Wednesday, November 23, 2022

அவரவர் வினைவழி அவரவர் வந்தனர் அவரவர் வினைவழி அவரவர் அனுபவம்.

🌷 இருபது வயதிலேஇதுதான்
வேணும்னு தோணும்!
🌷 முப்பது வயதிலே இது
வேணும்னு தோணும்!
🌷 நாற்பது வயதிலே இதுவே
போதும்னு தோணும்!
🌷 ஐம்பது வயதிலே இது இல்லைனா
கூட பரவாயில்லைனு தோணும்!
🌷 அறுபது வயதிலே எது இல்லைனாலும் பரவாயில்லைனு தோணும்!
🌷 எழுபது வயதிலே எதுவும்
வேணாம்னு தோணும்!
🌷 காலமாற்றம்,கால சுழற்ச்சி
காலநேரம்,பிடிவாதம் எல்லாம்
முடக்குவாதமா மாறும்.
🌷 ஆணவம்எல்லாம் பணிவாக மாறும்.
அதிகாரம் எல்லாம் கூனிக் குறுகி
மாறியிருக்கும்.மிரட்டல் எல்லாம்
அனமதி காக்கும்.
🌷 எது வேணும்னு ஆலாய்ப் பறந்தோமோ,அதையே தூரமாக
வைத்து பார்க்கத் தோணும்.
🌷 எதற்காக ஓடினோம்?எதற்க்காக
ஆசைப்பட்டோம்? எதற்காக எதைச்
செய்தோம்?என்ற காரணங்கள்
எல்லாமே, காலப்போக்கில்
மறந்து போகும்.மரத்துப் போகும்!
🌷 தீராப் பகையை தந்து வன்மத்தோடு
வாழ்ந்து,ஆடவிடுவதும் காலம்தான்.
அதன்பின் ஆட்டத்தை அடக்கி
மறதியை கொடுத்து,ஓரமாய்
உட்கார வைப்பதும் அதே காலம்தான்.
🌷 வெளியே மாளிகையாய்
தோற்றமளிக்கும் எதுவும்
உள்ளிருக்கும் விரிசல்களை
எடுத்துரைக்காது.
🌷 வாழ்க்கையில் பக்குவம்
கிடைப்பது அவ்வளவு எளிதல்ல.
அதற்கு பல அவமானங்களை சோதனைகளை கடந்திருக்க வேண்டும்!!
🌷 அவரவர் அனுபவம் அவரவர்க்கு.
🌹 வாழ்க்கை தத்துவங்கள்.🌹

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...