Tuesday, November 29, 2022

ஒரு வீட்டில் தினமும் இந்த ஒரு வேலையை ஆண்கள் செய்து வந்தாலே போதும். அந்த குடும்பத்திற்கு கஷ்டமே வராது. கண்ணுக்கே தெரியாத சாபத்திற்கும் விமோசனம் கிடைக்கும்.

 பெரும்பாலும் எல்லா கட்டுப்பாடுகளும், விதிமுறைகளும் பூஜை புனஸ்காரங்களும் செய்ய வேண்டிய கடமை, பொறுப்பு பெண்களுக்கு கூடுதலாக இருந்தாலும், ஆண்கள் செய்ய வேண்டிய கடமைகளும் சில உள்ளது. ஆண்கள் கடைபிடிக்க வேண்டிய முக்கியமான ஒரு விஷயத்தை பற்றி தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம். இந்த ஒரு விஷயத்தை தொடர்ந்து ஒரு வீட்டில், ஒரு ஆண் கடைபிடித்து வந்தால், அந்த குடும்பம் சீரும் சிறப்புமாக செல்வக் கடாட்சத்துடன் இருக்கும். குறிப்பிட்டு சொல்லப் போனால் முன்னோர்களின் ஆசிர்வாதத்தை பெற்று தரக்கூடிய ஒரு செயல்பாடுதான் இது. பதிவிற்கு சென்று விரிவாக பார்ப்போம் வாருங்கள். காகத்திற்கு சாதம் வைப்பது. இந்த வேலையை ஆண்களும் செய்யலாம். பெண்களும் செய்யலாம். குழந்தைகளும் செய்யலாம். அதில் எந்த ஒரு தவறும் கிடையாது. ஆனால் வீட்டில் இருக்கும் ஒரு ஆண், காலையில் எழுந்து சுத்தபத்தமாக குளித்துவிட்டு, காகத்திற்கு சாப்பாடு வைக்க வேண்டும். சாப்பாடு என்றால் வடித்த சாதம் தான் என்று அர்த்தம் கிடையாது. பிஸ்கட் மிக்சர் அல்லது வேறு ஏதாவது உணவுப் பொருள் வீட்டில் வாங்கி வைத்து, தினமும் அந்த உணவு பண்டத்தை காகத்திற்கு வைத்துவிட்டு, சிறிய கிண்ணத்தில் தண்ணீரை வைத்து விட்டு ஒரு நிமிடம், உங்களுக்கு முன்னால் வாழ்ந்த முன்னோர்களை மனதில் நினைத்து, உங்களுடைய குடும்பம் நன்றாக இருக்க வேண்டும் என்று வேண்டுதல் வைக்க வேண்டும். அவ்வளவு தான். இந்த ஒரு விஷயத்தை ஆண்கள் பின்பற்றி வந்தாலே அந்த குடும்பத்திற்கு இருக்கும் கஷ்டங்கள் படிப்படியாக குறையும். முன்னோர்கள் விட்ட சாபம் இருந்தாலும் அல்லது நம்முடைய குடும்பத்திற்கு ஏதேனும் கண்ணுக்குத் தெரியாத தோஷம் இருந்தாலும் நம்முடைய முன்னோர்கள் தவறு செய்து வந்திருந்தாலும், அந்த துன்பத்திலிருந்து விடுபட ஆண்கள் செய்யக்கூடிய இந்த பரிகார முறை நல்லதொரு பலனை கொடுக்கும். ஏன் இதை பெண்கள் செய்ய கூடாதா என்று சிலர் கேட்கலாம். பெண்கள் இதை செய்யலாம் தவறு கிடையாது. இருப்பினும் ஆண்கள் இதை செய்வது இரட்டிப்பு பலனை தரும் என்று சொல்கிறது சாஸ்திரம். அடுத்தது பெண்களுக்கு. பெண்கள் தினமும் வீட்டில் விளக்கு ஏற்ற வேண்டும். விளக்கை ஏற்றிவிட்டு, வீட்டில் இருக்கும் ஆண்களை அந்த விளக்கை மலையேற்றி விடு என்று சொல்லவே கூடாது. பெண்கள் விளக்கு ஏற்றி, பெண்கள் தான் அந்த விளக்கை மலை ஏற்ற வேண்டும். வீட்டில் பெண்கள் இருக்கும் போது, விளக்கு ஏற்றும் வேலையை ஆண்கள் செய்யக்கூடாது. விளக்கு ஏற்றும் வேலை என்பது பெண்களுக்கு உரியதான விஷயம். எந்த ஒரு வீட்டில் தினமும் பெண்கள் விளக்கு ஏற்றி இறைவழிபாடு செய்கிறார்களோ, குலதெய்வத்தை மனதார நினைத்து வழிபாடு செய்கிறார்களோ, அந்த குடும்பம் சுபிட்சம் பெறும். இது பெரும்பாலும் எல்லோருக்கும் தெரிந்திருக்கும். ஆண்கள் இந்த விளக்கு ஏற்றும் வேலையை செய்யக்கூடாதா. செய்யலாம். பெண்கள் வீட்டில் இல்லாத சமயம் ஆண்கள் வீட்டில் விளக்கு ஏற்றலாம் தவறு கிடையாது. சூழ்நிலை காரணமாக ஆண்கள் காகத்திற்கு வைக்க கூடிய சாப்பாட்டை பெண்கள் வைப்பதினால் எந்த பாதிப்பும் ஏற்படாது. அதேசமயம் சூழ்நிலை காரணமாக பெண்கள் ஏற்றக்கூடிய விளக்கை ஆண்கள் ஏற்றும் போது எந்த ஒரு பாதிப்பும் வந்து விடாது. ஆனால் சோம்பேறித்தன பட்டு என்னால் முடியாது இந்த வேலையை நீ செய் என்று நம்முடைய கடமையை அடுத்தவர்கள் கையில் கொடுக்கும்போது தான், சில பிரச்சனைகள் வரும். நம்பிக்கை உள்ளவர்கள் மேல் சொன்ன விஷயத்தை பின்பற்றி நல்ல பலனை பெறலாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...