Thursday, March 25, 2021

ஐ.என்.எக்ஸ்.,வழக்கில் சிதம்பரத்துக்கு சிக்கல்! 

 ஐ.என்.எக்ஸ்., மீடியா ஊழல் வழக்கில், காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சிதம்பரம், அவரது மகனும், சிவகங்கை லோக்சபா தொகுதி, எம்.பி.,யுமான, கார்த்தி ஆகியோருக்கு சிக்கல் ஏற்பட்டுஉள்ளது.


அமலாக்கத் துறை தாக்கல் செய்துள்ள குற்றப் பத்திரிகையின்அடிப்படையில், இருவரும், ஏப்., 7ல் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.காங்கிரஸ் தலைமையிலான, முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது, ஐ.என்.எக்ஸ்., மீடியா நிறுவனம், அன்னிய முதலீடு பெறுவதற்கு, முறைகேடாக அனுமதி அளிக்கப்பட்டதாக, சி.பி.ஐ., வழக்கு பதிவு செய்தது.

இதில் நடந்துள்ள பண மோசடி தொடர்பாக, அமலாக்கத் துறை தனியாக வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கில், அப்போது நிதி அமைச்சராக இருந்த, காங்., மூத்த தலைவர் சிதம்பரம், அவரது மகன் கார்த்தி உள்ளிட்டோர் மீது, வழக்கு தொடரப்பட்டுள்ளது.இந்த மோசடி வழக்கில் இருவரிடமும், அமலாக்கத் துறை பலமுறை விசாரித்தது. ஏற்கனவே கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்ட அவர்கள், தற்போது ஜாமினில் உள்ளனர். சிதம்பரம் தற்போது, ராஜ்யசபா எம்.பி.,யாக உள்ளார்.

 சிதம்பரம்,. சிக்கல்! ஐ.என்.எக்ஸ்., வழக்கு,ஆஜராக உத்தரவு


கார்த்தி, சிவகங்கை லோக்சபா தொகுதியின் எம்.பி.,யாக உள்ளார். ஐ.என்.எக்ஸ்., மீடியா மோசடி தொடர்பாக, டில்லியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில், அமலாக்கத் துறை சார்பில் நேற்று முன்தினம் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.'என் மகனுடைய தொழில் வளர்ச்சிக்கு உதவுங்கள் என கூறி, பண மோசடியில் ஈடுபடுவது தான், சிதம்பரத்தின் பாணி' என, அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரம், பண மோசடியில் ஈடுபட்டதற்கு, 'இ - மெயில்' பரிமாற்றங்கள் உள்ளிட்ட ஆதாரங்கள் உள்ளதாக, குற்றப் பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.அதை ஏற்ற சிறப்பு நீதிமன்றம், சிதம்பரம், கார்த்தி உட்பட, குற்றஞ்சாட்டப்பட்டுள்ள, 10 பேரும், வரும் ஏப்., 7ல் நேரில் ஆஜராக உத்தரவிட்டுள்ளது.இந்த வழக்கில் விசாரணை தீவிரமடைந்து உள்ளதால், சிதம்பரம் மற்றும் கார்த்திக்கு புதிய நெருக்கடி மற்றும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.


குற்றப் பத்திரிகை கூறுவது என்ன?



நீதிமன்றத்தில் தாக்கல் செய்து உள்ள குற்றப் பத்திரிகையில், அமலாக்கத் துறை கூறியுள்ளதாவது:ஐ.என்.எக்ஸ்., மீடியா நிறுவனத்தின் உரிமையாளர் பீட்டர் முகர்ஜி, அவரது மனைவி இந்திராணி முகர்ஜி மற்றும் பத்திரிகையாளரும், நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியுமான வீர் சிங்கி ஆகியோர், 'ஆசி' பெறுவதற்காக, சிதம்பரத்தை, 2007ல் சந்தித்துள்ளனர்.

அப்போது, தங்கள் நிறுவனத்தில், அன்னிய முதலீடு செய்வதற்காக, அன்னிய முதலீடு வளர்ச்சி வாரியத்தில் விண்ணப்பித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.அப்போது, 'என் மகனின் தொழில் வளர்ச்சியை கவனித்து கொள்ளுங்கள்' என, அவர்களிடம், சிதம்பரம் கூறியுள்ளார். விதிகளை மீறி, மோசடி முறையில், அன்னிய முதலீடு செய்வதற்கும் அனுமதி அளிக்கப்பட்டது. அதில் பிரச்னை ஏற்பட்டபோது, கார்த்தியை சந்தித்தார் பீட்டர் முகர்ஜி. அப்போது, 7 கோடி ரூபாய் கொடுத்தால், பிரச்னையை தீர்ப்பதாக கார்த்தி கூறியுள்ளார்.


இந்த தகவல்களை, பீட்டர் முகர்ஜி மற்றும் இந்திராணி முகர்ஜி, தங்கள் வாக்குமூலத்தில் பதிவு செய்துள்ளனர். இந்த சந்திப்பு நடந்ததாக, சிதம்பரமும் ஒப்புக் கொண்டுள்ளார். ஆனால், எந்த பிரதிபலனையும் கேட்கவில்லை என கூறியுள்ளார்.இந்த வழக்கில், பல்வேறு, 'இ - மெயில்' உள்ளிட்ட மின்னணு ஆதாரங்கள், குற்றம் நடத்ததை உறுதி செய்கின்றன. தந்தை நிதி அமைச்சராக இருப்பதால், பிரச்னை உள்ளவர்கள், கார்த்தியை அணுகுவர். அவர் தந்தையிடம் பேசி, பிரச்னையை தீர்த்து தருவார்.

இதற்கான பிரதிபலன்களை, தனக்கு வேண்டியவர்கள் பெயரில் உள்ள நிறுவனங்கள் மூலம், கார்த்தி பெறுவார். வெளிநாடுகளில் சொத்து வாங்குவது உள்ளிட்ட பல வகையில், அந்த பிரதிபலன்கள், அவர்களை வந்து சேரும். ஐ.என்.எக்ஸ்., மீடியா வழக்கில், சிதம்பரத்துக்கு, முதலில் இருந்தே தொடர்பு உள்ளது. 'என் மகன் தொழிலை கவனித்துக் கொள்ளுங்கள்' என்பதுதான், பிரதிபலன்களை பெறும் அவரது பாணி. மகனின் பெயரில் உள்ள அல்லது அவருக்கு நெருக்கமான பெயர்களில் உள்ள நிறுவனங்களின் விவகாரங்கள் குறித்தும், கார்த்தியிடம், சிதம்பரம் பலமுறை ஆலோசனை நடத்தியுள்ளார். இதற்கான ஆதாரங்களும்
உள்ளன.கார்த்தியைத் தவிர, அவரது ஆடிட்டர் பாஸ்கரராமனுடனும், பலமுறை சிதம்பரம் ஆலோசனை நடத்தியுள்ளார்.இவ்வாறு இந்த பண மோசடி வழக்கில், சிதம்பரம், கார்த்திக்கு நேரடி தொடர்பு உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...