கேள்வி :
"சந்திராஷ்டமம் என்றால் என்ன? அதன் பாதிப்பிலிருந்து மீளும் பரிகாரம் என்ன?
"சந்திராஷ்டமம் என்றால் என்ன? அதன் பாதிப்பிலிருந்து மீளும் பரிகாரம் என்ன?
பதில் :
சந்திராஷ்டமம் விளக்கம் :
சந்திராஷ்டமம் விளக்கம் :
"ஒன்பது கோள்களில் "சந்திர பகவான் " மனக்காரகன் என்று அழைக்கப்படுகிறார், அதாவது இவரது கருணை தீட்சண்யம், ஒருவரின் மனதை திடமாக்கி, வலிமையாக்கிடும்.
இவரது அருள் குறைவு ஒருவரது மனதை குழம்பச் செய்யும், மன வலிமை இழந்து, (மனநிலை பாதிப்பு கூட ஏற்படலாம்), எளிமையாக சொல்வதென்றால், ஒருவரின் மனம் ஆழ் கடல் போல சலனமற்று, தெளிவாக இருக்கவும், அதே மனம், அலைகள் ஆர்பரிக்கும் கடல் போல எண்ண அலைகளால் தடுமாறி தவிப்பதும் இவரது இட மாறுதல்களால் நடைபெறுபவை ஆகும்... கடல் நீரை உவமையாக கொண்டு இதை சொல்ல காரணம், சந்திர பகவான், அமிர்தம் கடைகின்ற சமயத்தில் கடலில் தோன்றியவர், அதோடு இவர் நீர் கிரகம் ஆவார்...
இவர் தோராயமாக ஒரு ராசியில் 2 1/2 நாட்கள், என பெயர்ச்சி ஆவார், அப்படி சந்திர பகவான், ஒருவர் ராசிக்கு எட்டாம் இடத்தில் பிரவேசிக்கும் போது, எட்டாம் இடம் என்பது மறைவு ஸ்தானம் என்பதால், அன்று அந்த ராசிக்காரருக்கு சந்திர பகவானின் அருள் தடைபடும், எனவே அந்நாள் அந்த ராசிக்கு "சந்திராஷ்டமம்" ஆகும், அந்நாளில் மனதில் குழப்பம், மந்த நிலை, தேவையற்ற பதட்டம், கோபம் என எண்ண ஒட்டம் ஒரு நிலையில் இராது...
பரிகாரம் :
1. முக்கண்ணர் (சிவபெருமான்) அம்சமான "தேங்காயை" அவர் மகன் முழு முதற் கடவுள் கணபதியை வணங்கி, அவர் முன் உடைத்திட, பாதிப்பு நீங்கும்...
2. ஒரு கைப்பிடி அரிசி மாவு எடுத்து "ஓம் கம் கணபதியாய நம" என மும்முறை உச்சரித்து, அதை எறும்புகளுக்கு உணவாக்கிட, பாதிப்பு குறைந்து நற்பலன் ஏற்படும்...
கேள்வி : ஏன் அரிசி மாவு?
பதில் : நவதானியங்களில் சந்திர பகவானுக்கு உரிய தானியம் "நெல் / அரிசி " ஆகும். ஆகவே, அரிசி மாவு...
பதில் : நவதானியங்களில் சந்திர பகவானுக்கு உரிய தானியம் "நெல் / அரிசி " ஆகும். ஆகவே, அரிசி மாவு...
3. வீட்டில் விளக்கேற்றி, குலம் காக்கும் குல தெய்வத்தை மனதில் வேண்டித் துதித்திட, கலங்கிய மனதில் தெளிவு பிறப்பதை உணரலாம்...
4. சந்திரனை தன் தலையில் சூடி சந்திரசேகரனாய்,
சந்திர மௌலியாய் காட்சி தரும் சிவபெருமானை, "சிவாய நம"
"ஓம் நமச்சிவாய" என்று உள்ளன்போடு கூறி தொழுதிட சகல துன்பமும் நீங்கி தெளிவு பெற்றிடலாம்...
சந்திர மௌலியாய் காட்சி தரும் சிவபெருமானை, "சிவாய நம"
"ஓம் நமச்சிவாய" என்று உள்ளன்போடு கூறி தொழுதிட சகல துன்பமும் நீங்கி தெளிவு பெற்றிடலாம்...
5. நலம் தரும் ஸ்ரீ யோக நரசிம்ம மூர்த்தியை மனதில் தியானித்திட, சந்திராஷ்டம துன்பம் முதற் கொண்டு துன்பங்களும் விலகிடும்...
ஓம் நமச்சிவாய...
ஓம் சந்திர மௌலீஸ்வராய நமஹ...
ஓம் சந்திர மௌலீஸ்வராய நமஹ...
No comments:
Post a Comment