பொன்மன செம்மல் MGR மேல் இருந்த கோபத்தை விட, புரட்சி தலைவி ஜெயலலிதா மீது இருந்த ஆத்திரத்தை விட அதிகமாக இப்போது எடப்பாடி அய்யா அவர்கள் மேல் இருப்பது நன்றாகவே தெரிகிறது.
அந்த இருவரும் ஒரு ‘பிம்பத்துடன்’ வலம் வந்தார்கள், ஆனால் இவரோ ‘ஒரு சாதாரண’ தொண்டனாக இருந்து இப்போது ஒரு மிகப் பெரிய சவாலாக வளர்ந்து விட்டாரே என்ற ஆத்திரம்.
சின்னவர் (MGR) , அம்மா (ஜெ). ஆகியோரிடம் அடைந்த தோல்வியை கூட ஏற்றுக் கொண்டவர்கள், எடப்பாடி அய்யா அவர்களிடம் தோற்றுவிட்டால் கேவலம் என்று எண்ணத் தொடங்கிவிட்டார்கள், அதன் வெளிப்பாடே இந்த கீழ்த்தரமான வசை பாடுதல்..
கடந்த நான்கு ஆண்டுகளில் எப்படியும் இந்த ஆட்சியை ‘கவிழ்த்துவிடலாம்’ என்று நினைப்பில் இருந்தவர்களுக்கு இந்த தேர்தலில் கூட சுலபமாக ஜெயிக்க முடியாதோ என்று சந்தேகம் வந்துவிட்டது, அது தான் அவர்களை எரிச்சலடைய செய்கிறது.
ஒரு சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்த மனிதர் ‘சிம்ம சொப்பனமாக’ மாறிவிட்டார்.
அவர்களின் பேச்சுக்களே அவர்களை வீழ்த்தும்.
மஹாபாரதம் சொல்லும் கதையும் இதுதான்...
நம் முதல்வர் .. அவருக்கும் , அவர் நாற்காலிக்கும் மதிப்பு கொடுக்க வேண்டும்
No comments:
Post a Comment