ஒரு காலத்துல தமிழ் சினிமால பி & சி செண்டர் மார்க்கெட் வியாபரமே தனி. பெரிய ஹீரோஸ் படங்கள் எல்லாம் ஏ,பி,சி னு மூணு செண்டர்லேயும் ஓடும். ஆனா அறிமுக ஹீரோக்கள். வளர்ந்து வரும் ஹீரோக்கள் அப்படி எதிர்பார்க்க முடியாது. பட்ஜெட் வியாபாரம் இதெல்லாம் கணக்கு பார்த்து பி&சி செண்டருக்கான படங்கள் தனியாவே வந்த காலம் இருக்கு. ஒரு நாயகன் அறிமுகமாகி பி & சி செண்டர்ல வளர்ந்து, அங்க அழுத்தமா கால் பதிச்சு, அதுக்கப்புறம் ஏ செண்டர் ஆடியன்ஸ் மனசுல இடம் பிடிச்சாலே போதும். அந்த நாயகன் தமிழ் சினிமால நீண்ட காலம் தாக்கு பிடிக்கலாம்.
அப்படி வெற்றியடைந்த நாயகனுக்கு ஒரு சரியான உதாரணம் சரத்குமார். இன்னொரு உதாரணம் விஜய். அதுவே ஏ செண்டர்ல பிரம்மாண்டமான அறிமுகம் கிடைச்சாலும், பெரிய வெற்றிகள் கிடைச்சவங்க பலரும் பி & சி செண்டர்ல கால் பதிக்க முடியாம தோத்து போயிருக்காங்க. அவங்க கேரியர் ரொம்ப சீக்கிரமே முடிவுக்கு வந்துடும். அதுக்கான உதாரணங்கள் அரவிந்த்சாமி, மாதவன். இந்த டாபிக் கூட ஒரு கட்டுரைக்கான களமா இருந்தாலும், நாம இங்க நாயகர்கள் பத்தி பேசப் போறதில்லை. இந்த நாயகர்களை பி & சி செண்டருக்கு கொண்டு போய் சேர்த்த ஒருத்தரை பத்தி தான் நாம பேசப்போறோம்.
90 களுக்கு முன்பு ராமராஜன், மோகன் இருவருடைய வெற்றிக்கு இளையராஜாவுடைய பங்கு எப்படிப்பட்டதுனு நம்ம எல்லாருக்கும் தெரியும். அதே போல சரத்குமார் மற்றும் விஜயின் ஆரம்பகால வெற்றிகளுக்கு இசையமைப்பாளர் தேவா அவர்களின் பங்களிப்பும் சற்றும் குறைவில்லாதது.
புலன் விசாரணை, வேலை கிடைச்சுடுச்சு, புது மனிதன் போன்ற படங்கள்ல வில்லனா நடீச்ச சரத்குமார் மெதுவா ஹீரோவா மாற ஆரம்பிச்ச காலத்துல தேவா ஒரு மிக முக்கிய இசையமைப்பாளரா தமிழ் சினிமால வளர்ந்துட்டாரு. தேவாவோட கேரியர்ல மிக முக்கியமான ஒரு படமான வசந்த காலப் பறவை படத்துல சரத்குமார் தான் வில்லன். தேவாவோட ஆரம்ப கால வெற்றில மிக முக்கிய பங்கு இந்த படத்துக்கு உண்டு. அதுக்கப்புறம் சரத்குமார் ஹீரோவாகறாரு.
சாமுண்டி, அரண்மனை காவலன், பேண்ட் மாஸ்டர், மஹா பிரபு, வேடன், சூரியன், ஊர் மரியாதை, கட்டபொம்மன், நம்ம அண்ணாச்சி, நட்புக்காக சரத் நடிச்ச எல்லா பட்ஜெட் படத்துக்கும் தேவா தான் இசை. இந்த படம் எல்லாமே பி & சி செண்டர்ல ஹிட்டடிச்ச படங்கள். சாமுண்டி படப்பாட்டெல்லாம் இன்னிக்கும் கிராமத்து டவுன்பஸ் பாடல்கள். சரத்தோட முதல் சூப்பர் ஹிட் மூவி சூரியன் தான். சூரியன் படத்தோட பாடல்கள் பத்தி நான் தனியா எதுவும் சொல்ல வேணாம். அந்த ஆல்பமே சூப்பர் ஹிட். அதே மாதிரி தான் கட்டபொம்மன் படமும்.. சரத்குமாரோட வளர்ச்சிக்கு இந்த படத்தோட பாடல்களும் ஒரு முக்கிய காரணம். நாட்டாமை வரைக்கும் சரத்தோட வளர்ச்சிக்கு துணையா இருந்தது தேவாவோட இசை தான். சூரியன் தவிர வேறெந்த படமும் பெரிய ஹிட் கிடையாது. ஆனா எல்லா படத்திலும் சில நல்ல பாடல்கள் இருக்கும். "மண்ணை தொட்டு கும்பிட்டுட்டு", " முத்து நகையே முழு நிலவே" சாமுண்டி, "கம்மாக்கரையில" வேடன், "கிச்சலி சம்பா" ஊர் மரியாதை, "நீலகிரி மலை ஓரத்தில்" நம்ம அண்ணாச்சி, "சொல்லவா சொல்லவா ஒரு காதல் கதை", மஹாபிரபு, " பிரியா பிரியா" "பாலைவனத்தில் ஒரு ரோஜா" கட்டபொம்மன். இப்படி எல்லா படத்திலும் ஒரு சூப்பரான பாட்டு இருக்கும். இது போக சூரியன் ஆல்பம். இந்த பாடல்கள் தான் சரத்தை பி &சி செண்டருக்கு கொண்டு போச்சு.
விஜய்க்கு ஆரம்ப காலத்துல கை கொடுத்ததும் தேவா தான். இன்னும் சொல்லப்போனா விஜயோட கேரியர் பார்த்து பார்த்து கட்டமைக்கப்பட்டது. நான் மேல சொன்னா மாதிரி விஜயோட ஆரம்ப கால படங்கள் எல்லாமே பி & சி செனடர் படங்கள் தான். பூவே உனக்காக தான் அவரை எல்லா ஆடியன்ஸ் கிட்டயும் கொண்டு போச்சு. அதுக்கு முன்னாடி ரசிகன், தேவா, விஷ்ணு, செந்தூரபாண்டி இந்த நாலு படத்துக்கும் இசை தேவா தான். அத்தனை பாட்டும் ஹிட்டு. "சின்ன சின்ன சேதி சொலி", மானே மானே சரணம்", செந்தூரப்பாண்டி, " சிங்கார கண்ணுக்கு" "" தொட்ட பெட்டா" விஷ்ணு, தேவா படத்தோச ஆல்பமே சூப்பர் ஹிட். "ஒரு கடிதம் எழுதினேன்" பாட்டு அந்த காலத்து காதலர்களுக்கு தேசிய கீதம். ரசிகன் படப்பாடல்களை பத்தி தனியா வேற சொல்லனுமா.
விஜய் டாப் ஹீரோ ஆனதுக்கு அப்புறமும் விஜய்க்கு நிறைய ஹிட் கொடுத்துருக்காரு. நேருக்கு நேர், ஒன்ஸ்மோர், பிரியமுடன், நெஞ்சினிலே, நினைத்தேன் வந்தாய், மின்சார கண்ணா, குஷி, பகவதி. இது எல்லாமே மியூசிக்கலி ஹிட்டு. விஜய்க்கு வித்யாசாகர் கிடைக்கறதுக்கு முன்னாடி வரைக்கும் தேவா தான் விஜய் படங்களோட ஹார்ட் பீட். இதை முக்கியமா சொல்றதுக்கு காரணம் இந்த டைம்ல ரஹ்மான் தான் ஹாட் கேக். அதுவும் லேட் 90ஸ்ல பீக்ல இருக்காரு. ஆனா ரஹ்மானோட ஒரு படம் கூட சேராம விஜயால மியூசிக்கல் ஹிட் கொடுக்க முடிஞ்சுது. அதனால தான் தேனிசை தென்றல், விஜய்க்கு ரொம்ப ஸ்பெஷல்னு சொல்றேன். இப்ப முதல் பாராவை படிச்சா விஜயோட விஸ்வரூப வெற்றிக்கு அஸ்திவாரம் எதுனு புரியும்.
இந்த லிஸ்ட்ல அஜீத்தையும் சேர்க்கலாம். "பிள்ளையார்பட்டி ஹீரோ நீதாம்பா" னு பாடி அஜீத்தோட பிள்ளையார் செண்டிமெண்டை ஆரம்பிச்சு வச்சதே தேவா தான். ஆரம்ப கால அஜீத் தல அஜீத் ஆகற வரைக்கும் முக்கியமான நாலு படம் இருக்கு. ஆசை, காதல் கோட்டை, வாலி, ஆனந்த பூங்காற்றே... இந்த பாடல்கள் சொல்லும் தேவா யாருனு. அதுக்கப்புறம் தான் விஜய்க்கு வித்யாசாகர் மாதிரி அஜீத்துக்கு யுவன் கிடைச்சாரு. விஜய் + அஜீத் + தேவா + ஹரிஹரன் காம்போ கேட்டு பாருங்க. அம்புட்டும் ஜாங்கிரியா இருக்கும்.
பிரசாந்தோட பயணத்தை எடுத்துப் பார்த்தாலும் அங்கேயும் தேவா தான் இருப்பார். "தண்ணிக் குடம் எடுத்து தங்கம் நீ" பாடல் மூலமாக முதல் படத்திலேயே பிரசாந்தை பட்டி தொட்டி எங்கும் கொண்டு சேர்த்தது தேவா தான். "கண்ணெதிரே தோன்றினாள்" பாடல்களுக்கு ஈடு இணைய கிடையாது. என்ன மாதிரியான ஆல்பம். கல்லூரி வாசல், அப்பு இரண்டுமே பேர் சொல்லும் படங்கள்.
ஒவ்வொரு ஹீரோவோட படங்கள் லிஸ்ட் எடுத்தா அத்தனை ஹிட் பாடல்கள் கொடுத்திருக்கார் தேவா சார்.
இந்த பயணம் தொடர்ந்துட்டே தான் இருக்கு. தேவாக்கு அப்புறம் யுவன் வரும் போது சிம்புவும்,தனுஷும் வராங்க. ரெண்டு பேருமே வாரிசு நடிகர்கள்னாலும் இவங்களோட ஆரம்ப அடையாளம் யுவன் தான். அடுத்து அனிருத் - சிவகார்த்திகேயன் னு போய்ட்டு இருக்கு.
என்ன தான் ஹீரோக்கள் வச்சு தான் வியாபாரனாலும் பாடல்கள் தான் ஒரு படத்தோட விசிட்டிங் கார்ட். ரஜினி படத்துக்கு இசை தேவானு பேர் வந்த போது எல்லாருக்குமே ஆச்சரியம். தேவா மேல ஒரு பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. அதை வெற்றிகரமா எதிர்கொண்டார். ஒரு வளர்ந்து வரும் ஹீரோ படத்துக்கு எந்த எதிர்பார்ப்பும் கிடையாது. அந்த இடத்துல தேவா போட்ட பாடல்கள் தான் அவரோட தனித்துவம்.
ஹாப்பி பர்த்டே தேவா சார்.
No comments:
Post a Comment