ஏன்..?
தன்னுடைய கதாபாத்திரம், தான் பேசும் வசனம், அதன் பின் காட்சியமைப்புகளில் எந்த வகையிலும் சமுதாயம் தவறாக பின்பற்றி விடக்கூடாது என்பதில் அணுஅணுவாய் கவனம் செலுத்துபவர், முரண்பாடான கருத்துகளை முன்வைக்கவோ வரைமுறை மீறிய விசயங்களை வைத்திடவோ துளியும் அனுமதி தராதவர், ஒவ்வொரு படத்திலும் தன் நீதிநிலையை விட்டு அகலாமல் நம்நாடு, மொழி, மக்கள், கலாச்சாரம், பண்பாடு, கலைகள், பாசிடிவ் தாட்ஸ், என அதை காத்தே நடித்து நல்ல பெயர் வாங்கிய நம்ம வீட்டுப்பிள்ளை தான் நம் மக்கள் நாயகன்....
வரும் படத்தையெல்லாம் ஏற்று நடித்திருந்தால் அநேகமாய் இந்நேரம் 150 படங்களை தாண்டியிருப்பார், அல்லது சற்று சமரசம் செய்து நடித்திருந்தால் 100 படங்களை நிச்சயம் தொட்டிருப்பார்... ஆனால் "சாமானியன்" 45 வது படமாக வர காரணம் மக்கள் மீது அவர் கொண்டுள்ள அக்கறையும், தன்னை பல லட்சம் பேர் பார்க்கும் பொறுப்பான துறையில் இருக்கிறோம் என்ற சமூக பொறுப்பே காரணம்...காசு பணம் சம்பாதிப்பதை விட நல்ல பேரை சம்பாதிப்பதே போதும் அதுவே என் சொத்து என எண்ணுபவர் தான் இந்த தங்கமான ராசா..
இத்தகைய நல்ல மனசுக்காரர் என்பதால் தான் தமிழக மக்களின் மனசுக்கேத்த மகராசா வாக இன்றழவும் விளங்கி வருகிறார்,
மேலும் தமிழ் மண்ணை, ஏன் சங்கம் கலைகள் வளர்த்த மதுரை மண்ணின் நாயகர், தமிழ் படத்தில் மட்டுமே நடித்து தமிழில் மட்டுமே படப்பெயர் வைத்த தனிச்சிறத்த மனிதர்,
எந்த உயரத்திற்கு போன போதும் தலைக்கணம் கொள்ளாத எளிய மனிதர்,
சாதி - மதம் வேறுபாடு அறவே ஒதுக்கி அனைவரும் சமம், தான் அனைவருக்கும் பொதுவான அவர்கள் வீட்டுப்பிள்ளையென விளங்கி வருபவர்...
10 வருடங்கள் கழித்து இன்று "சாமானியன்" படத்தில் நடித்து வரக்காரணம் நிச்சயம் இது மக்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெறும் என்பதே!
இன்று உள்ள டிரெண்ட்டில் ஈஸியாக ஜெயிக்க முடியாது, வலுவான நேர்த்தியான கதையும் திரைக்கதையும் அவசியம் என்பதை அறிந்து அவை சரியாக இருப்பதை உணர்ந்தே மிக ஆர்வமாக உற்சாகமாக நடித்து வருகிறார் நமது ராமராஜன் சார்,
அந்தளவுக்கு இப்படத்தின் கன்டண்ட்டை அமைத்து, ஒவ்வொரு ஷாட்டும் டயலாக்கும், சீன்ஸையும் ரொம்ப ரசிச்சு கவனமா கையாண்டு மேக்கிங்ல மிரட்டி வருகிறார் இயக்குனர் திரு. ராகேஷ் அவர்கள்... இது ராமராஜன் சார் வெற்றிப்பட வரிசையில் மிக முக்கியமான படமாக இருக்க வேண்டும் என்று தயாரிப்பாளர் மதியழகன் சாரும், ஒட்டுமொத்த டெக்னீஷியன்களும் போட்டிப்போட்டு பணியாற்றி வருவது மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது,
No comments:
Post a Comment