Sunday, June 18, 2017

நீங்கள் விரும்பும் ஒரு பொருள்.



நீங்கள் விரும்பும் நேரத்தில் உங்களுக்குக் கிடைக்காதபோது
அது உங்களைத் தொந்தரவு செய்கிறது என்றால்,
அது உங்கள் எஜமானாகிவிட்டது என்று அர்த்தம்.
நீங்கள்
எதன் கட்டுப்பாட்டில் இருக்கிறீர்களோ,
உங்கள் மனஅமைதியும்
அதன் கட்டுப்பாட்டில்தான் உள்ளது.
வெளியில் உங்களுக்கு எவ்வளவு அதிகமான எஜமானர் இருக்கின்றனரோ,
நீங்கள் அவ்வளவு குறைந்த
மனஅமைதியுடன் இருப்பீர்கள்.
நீங்கள் அனுபவிக்கும் மனஅமைதிதான் நீங்கள் சரியாக வாழ்வதற்கான ஆதாரம்.
பழக்கங்கள் உங்கள் அமைதியைக் கெடுக்கின்றன.
எனவே,
அனைத்துப் பழக்கங்களும் தவறானவை.
மனஉறுதி " முடியாச் சக்தி "யின் ஊடாக உருவாக்கப்படுகிறது.
"முடியாச் சக்தியை"க் கடைபிடியுங்கள்.
உங்களைத் தொந்தரவு செய்த விஷயத்தை ஒரு வாரம் செய்யாமல் இருங்கள்.
ஒரு வாரத்திற்குப் பிறகு மீண்டும் அதைச் செய்யுங்கள்.
ஆனால்,
நீங்கள் விரும்புவது உங்களுக்குக் கிடைக்காமல் போவது,
உங்களைத் தொடர்ந்து தொந்தரவு செய்வதாக இருந்தால்,
"முடியாச் சக்தி" யை இன்னொரு வாரத்திற்கு கடைபிடியுங்கள்.
அந்த விஷயத்தை உங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வரும்வரை
அல்லது
அது உங்களுக்கு ஒருபோதும் தேவையில்லை என்ற நிலை வரும்வரை இதைத் தொடர்ந்து கடைபிடியுங்கள்.
ஒரு நேரத்தில் ஒரு வாரம் என்று
எடுத்துக்கொண்டு,
வாழ்நாள் முழுவதற்குமான வெற்றியை அடையுங்கள்.
எத்தனை புயல்களை சந்திக்கிறோம் என்று உலகத்திற்கு கவலை இல்லை.
கப்பலை பத்திரமாக கரை சேர்ப்பவனுக்கே இங்கு மரியாதை.
கனிவான காலை வணக்கங்கள்.
Image may contain: 1 person, standing

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...