Friday, May 12, 2017

*இஸ்லாமும், சித்தர்களும்!*

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
சித்தர்கள் குறிப்பிட்ட மதத்துக்கோ, மொழிக்கோ, இனத்திற்கோ சொந்தமானவர்கள் இல்லை. சுருங்கச் சொல்வதாயின் அவர்கள் அரும்பசியை தீர்க்கும் உணவைப் போன்றவர்கள். உணவிற்கு பசியை தீர்க்கத்தான் தெரியும் என்பதைப் போல, தாங்கள் வாழ்ந்த சமூகத்தை நல்வழிப்படுத்த மட்டுமே சித்தர்கள் முயன்றார்கள்.
உயர்ந்த மெய்ஞான தேடலில் ”மெய்யுணர்வு” நிலையான இறை நிலையை உணர்ந்தவர்கள் அனைவருமே சித்தர்கள்தான், இதனை இந்து மதத்தில் முக்தி நிலை என்கின்றனர். இஸ்லாத்தில் இதனை ”தாவ்ஹீத்” என்றழைக்கின்றனர்.

இத்தகைய உயர் நிலையினை எய்தியவர்களே இஸ்லாத்தில் ”நபிமார்கள்” என்று அழைக்கிறார்கள். இவர்கள் உலக மக்களை உய்விக்க பல முயற்சிகளைச் செய்து இன்றும் நம்மிடையே வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். பூவுலகில் மக்களின் மனதில் அன்பும், சகோதரத்துவம் நிலைத்திருக்கவும், நீடிக்கவும் வழி காட்டும் இவர்களை மக்கள் இறை தூதர் என போற்றுகின்றனர்.
இதற்கு ஆதாரமாக யாகோபு சித்தரின் ”யாகோபு சுண்ணகாண்டம்” என்னும் நூலின் கடவுள் வணக்கப் பாடலைப் பார்க்கலாம்...
"ஆனந்தமாய் நிறைந்த அல்லா பாதம்
அடுத்துநின்ற அடுத்துநின்ற சித்தநபிமார்கள்
பாதம்போற்றி தானந்த மகமதுவை தொழுது
போற்றி தாட்டிகமாய் சுண்ணமென்ற காண்டம்
தன்னை வானந்த மாகவே அறுநூறாக
வகயாகப் பாடினேன் வண்மையாகக்
கோனந்த மெய்ப்பொருளா மின்னூல்தன்னை
குறிப்பாகப் பாடினேன் கூர்ந்து பாரே"
- யாகோபுச் சித்தர் -
எங்கும் ஆனந்தமாய் நிறைந்து நிற்கின்ற அல்லாவின் பாதங்களையும், அல்லாவின் வழிநடக்கின்ற சித்தர்களான நபிமார்களின் பாதங்களையும் தானே தானாய் நின்ற முகமதுவின் பாதங்களையும் போற்றி உறுதியுடன் சுண்ணமென்ற இந்தக் காண்டத்தை உண்மையுடன் பாடினேன். உண்மைப் பொருளான இன் நூலை மிகவும் குறிப்புடன் பாடினேன் ஆழ்ந்து கவனித்துப்பார் என்று தனது நூலை தொடங்குகிறார்.
இதன் மூலம் இஸ்லாம் மதத்தில் தெய்வத்தன்மை பொருந்திய சித்த புருசர்களை நபிமார்கள் என்றழைக்கிறார்கள் என்பது புலனாகிறது.
இராமதேவர் என அழைக்கப் பட்டவரே பின்னர் இஸ்லாமிய கோட்பாடுகளில் ஆழ்ந்து தன்னை யாக்கோபு சித்தர் என அழைத்துக் கொண்டதாக தகவல்கள் கூறுகின்றன. இவர் அழகர் கோவிலில் சமாதி அடைந்ததாக தெரிகிறது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...