Friday, November 25, 2022

*திருஇந்தளூர் திவ்ய தேசம்*

 "ஆசை வழுவாது ஏத்தும்* எமக்கு இங்கு இழுக்காய்த்து*

அடியோர்க்கு தேசம் அறிய*
உமக்கே ஆளாய்த் திரிகின்றோமுக்கு*
காசின் ஒளியில் திகழும் வண்ணம்* காட்டீர் எம்பெருமான்*
வாசி வல்லீர்! இந்தளூரீர்!
வாழ்ந்தே போம் நீரே!"
-திருமங்கையாழ்வார்
(பெரிய திருமொழி)
-
*திருஇந்தளூர் எனும் திருத்தலத்தில் எழுந்தருளியுள்ள எம்பெருமானே!*
*குறைபாடுகள் ஏதும் இல்லா ஆசையுடன் உம்மை சேவிக்க வரும் அடியோங்களுக்குக் குறையாக அமைந்துவிட்டது,*
*பொற்காசினின்றும் உண்டாகின்ற ஒளியை விட பிரகாசமான உன் திருவடியின் அழகைக் காட்டுவதற்கு மறுக்கின்றீர்?!*
*இது தக்கது, இது தகாதது என்பதனை அறியும் ஆற்றல் பெற்ற நீரே, உம் திருமேனியை எமக்கு காட்டாமல் இருக்கின்றீர்?!*
*சரி, நீரே உம் உடம்பைக் காட்டிக்கொண்டு வாழ்ந்து போம்!* என்கிறார்.
(திருமங்கையாழ்வார் இத்தலத்திற்கு வந்தபோது திருவாராதனம் முடிந்து கோயில் கதவு தாளிட்டதால், தான் வருவதற்குள் இவன் கதவையடைத்துக் கொண்டானே என்ற கோபத்துடன், தனது பத்து பாசுரங்களிலும் இவ்வெம்பெருமானை வசை வாழ்த்துப் பாசுரமாகவும், அவருக்கும்-பரிமள ரெங்கனுக்கும் நடந்த உரையாடல் போலேயும் அன்வயித்துள்ளார்!)
*முடிவில், எம்பெருமான் நின்றவூரானைப் போலே நாமுஞ்சென்று பாசுரங்களுக்காக நிற்க வேண்டி வருமோ என்று பரகாலனுக்கு அப்போதே காட்சியளித்தாராம்!*
மூலவர்:
பரிமள ரெங்கநாதன்/
சுகந்தவன நாதன்
நான்கு புஜங்களுடன் ஆதிசேஷன் மீது வீரசயனம்!
திருவடியில் கங்கையும், சிரசில் காவிரியுனுடனும் சேவை!
தாயார்:
பரிமள ரெங்கநாயகி/
சந்திர சாபவிமோசனவல்லி
சந்திரன் தனக்கு ஏற்பட்ட தோஷத்தைப் போக்க இத்தலத்தில் தவமியற்றி தோஷம் நீங்கப் பெற்றதாக வரலாறு! சந்திரனுக்கு *இந்து* என்றொரு பெயருண்டு. தனக்கு தோஷம் நீக்கிய இத்தலம் தனது பெயராலேயே அழைக்கப்பட வேண்டும் என சந்திரன் வேண்ட அதுவே *இந்தளூர் - திருஇந்தளூர்* ஆயிற்று!
பஞ்சரங்க ஷேத்திரத்தில் இது ஐந்தாவது ஷேத்திரமாகும்!
🙏🙏
No photo description available.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...