அதிகப்படியான நன்மைகளை கொண்ட இந்த இளநீரை தாகத்திற்காகவும், உடலில் நீர்ச்சத்தை அதிகப்படுத்துவதற்காகவும் நாம் குடிக்கிறோம்.
ஆனால் இந்த இளநீரினை அப்படியே குடிக்காமல் தேன் கலந்து குடித்தால் ஏராளமான நன்மைகள் கிடைக்கின்றன.
ஒரு டம்ளர் இளநீரில் ஒரு ஸ்பூன் தேன் கலந்து தினசரி காலையில் குடிக்க வேண்டும்.
இதில் உள்ள நோய் எதிர்ப்பு சக்திகள், மற்றும் வைட்டமின் ஏ, உடலில் நோய்களை உண்டாக்கும் கெட்ட செல்களை அழிக்கின்றன. இதனால் நமக்கு முதுமை ஏற்படுவது தடுக்கப்படுகிறது.
மேலும் இளநீரை தேன் கலந்த குடிப்பதால் குடல்களின் இயக்கம் சீராகுகிறது. நமக்கு அமிலச்சுரப்பை சீர்படுத்துகின்றன. இதன் காரணமாக அஜீரணக் கோளாறுகள் சீராகும்.
தேனில் ஏராளமான வைட்டமின்கள் இருப்பதால் உடல் செல்கள் ஊட்டம் பெறுகின்றன. இதனால் உடல் வலிமையாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும்.
இளநீர் ரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் குறைக்கின்றன. இதன் காரணமாக இரத்தக் குழாய்களில் அடைப்புகள் ஏற்படுவது தடுக்கப்படுவதால், இருதய நோய்க்கான வாய்ப்புகள் குறைகின்றன.
காலையில் இளநீரில் தேன் கலந்து குடிப்பதால் சிறுநீர் குழாய்கள் சீராக இயங்கும். உடலில் உள்ள கழிவுகள் வெளியேற்றப்படுவதால், உடல் எப்போதும் ஆரோக்கியமாக இருக்கும். மேலும் மலச்சிக்கல் பிரச்னையும் வராது.
என்ன உங்க வண்டியும் இப்போ இளநீர் கடையை நோக்கி போகுதா.....
No comments:
Post a Comment