Wednesday, March 31, 2021

ஒரு தலைவனுக்கு தகுதி என்ன?

 முதலமைச்சர் திரு.காமராஜ் வீட்டிற்கு, ராஜா சமூக குடும்ப நண்பர் வருகிறார். வணங்கிவிட்டு, சிறிது நேரம் ஊர் நிலவரம், தாயைப் பற்றி பேசுகிறார்கள்.

மெதுவாக வந்த விஷயத்தை கேடாகிறார், காமராஜ்.
"ஊர்ல ஒரு‌ மில்லு கட்டலாம்னு இருக்கேன். நீங்க பர்மிஷன் குடுக்கணும்".
"எங்க கட்டப் போறீங்க?"
"நம்ம நிலமே டவுனுக்கு பக்கத்துல ஒரு 80ஏக்கர் இருக்கு. ஆளுங்களும் டவுன்லேந்து வர்ரது ரொம்ப ஈ.சீ. உள்ளேயே ஒரு பள்ளிக்கூடம், குவார்ட்டர்ஸ் னு எல்லாமே சௌகரியமா இருக்குங்க"
"சரி, புராஜக்ட கொண்டு வந்துரிக்கியா?"
"ஐயா சொன்னீங்கன்னா ரெடி பண்ணிற்றேங்க."
"குடுங்க. பாத்துட்டு சொல்றேன்."
விடைபெற்று செல்கிறார்.
ஒரு வாரம் கழித்து அதே ராஜா சமூகத்திலிருந்து பெரிய தனவந்தர் வருகிறார். அவரும் ஒரு மில் கட்டப் போவதாக தெரிவிக்கிறார்.
"உங்களுக்கென்ன? நீங்க நெனைச்சா ஊருக்கு ஒரு மில்லு கட்டலாமே? எங்க கட்டப் போறீங்க?
"நமக்கு புல்லு மொளைக்காத இடம் ஒரு 38ஏக்கர் (ஊர் பெயரைச் சொல்லி) இருக்கு. அங்கதான் ஆரம்பிக்கலாம்னு இருக்கேன்."
"அது வறப்பட்டிக்காடுல்ல? அங்கியா? டவுன்லேந்து எத்தனை மைல்? பஸ் வசதி இருக்கா?"
"இப்ப சின்னதா அரம்பிக்கிறேங்க. பின்னாடி பெரிசா பாக்கலாம்னுட்டு"
என்று இழுத்தார்.
"சரி, பர்மிஷன் குடுத்தா எப்ப மில்லு ஒடும்?"
"ஒரு ஆறு, ஏழு மாசம் அவுங்க.'
"சரி. நீ வேலைய ஆரம்பி. நான் பர்மிஷன் குடுத்தா நினைச்சுக்கோ.ஆனா ஒரு வேலை செய்யணுமே. பக்கத்துல உன் செலவுல ஒரு பள்ளிக்கூடம் கட்டித்தரணும். செய்வியா?"
"அதுக்கென்ன கட்டிட்டா போச்சி. அப்ப நா போயி வேலைய பாக்குறேன்."
மிகுந்த சந்தோஷத்துடன் புறப்பட்டார்.
இந்த இரு சம்பாஷணையின் போதும், கூட இருந்த தொழில்துறை செகரெட்டரி,
"சார், முன்னாடி வந்தவரு பெரியமில்லு கட்டினா ஒரு 50, 100 பேருக்கு வேலை கெடைக்கும். பள்ளிக்கூடமும் பெரிசா கெடைக்கும். டவுனும் விஸ்தாரமாவும்.
ரெண்டாவது புராஜக்ட் ஊருக்கு தள்ளி ரொம்ப அநதுவானமா இருக்குது. பஸ் வசதி கூட கம்மிய்யா."
"செகரெட்டிரி சார், இந்த ரெண்டாவது புராஜக்ட் வழியில எத்தனை கிராமம் இருக்கும், சுமாரா?"
"ரெண்டு பக்கமும் ஒரு 35 கிராமம் இருக்கும்யா."
"கேளுங்க. இந்த ரெண்டாவது புராஜக்ட் காரனுக்கு மில்லு ஒட்ட கரண்ட்டு அவசியம். அத அவனே இழுத்துக்குவான். அப்ப வழியெல்லாம் போஸ்ட் கம்பத்த அவனே போடணும். நமக்கு செலவு மிச்சம். அதுலேந்து இந்த 35 கிராமத்துக்கும் நம்ப கரண்ட்டு குடுக்கலாம்ல? அரசாங்கத்துக்கு பணம் மிச்சமாவுதுல்ல. அதான் ரெண்டாவது புராஜக்ட்க்கு சரின்னு சொன்னேன்."
வாயடைத்துப் போனார், செகரெட்ரி.
--------------------------------------------------------------------
இந்த உன்னத தலைவரை, தோற்க்கடித்த நாடார் குல மக்கள், இன்று மதத்தால் பிரிந்து, அவர் அழிய காரணமாயினர்.
அந்த தலைவனின் ஆன்மா உண்மையில் சாந்தி அடைய வேண்டுமென்றால், ஒன்றுபட்டு திருடர்களையும், கோள்ளைக்காரர்களையும் அரசியலிலிருந்து அகற்றுங்கள்.
பிறகு நாடாண்ட பரம்பரை என்று கூவலாம்.
வந்தேமாதரம். ஜெய்ஹிந்த்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...