அதிகமாக உணவு உண்ணும் பழக்கம் உடையவரா நீங்கள்? சாப்பாடு சாப்பிடும் அளவை குறைத்துக் கொள்ள முடியாமல் உடல் பருமன் அதிகரித்து சிரமப்படுபவர்கள் பலர் உள்ளனர். வயிறு நிறைய சாப்பிட்டால் தான் சிலரால் சிறப்பாக வேலை செய்ய முடியும். இந்த நிலையில் சாப்பிடாமலும் இருக்க முடியாது. இதற்கு ஒரே தீர்வு என்றால், குறைவாக சாப்பிட்டாலும் வயிறு நிறைய இருக்க வேண்டும். அப்படிப்பட்ட உணவுகளை சாப்பிட்டால் வயிறும் நிறையும், உடல் எடையும் குறையும்.
அதிகமாக சாப்பிடுவது மட்டும் உடல் எடை அதிகரிப்பதற்கான காரணமல்ல. ஆரோக்கியமில்லாத உணவுகளை சாப்பிடுவதும் தான் முக்கிய காரணம். பசி எடுக்கிறது என்று ஆரோக்கியத்தை மறந்து, பசியை மட்டும் நினைவில் கொண்டு சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்கத்தான் செய்யும். எனவே, ஆரோக்கியமான உணவுகளை தேர்ந்தெடுத்து சாப்பிட வேண்டியது உடல் ஆரோக்கியத்திற்கு மிக அவசியம்.
இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள முறைகளில் உணவுகளை சாப்பிட்டால் பசி குறைந்து, வயிறு நிறைந்த உணர்வைப் பெறலாம். மேலும் இந்த முறைகளில் உணவுகளை சாப்பிட்டால் உடல் பருமன் ஏறுவதையும் தடுக்கலாம், வயிறு நிறைய சாப்பிட்ட உணர்வையும் பெறலாம். வாருங்கள் இப்போது அந்த உணவு முறை குறிப்புகள் பற்றி பார்ப்போம்..
சாப்பிடும் முன் ஒரு ஆப்பிள்
ஆப்பிளில் குறைவாக கலோரி உள்ளது. எனவே, சாப்பிடுவதற்கு முன் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் குறைவான கலோரியே உடலுக்கு சேரும். இதேப்போல், கலோரி குறைவாக உள்ள சூப்பும் குடிக்கலாம்.

நட்ஸ் சாப்பிடுவது
நட்ஸில் புரதச்சத்து, நார்ச்சத்து மற்றும் கொழுப்புச்சத்து ஆகியவை உள்ளதால், அதை சாப்பிட்டால் வயிறு நிறைந்தே இருக்கும். இதனால், உடலுக்கு குறைவான கலோரியே சேரும். குறிப்பாக மதிய வேளையில் இதை சாப்பிடுங்கள்.
காய்கறிகள்
கேரட் அல்லது முட்டைக்கோஸ் போன்ற உணவுகள் சற்று முறுமுறுப்பாக இருக்கும். இவற்றை மென்று சாப்பிடுவதற்கு சற்று நேரம் ஆகும். இதனால், மூளைக்கு வேலை அதிகமாக கொடுக்கப்படும். எனவே, சாப்பிடும் அளவு தானாக குறைந்துவிடும்.
கலோரி இல்லாத ஜூஸ்
அதிகப்படியான தாகம் உங்களுக்கு பசியைத் தூண்டும். பொதுவாக நீங்கள் அதிகமாக தண்ணீர் குடிப்பீர்கள். அதற்கு பதிலாக க்ரீன் டீ அல்லது ஹெர்பல் டீ ஆகியவையும் குடிக்கலாம். இது வயிறு நிறைய வைப்பதற்கான மிகச் சிறந்த வழியாகும்.
பெரியத் தட்டுகள் உபயோகிப்பதை நிறுத்தவும்
உணவு உண்ணும்போது பெரியத் தட்டுக்களை உபயோகித்தால் அது நிறைய உணவு வைத்து சாப்பிட தோன்றும். அதுவே, சிறிய தட்டுக்களைப் பயன்படுத்தினால் சாப்பிடும் சாப்பாட்டின் அளவும் குறைந்துவிடும்.
மற்ற அனைத்தையும் சிறிதாகவே உபயோகியுங்கள்
நீங்கள் சாப்பிட அல்லது குடிக்க பயன்படுத்தும் பாத்திரங்கள், டம்ளர்கள் அனைத்தையும் சிறிய அளவில் பயன்படுத்துங்கள். சிறிய டம்ளரில் கலோரி நிறைந்த எந்த ஜூஸ் குடித்தாலும், அது அளவுக்கு அதிகமாக சாப்பிட்ட உணர்வை ஏற்படுத்தக்கூடும். இது எளிதில் உடல் பருமனைக் குறைக்க உதவியாக இருக்கும்.
நார்ச்சத்தின் மீது கவனம் செலுத்தவும்
நீர்ச்சத்துடன் நார்ச்சத்து நிறைந்த உணவை உண்ணுங்கள். இது விரைவில் வயிற்றை நிறையச் செய்த உணர்வைக் கொடுக்கும். அதுவும் தாவர வகை நார்ச்சத்துள்ள உணவுகளான காய்கறிகள், பழங்கள், பருப்பு வகைகள், முழு தானியங்கள், நட்ஸ், விதைகள், மூலிகைகள், மசாலாப் பொருட்களை உட்கொண்டால், பசி உணர்வு குறைந்து, உடல் பருமனும் குறையும்.
நடைப்பயிற்சி
சுத்தமான காற்றை சுவாசித்தால் உடலில் பல மாயங்கள் நிகழும். அதிலும் சுத்தமான காற்றை சுவாசித்தவாறு வேகமான நடைப்பயிற்சியை மேற்கொள்ளும் போது, தசைகளில் இரத்த ஓட்டம் அதிகரித்து, பசியுணர்வு குறையும்.
நறுக்கி வைக்கப்பட்ட காய்கறிகள்
வீட்டில் உள்ள ஃப்ரிட்ஜில் எப்போதும் காய்கறிகளை நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். பசி எடுக்கும் நேரங்களில், இந்த காய்கறிகளை சாலட் போன்று செய்து ஸ்நாக்ஸாக சாப்பிடுங்கள்.
உணவுக்கு முன் நீர் குடிக்கவும்
நீரைக் குடிக்கும் போது, வயிறு நிறைந்து அதிகமாக சாப்பிட முடியாமல் செய்யும். அதிலும் உணவு உண்பதற்கு முன் எலுமிச்சை சாறு கலந்த நீரைக் குடித்தால், வயிறு நிறைவதோடு உடலும் சுத்தமாகும்.
லெட்யூஸ் சாலட்
உணவு உண்பதற்கு முன் ஒரு பௌல் சாலட் சாப்பிடுங்கள். இதனால் இரத்த சர்க்கரை அளவு அதிகரித்து, பசியுணர்வு குறைந்து, அளவுக்கு அதிகமாக சாப்பிடுவதைத் தவிர்க்கலாம்.
உணவு உண்பதற்கு முன் ஒரு பௌல் சாலட் சாப்பிடுங்கள். இதனால் இரத்த சர்க்கரை அளவு அதிகரித்து, பசியுணர்வு குறைந்து, அளவுக்கு அதிகமாக சாப்பிடுவதைத் தவிர்க்கலாம்.
புரோட்டீன் உணவுகளுக்கு முக்கியத்துவம் கொடுங்கள். முக்கியமாக கார்போஹைட்ரேட் உணவுகளை உட்கொள்ளும் முன், புரோட்டீன் நிறைந்த வேக வைத்த சிக்கன் அல்லது மீன் சிறிது சாப்பிடுவதால், விரைவில் வயிறு நிறைந்துவிடும்.
உணவுக்கு முன் இவற்றை சாப்பிடவும்
எப்போதும் உணவு உண்பதற்கு முன் சூப், சாலட், பழங்கள் அல்லது காய்கறிகள் எதையாவது சிறிது சாப்பிடுங்கள். ஒருவேளை பசி எடுப்பது போல் இருக்கும் நேரங்களிலும் இவற்றை சாப்பிடலாம்.
பீன்ஸ் சாப்பிடவும்
பீன்ஸில் தாவர வகை புரோட்டீன் ஏராளமான அளவில் நிறைந்துள்ளது. இது இரத்த சர்க்கரை அளவை நிலையாக வைத்துக் கொள்ள உதவும் மற்றும் விரைவில் வயிறு நிறைந்த உணர்வையும் தரும்.
முழு தானியங்கள்
முழு தானியங்கள் சுத்திகரிக்கப்படாமல் இருப்பதால், அவற்றில் நன்மை விளைவிக்கும் சத்துக்களான நார்ச்சத்து, புரோட்டீன் மற்றும் கனிமச்சத்துக்கள் ஏராளமான அளவில் இருக்கும். இந்த சத்துக்கள் உடல் எடையை சீராக பராமரிக்க உதவுவதுடன், நீண்ட நேரம் பசி எடுக்காமலும் தடுக்கு
No comments:
Post a Comment