கு பிறகு வந்த இந்திராவிடமும் இந்த நிர்வாக முன் அனுபவம் மற்றும் தலைமை பண்பை கேட்க வில்லை. காமராஜூக்கு நன்றி.
நடுவில் சாஸ்திரி என்கிற பக்கத்தை காணும். சரி விடுங்கள்.
அன்றும் பாருங்கள். நாம் இந்திராவை சொல்லும் போது நேருவுக்கு சொன்ன அதே டயலாக். பெரிய குடும்பம். ரோஜா நிறம். தப்பு செய்ய மாட்டாங்க !! எத்தனை பெரிய பம்மாத்து. ??
அடுத்து வந்த தேசாய். பம்பாய் மாகாண முதல்வராக இருந்தவர். நேர்மையின் உச்சம். அதற்குள் 30 ஆண்டு போயிட்டது. மக்கள் தலைவரின் தகுதிகள் பற்றிய புரிதல் மாறிவிட்டது. மொராஜ்ஜி சேர்ந்த கூட்டமே அவரை வீழ்த்தியது.
பிறகு வந்தார் ராஜீவ்.. அவருக்கும் அதே பல்லவி.
ராஜ குடும்பம். ரோஜா நிறம். ஆஹா.. ஓஹோ..
பின் சிலர் வந்து மேலே சொன்ன ராஜ குடும்பத்தின் முன் அரசியல் செய்ய முடியாமல் காணாமல் போனார்கள்.
கடைசியாக சூழ்நிலை நரசிம்ம ராவை கொண்டு நிறுத்தியது. ராஜ குடும்பம் இல்லை. அழகானவர் இல்லை. ஆனால் ஆந்திர முதல்வராக இருந்த அனுபவம் உண்டு. அவர் செயல் பட தொடங்கினார். மாற்று கருத்து இல்லை. மாற்றங்களின் முதல் கல்லை எடுத்து வைத்தார். ஆனால்.. அந்தோ....
மீண்டும் அரண்மனை கட்சியை கை கொண்டது.
நடுவில் ஒரு முறை வாஜ்பாய் எனும் நல்லவர் வருகிறார். ஆனால் அரசியலில் ரொம்ப நல்லவராக இருப்பது எத்துணை ஆபத்து என்று மாறன், கருணா, மற்றும் ஜெயா போன்றவர்கள் அவருக்கு அரசியல் பாடம் எடுக்கின்றனர்.
பிறகு வருகிறார் நம்ம பொம்மை சிங். இவர் ஆட்சி செய்தார் என்பதை விட ஆட்சியை வேடிக்கை பார்த்தார் என்பதே சரி.
இத்தகைய சூழலில் மோடி வருகிறார்.
யார் இவர்? ஒரு டி கடைக்காரரின் மகன்.
12 வருடம் ஒரு மாநிலத்தை ஆண்ட அனுபவம் கொண்டவர். வெற்றிகரமாக ஆளா விட்டால் மூன்று முறை மக்கள் தெரிவு செய்வார்களா?
அழகானவரா ? இல்லை.
ஆக்ஸ்போர்டில் படித்தவரா? இல்லை !!
பெரும் பணக்காரரா? இல்லை !!
ஆனால்.. முக்கியமான ஆனால்.. நேர்மையானவர்.
மாநில முதல்வராக 12 வருடம் இருந்தும் தனிப் பட்ட முறையில் ஒரு சிறு ஊழல் குற்றசாட்டுக்கும் ஆளாகாதவர்.
ஆட்சி விமர்சிக்கப் படலாம். ஆனால் ஆள்.. நெருப்பு !!
இவர் 2014 வரவே மாட்டார் என்றுதான் மணிசங்கர ஐய்யர் மற்றும் சிதம்பரம் செட்டியார் போன்றவர்கள் கேலி செய்தனர்.
6 வருடம் ஆகி விட்டது. 2014 இல்லை. 2019 லும் அவரே வருகிறார்.
இன்று நிலைமை என்ன?
மோடி என்பவரின் செயல்பாடுகள் விமர்சிக்கப் படுகின்றன. நல்லது. செயல்பாடுகளை ஆராய முனைவதே நல்ல தொடக்கம்.
இது ஒரு புதிய அளவுகோல்.
இனி எங்க தலைவர் என்பவர் சிவப்பாக இருக்கிறார். எங்க கட்சி தலைவர் வந்தார் அங்கிருந்த கல்லூரி பெண்கள் எல்லாம் ஒரே கூச்சலிட்டு அவரது அழகை கொண்டாடினார்கள் என்பதெல்லாம் தகுதியாகாது என்று மாறி வருகிற நிலைமையை வரவேற்போம்.
இதே தான் மாநில அரசியலிலும் நிகழ வேண்டும்.
விக் வைத்துக் கொண்டு நான் கலைஞ்ரின் பிள்ளையில்லையா என்றெல்லாம் பிச்சை எடுக்க முடியாது.
ஒரு சாதாரண விவசாயி மகன் எடப்பாடி கடந்த 4 வருடங்களில் ஒரு தலைமையின் அளவு கோளை உயர்த்துகிறார்.
கரகர குரலில் அர்த்தமில்லாத அடுக்கு மொழிகள் இல்லை. அழகில்லை. சிவந்த தோலில்லை!
செயல்பாட்டை விமரசியுங்கள் என்று ஓட்டு கேட்டு வருகிறார்.
இப்போது அந்த அளவுகோளின் படி செயல் திட்டங்களை வைத்து L. முருகன் மற்றும் அண்ணாமலை போன்ற புதிய நம்பிக்கைகள் வருகின்றன.
தேசிய அளவில் மாற்றங்கள் உறுதி செய்யப் படுகின்றது.
இனி மாநில அளவில் இந்த புதிய மாற்றங்கள் வெல்ல வேண்டும். வாரிசு அரசியல், வெறுப்பு அரசியல் அழிந்து திட்டம் செயல்பாட்டு அரசியல் வர வேண்டும்.
எனவே சிந்திப்பீர்!!! செயல்படுவீர் !!
மாநிலம் வளர பாடுபடுவோம்.
தேசியம் காப்போம்.
பி. கு:- இந்தியா போன்ற பெரிய தேசத்தில் மாற்றங்கள் இப்படித்தான் நிகழும். நாம் அடிக்கடி சரித்திரத்தை (சரியான சரித்திரத்தை!) நினைவில் கொள்ள வேண்டும்.
No comments:
Post a Comment