Thursday, November 24, 2022

மிக நல்ல மனிதர்.

 வளர்ந்து வரும்...

வளர்ந்து விட்ட நடிகர் அவர்...
வேலை நிமித்தமாக ஓர் இடம் சென்று திரும்புகையில் அந்த இடத்தின் வாயிலில் ரசிக குட்டீஸ் பட்டாளம் மொய்த்துக் கொன்டது
நடிகரும் சற்றும் சளைக்காது சினுங்காது
செல்ஃபி
ஆட்டோகிராஃப்
புகைப்படம் எடுக்க என வந்த குட்டீஸ் அனைவரும் மகிழும் வகையில் மனமகிழ்வுடன் ஒத்துழைத்தார்
இனி தான் கிளைமாக்ஸே...!
அனைவரையும் திருப்திபடுத்தி சிரிக்க வைத்து மகிழ்வடைய செய்து பிரியா விடை பெற்று அவர் திரும்ப காரில் ஏற எத்தனிக்கும் நேரத்தில் தான் அந்த நிகழ்வு
டீயூஷன் முடித்து அப்போது தான் வீடு திரும்பிய ஒரு சிறு குட்டி ரசிகை அப்போது தான் தம் மனம் கவர்ந்த அந்த நடிகரை கண்டு விட்டால் போலும்
உடனே ஓ என சப்தமிட்டபடி அவரது பெயரை மரியாதையுடன் அங்கிள் என கூறியபடி முன் வந்து நின்றாள் தம் ஷோல்டர் பேக்கை திறந்தபடி
"அங்கிள் எனக்கு ஆட்டோகிராஃப்" என கூறி ரஃப் நோட்டை நீட்டினாள்
அந்த நடிகரும் தமக்கு நேரமாகியதை உணர்ந்தும் அந்த திடீர் சிறுமி மகிழும் வண்ணம் காரில் இருந்து இறங்கி அந்த குட்டீஸ்க்கு கையேழுத்திட்டு அவளிடம் பை பை நல்லா படிக்கனும் என கூறி கிளம்ப எத்தனிக்க
அந்த நேரம் நடிகருடன் சேல்ஃபி எடுத்த மற்றொரு சிறுமி
"ஹேய் பார்த்தியாடி நான் அங்கிளோட செல்ஃபி எடுத்துட்டேன்" என்று வேறுப்பேற்ற
அதனை கண்டு அழுதபடி திடீர் குட்டி சிறுமி
"அங்கிள் அங்கிள் எனக்கு போட்டோ கிடையாதா..?"
என அழுக தயாராக
அந்த நடிகரும் தமது பிஸி நேரத்திலும் கடுப்படையாது அந்த சிறுமியின் அழுகையை நிறுத்தி அவள் ஆவலை பூர்த்தி செய்ய
"சரி பாப்பா நான் கிளம்பல
ஓகே ரெடி செல்ஃபி எடுத்துக்கலாம்"
என கூற
அச்சிறுமியும்
""போன் என்கிட்ட இல்ல அங்கிள்
கொஞ்சம் வெயிட் பன்னுங்க அங்கிள்
என் டாடி கிட்ட இருந்து வாங்கி வரேன்" என்று ஏழெட்டு வீடு தாண்டி இருந்த தமது வீடு நோக்கி பீ.டி.உஷாவானாள் அச்சிறுமி
நடிகர் கதையில் ஏற்ப்பட்ட திடீர் டர்னிங் கண்டு ஒன்றும் செய்ய இயலாது அந்த குட்டி ரசிகையின் வரவிற்காக அவளது ஆசை கட்டளையான "கொஞ்சம் இருங்க அங்கிள்" என்ற வார்த்தையின் பொருட்டு தமது பிஸியான ஷெட்யூல் இருந்தும் உண்மையான ரசிக குட்டீசுக்காக காத்திருந்தார் ஆவ்வீட்டு வாயிலில் இருந்த தமது காரின் முன்
சிறுமி வீட்டினுள் சென்று தமது தந்தையிடம் சென்று மொபைல் கேட்க அவர் அவளிடம் தர மறுத்து வி்ட்டார்
மீண்டும் அழுதபடி அச்சிறுமி நடிகரிடம் ஓடி வந்தாள்
அந்த நடிகரும் ஹாய் குட்டி எவ்ளோ நேரம் காக்க வெச்சுட்ட தெரியுமா ..? இட்ஸ் ஓகே வா செல்ஃபி எடுத்துக்கலாம்" என கூற
அழுதபடி அச்சிறுமியும்
"அங்கிள் அங்கிள் ..
நீங்க வந்திருக்கீங்க உங்க கூட போட்டோ எடுக்க மொபல் கேட்டேன் அங்கிள் மம்மி டாடிகிட்ட ஆனா அவங்க என்ன நம்பாம கேம்ஸ் விளையாட பொய் சொல்றியா போ போ போய் படிக்கற வழிய பாரு
போட்டோ எடுக்க வேணும்னா அந்த நடிகரை இங்கே வந்து எடுத்துன்டு போக சொல்லு
போடி போ பொய்யா செல்ற கேம்ஸ் விளையாட"
என இவ்வாறு தமது பெற்றோர் கூறிவிட்டதாக கூறியது மட்டுமில்லாது அச்சிறுமி
"அங்கிள் ப்ளீஸ் அங்கிள்
ஜஸ்ட் வாக்கபுள் டிஸ்டன்ஸ் அங்கிள்
டூ மினீட்ஸ் அங்கிள்
அந்த கிரீன் கேட் தான் எங்க வீடு அங்கிள்"
என மீண்டும் அழ தயாராக தேம்பியபடியே கூற
நடிகர் சற்றும் யோசிக்காமல் அந்த சிறுமியை தமது தோளில் தூக்கிக்கொண்டு மற்ற குட்டீஸ் படை புடை சூழ அந்த பச்சை கேட் வாசல் முன் நின்றுக்கொன்டு இவ்வாறு கூறினார்
"சித்து பாப்பா பேரண்ட்ஸ்....
நான் நடிகர் சதீஷ் வந்திருக்கேன் உங்க குட்டீஸ் கூட நான் ஒரு செல்ஃபி எடுத்துக்கலாமா வித் யுவர் பர்மிஷன்" என்றார்
வேறு என்ன எழுத மேலும் இதைபற்றி...
மிக நல்ல நண்பர்
மிக நல்ல மனிதர்
மற்றவர்கள் துயர் காண பொறுக்காதவர்
குட்டீஸ் வட்டாரத்தில் இவர் மாட்டினால் வெளிவர சில மணி நேரங்களாவதாகும்
வாழ்க வளர்க....
May be an image of 1 person, standing and indoor

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...