*சமீபத்தில் ஒரு சகோதரி கேட்டார்*
*அண்ணா வீட்டில் போன் வந்தாலே எடுக்க பயமாக இருக்கு. குடும்ப உறுப்பினர் அல்லது உறவினர் யாருக்காவது ஏதாவது ஆகியிருக்குமோ அல்லது ஆக்சிடெண்ட் ஆகிருக்குமோ என பதட்டமாக இருக்கு என்றார்.*
*கொஞ்ச நாள் சீரியல்களை பார்க்காமல் நல்ல புத்தகங்களை வாங்கி படியுங்கள். இந்த பிரச்சினை சரியாகும் என்றேன்.*
*ஒரு இனத்திற்கு அடையாளம் அதன் கலாச்சாரம்*
*அந்த கலாசாரத்தை சிதைத்தாலே இனத்தின் அடையாளம் சிதைந்து போகும்.*
*விருந்தோம்பல், பண்பாடு, வாழ்வியல் முறை, கூட்டு குடும்ப அமைப்பு இதுதான் தமிழர்களின் பண்பாடு இதை மற்ற நாட்டினர் ஆச்சரியமாக பார்க்கின்றனர் ஆனால்..*
*டிவி சீரியல்களின் கதை காழ்ப்புணர்ச்சி, எதிர்மறை சிந்தனை, அடுத்தவரை கெடுப்பது எப்படி?கடைசிவரை கெட்டவரே வெற்றி பெறுவது, குடும்பத்தில் கலகம் செய்வது எப்படி?*
*நல்லவர் கடைசி வரை பெரும்பாடு படுதல் இதுதான் பெரும்பாலான சீரியல்களின் மூலக்கரு.*
*ஒரு இல்லத்தில் மகாலெஷ்மிகளின் ஆதிக்கம் இருக்க மழலைகளின் ஒலிகள்,தெய்வீக பாடல்கள்,நல்ல சொல் இடம்பெறுதல்,மகிழ்ச்சியான வாழ்வியல் முறை இது இருக்கவேண்டும் என சாஸ்திரம் சொல்கிறது ஆனால்..*
*நாள் முழுவதும் பார்க்கப்படும் சீரியல்களில் ஒரே அழுகுரல்,அபசகுனமான சொற்கள்,மோசமான ஒலிகள்,தீய சிந்தனைகளை உருவாக்கும் கதைகள் இப்படியான தாக்கங்கள் ஒரு இல்லத்தில் இருந்தால் அந்த குடும்பம் நிம்மதி இழக்கும்,மூதேவி வாசம் செய்வாள்,இல்லத்தினருக்கு மனச்சிதைவு ஏற்படும்.*
*பொழுதுபோக்கு அம்சம் என்பது நம்மை மகிழ்ச்சி படுத்த வேண்டும்*
*மன அழுத்தத்தை குறைக்கவேண்டும்,நம் ஓய்வை பயனுள்ளதாக ஆக்க வேண்டும் அப்படியா இருக்கிறது இப்போது உள்ள சீரியல்கள்.*
*ஒரு குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கவேண்டும் என்றால் அந்த இல்லத்தில் இருக்கும் பெண்கள் சந்தோசமாக இருக்கவேண்டும் அபோதுதான் குடும்பம் தழைக்கும்.*
*நல்ல பாடல்கள் கேட்டல்,நல்ல புத்தகங்கள் படித்தல்,கூடை பின்னுதல்,ஓவியம் வரைதல்,வீட்டை அழகுபடுத்துதல்,பூஜை அறையை அலங்கரித்தல் இதை இல்லத்தரசிகள் செய்தாலே போதும் எப்போதும் உங்கள் இல்லத்தில் மகாலெஷ்மி வாசம் செய்வாள்.*
No comments:
Post a Comment