*ஏழரைச் சனியால் ஏற்படும் இன்னல்கள* ்!...
ஒருவருக்கு அவரது ஜாதப்படி ஏழரைச்சனி நடக்கும் காலத்தில் என்ன என்ன இன்னல்கள் ஏற்படுகின்றன என்பதை அனுபவரீதியாக ஜாதகங்களை ஆராய்ந்து அதற்கேற்ப நடந்து கொள்வது உன்னதமாகும்.
ஏழரைச்சனி காலத்தில் வாகன விபத்துகள் அதிகம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. வாகனப் பயணத்தில் நிதானமாக சென்றால் ஏற்படும் விபத்துகளிலிருந்து தப்பிக்கலாம்.
உங்கள் ஜாதகத்தில் ஏழரைச்சனி இருக்கும் காலத்தில் தொழில் நஷ்டங்கள் ஏற்படும். அதனால் ஏழரைச்சனி இருக்கும் காலத்தில் தொழில் தொடங்காமல் இருப்பது மிகவும் நல்லது.
ஏழரைச்சனி நடக்கும்போது பணவரவுகளில் தடைகள் ஏற்படும். கடன் பெறுவதையும், கடன் தருவதையும் தவிர்ப்பது நல்லது. ஆடம்பர மற்றும் அநாவிசிய செலவுகள் அதிக அளவில் ஏற்படும்.
ஏழரைச்சனி காலத்தில் நோய்களின் தாக்கம் அதிக அளவில் இருக்கும். இதனால் நாம் உண்ணும் உணவினால் கூட நமக்கு நோய்கள்வர வாய்ப்புகள் உள்ளது. உங்களுக்கு சேராத உணவுகளை தவிர்ப்பது நல்லது.
ஏழரைச்சனி நடக்கும் காலத்தில் சர்ப்பங்கள் தொல்லை அதிகம் இருக்கும். இதற்கு உங்கள் ஜாதகத்தில் இராகு கேதுக்களின் திசையோ புத்தியோ நடக்கிறது என்று அர்த்தம். மேலும் சனியுடன் சம்பந்தப்பட்ட சர்ப்பங்கள் ஜாதகத்தில் இணைந்திருக்கும். முன் காலத்தில் நாம் பாம்புகளை அடித்திருந்தால் அது இப்போது நமக்கு தொல்லைகள் ஏற்படுத்தும்.
ஏழரைச்சனி காலத்தில் கண் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படும். ஏனெனில் கண்ணின் தேவதைகளான சூரியனுக்கும் சந்திரனுக்கும் சனி பகை கிரகமாகும்.
இக்காலத்தில் அதிகபடியான மன அழுத்தம் ஏற்படும். சந்திராஷ்டமம் காலத்தில் சில குறிப்பிட்ட திதி மற்றும் கிழமைகளில் மன அழுத்தம் ஏற்படும். மன சோர்வு, டென்ஷன், தேவையில்லா பிரச்சனைகள் போன்றவற்றை சந்திரனுக்கு பகை கிரகமான சனி ஏற்படுத்தும்.
சனி நடக்கும் காலத்தில் பொருட்கள் காணாமல் போகலாம். தேவையில்லாத பிரச்சனைகளால் வம்பு வழக்குகள் ஏற்படும். ஏழரைச்சனி நடக்கும் காலத்தில் போலியான பாசத்தை நம்பிவிடக் கூடாது. மற்றவர்களிடம் பழகும்போது மிகவும் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.
ஏழரைச்சனி இருக்கும் போது ஸ்ரீலஷ்மி நரசிம்மர் வழிபாடு, ஆஞ்சநேயர் வழிபாடு, சிவாலய வழிபாடு, அம்பாள் வழிபாடு, மகா கணபதி பூஜை, கந்த சஷ்டி விரதம் போன்றவற்றை அனுசரிப்பது சனியின் தாக்கத்திலிருந்து நம்மை காக்கும்.
யந்திர சனி பகவான் வழிபாடு மிக சிறந்ததாக கருதப்படுகிறது.
யந்திர சனி பகவான் வழிபாடு மிக சிறந்ததாக கருதப்படுகிறது.
No comments:
Post a Comment